உச்சகட்ட பாதுகாப்பு! பிரபல நடிகர் வீட்டிற்கு 10 கோடி ரூபாய் காரில் வந்தது அவரா! அடுத்த மாசம் ஒன்னு கூட போறாங்க
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani). இவரது மகன் ஆனந்த் அம்பானிக்கும் (Anant Ambani), ராதிகா மெர்ச்சென்ட்டிற்கும் (Radhika Merchant) வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கு இன்னும் மிக குறுகிய காலம் மட்டுமே உள்ள நிலையில், அம்பானி குடும்பத்தினர் பத்திரிக்கை வழங்கும் பணியில் தற்போது பரபரப்பாக இருக்கின்றனர். உறவினர்கள், திரைத்துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் உள்பட பல தரப்பினருக்கும் அம்பானி குடும்பத்தினரால், பத்திரிக்கை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விலை உயர்ந்த கார்கள் பலவற்றை அம்பானி குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இதில், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் (Rolls Royce Cullinan Black Badge) காரும் ஒன்றாகும். ஆனந்த் அம்பானி இந்த காரை பயன்படுத்தி வருகிறார். இந்த சூழலில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் (Ajay Devgn) வீட்டிற்கு பத்திரிக்கை வைக்க, ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரில் ஆனந்த் அம்பானி சென்று வந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவை (Viral Video) பலரும் ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர். ரெகுலர் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில் பொருத்தப்பட்டுள்ள அதே 6.75 லிட்டர் ட்வின் டர்போ வி12 இன்ஜின்தான், பிளாக் பேட்ஜ் வெர்ஷனிலும் பொருத்தப்பட்டுள்ளது.
ஆனால் ரெகுலர் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் உடன் ஒப்பிடும்போது, பிளாக் பேட்ஜ் வெர்ஷனில், இந்த இன்ஜின் அதிகபட்சமாக 29 பிஹெச்பி பவர் மற்றும் 50 என்எம் டார்க் திறனை அதிகமாக வெளிப்படுத்த கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இதன் பவர் அவுட்புட் 600 பிஹெச்பி மற்றும் 900 என்எம் ஆகும்.

இந்த இன்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் நாம் காணும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசனின் விலை 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்பானி குடும்பத்தினரிடம் இதனுடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக 9 ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்கள் இருப்பதாக தெரிகிறது. இதில், ஒரு சில ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்கள் வெளிநாட்டில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை தவிர மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, லம்போர்கினி மற்றும் ஃபெராரி போன்ற நிறுவனங்களின் கார்களும், அம்பானி குடும்பத்தினரிடம் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி ரக கார் என்ற பெருமையை கல்லினன் தன்வசம் வைத்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு காரின் பிளாக் பேட்ஜ் வெர்ஷனைதான், பிரபலங்களுக்கும், உறவினர்களுக்கும் பத்திரிக்கை வைப்பதற்கு ஆனந்த் அம்பானி தற்போது பயன்படுத்தி கொண்டுள்ளார்.
சௌகரியமான பயணம் கிடைக்கும் என்பதால், பத்திரிக்கை வைப்பதற்கு, ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் வெர்ஷனை ஆனந்த் அம்பானி தேர்வு செய்திருக்கலாம். அவர் பத்திரிக்கை வைக்க சென்ற அஜய் தேவ்கனும் ஒரு சமயத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வைத்திருந்தார். ஆனால் தற்போதும் அவரிடம் அந்த கார் இருக்கிறதா? இல்லையா? என்பது உறுதியாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








