இவர் ரேஞ்சுக்கு ரோல்ஸ்-ராய்ஸ் காரில் மட்டும் போலாமே!! ரேஞ்ச் ரோவர் கார்களில் உலாவரும் தொழிலதிபர் மகன்!

இந்தியாவில் அம்பானி குடும்பத்தாருக்கு அறிமுகமே தேவையில்லை. கடந்த பல வருடங்களாகவே செல்வ, செழிப்பில் திளைத்துவரும் ஒரு குஜராத்திய குடும்பம். ஆனால், வசித்துவருவது மும்பையில். திருபாய் அம்பானியை தொடர்ந்து, அவரது 2வது மகன் முகேஷ் அம்பானி இந்தியாவின் மிக பெரும் தொழிலதிபர்களுள் ஒருவராக இருக்கிறார்.

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு கடந்த 2023இல்தான் திருமணம் முடிந்தது. ஆனந்த் அம்பானியிடம் சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார் இருப்பதை கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போதே பார்த்திருந்தோம். கோல்டன் நிறத்தில் பளபளக்கும் நிறத்திலான கல்லீனன் காரில் முன் இருக்கையில், இவர் கெத்தாக வந்து இறங்கும் வீடியோக்களும், படங்களும் அந்த சமயத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

anant ambani in range rovers

இந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை என்னமோ ரூ.6.95 கோடி தான். ஆனால், ஆர்டிஓ கட்டணம், இன்ஸ்சூரன்ஸ் எல்லாவற்றையும் சேர்த்தால் ரூ.8 கோடி வந்துவிடும். அதுமட்டுமின்றி, ரோல்ஸ்-ராய்ஸ் விற்பனை செய்யும் கல்லீனன் காரை அப்படியே ஆனந்த் மஹிந்திரா வாங்கி இருக்க மாட்டார்.

நிச்சயமாக கல்லீனனில் தனது விருப்பத்திற்கு ஏற்ப சில அம்சங்களை சேர்த்தும், நீக்கியும் மாற்றியமைத்து டெலிவிரி பெற்றிருப்பார். சவுகரியமாக 5 பயணிகள் இந்த காரில் அமர்ந்து பயணம் செய்யலாம். ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனனின் பிளாக்-பேட்ஜ் எடிசனும் தனி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனந்த் அம்பானியின் ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரின் கோல்டன் நிறத்திற்கு டஸ்கன் சன் மஞ்சள் என்று பெயர்.

anant ambani in range rovers

இந்த குறிப்பிட்ட பெயிண்ட்காக கூடுதலாக ரூ.1 கோடியை ஆனந்த் அம்பானி செலவு செய்ததாக கூறப்படுகிறது. இவரது கல்லீனன் காரை சேர்த்து முகேஷ் அம்பானி குடும்பத்தில் மொத்தம் 4 ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் உள்ளன. ஆனந்த் அம்பானியின் பாதுகாப்புக்கு எப்போதும் வெள்ளை நிறத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி எஸ்யூவி கார்கள் இருப்பது வழக்கம்.

இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் விலையுயர்ந்த கார்களுள் ஒன்று ஜி63 ஏஎம்ஜி ஆகும். இவ்வாறு லக்சரி கார்களுடன் புரளும் ஆனந்த் அம்பானியை சில சமயங்களில் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி கார்களிலும் காண முடிகிறது. கம்பீரத்துக்கு பெயர்போன ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி கார்கள் நம்மை பொறுத்தவரையில் விலையுயர்ந்தவை ஆக இருக்கலாம்.

anant ambani in range rovers

ஆனால், ஆனந்த் அம்பானி போன்றோருக்கு சிம்பிளான கார், ரேஞ்ச் ரோவர் ஆகும். ஆனந்த் அம்பானி பல்வேறு விதமான சொகுசு கார்களில் நிகழ்ச்சிகளுக்கு கடந்த காலங்களில் வந்துள்ளார். அரிதான லெக்ஸஸ் காரில் கூட ஒருமுறை காட்சி தந்துள்ளார். ஆனால், ரேஞ்ச் ரோவர் காரில் ஆனந்த் மஹிந்திராவை பார்த்ததே இல்லை. ஆனந்த் அம்பானியின் மூத்த சகோதரர் ஆகாஷ் அம்பானியிடமும் ரேஞ்ச் ரோவர் கார் உள்ளது.

லேண்ட் ரோவர் என்ற பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனத்தின் வாகனம் தான் ரேஞ்ச் ரோவர் ஆகும். இந்தியாவில் தற்சமயம் ரேஞ்ச் ரோவர், ரேஞ்ச் ரோவர் வேலர், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், ரேஞ்ச் ரோவர் எவோக் என 4 விதமான ரேஞ்ச் ரோவர் கார்கள் விற்பனையில் உள்ளன. ரேஞ்ச் ரோவர் கார்கள் மட்டுமின்றி, டிஸ்கவரி மற்றும் டிஃபெண்டர் கார்களையும் இந்தியாவில் லேண்ட் ரோவர் நிறுவனம் விற்பனை செய்கிறது.

anant ambani in range rovers

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரோல்ஸ்-ராய்ஸ் காரில் பயணிக்கும் ஒருவருக்கு ரேஞ்ச் ரோவர் கார் பிடித்து இருப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. ஏனெனில், ரேஞ்ச் ரோவர் கார்களில் சொகுசான பயணத்திற்கும் எந்த விதத்திலும் குறை இருந்தது இல்லை. ஆனால், ரேஞ்ச் ரோவர் கார்களின் மிக பெரிய பலமே அவற்றின் இயங்கும் திறன் மற்றும் வலிமையான செயல்படுதிறன் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 10, 2024, 10:23 [IST]
English summary
Anant ambani sometimes travelling in range rover suvs also check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X