பணம் கோடி கோடியாய் கொட்டி கிடந்தாலும் இது எல்லாம் டூ மச்! ரோல்ஸ்-ராய்ஸ் காரில் சென்றது அந்த தொழிலதிபரின் மகனா?

விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi) பண்டிகை இந்தியா முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல நாட்களுக்கு கொண்டாடப்படும் இந்து பண்டிகைகளுள் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று என்பதால், இன்னும் சில நாட்களுக்கு கொண்டாடப்படும். இந்தியாவை தாண்டி வெளிநாடுகளில் வசிக்கும் இந்து மக்களும் விநாயகர் சதுர்த்தியை குடும்பத்துடன் கொண்டாடி வருவதை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.

குறிப்பாக, வட இந்தியாவில் பிரம்மாண்டமாகவும், பல நாட்களுக்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம். அத்தகைய நேரங்களில் வட இந்தியாவில் மிக பிரபலமாக இருக்கும் அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்களை சர்வ சாதாரணமாக அருகில் உள்ள விநாயகர் கோவில்களை காண முடியும். அந்த வகையில், இந்தியாவின் மிக பெரும் தொழிலதிபராக விளங்கும் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரும் வெகு விமர்சையாக விநாயகர் சதுர்த்தியை மும்பையில் கொண்டாடி உள்ளனர்.

anant ambani spotted in rolls-royce

இந்த முறை விநாயகர் கோவிலுக்கு செல்லாமல், விநாயகரையே தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஏற்கனவே முகேஷ் அம்பானி குடும்பத்தாரின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மாலை வேளைக்கு பிறகு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்ட விநாயகர் சிலை நேரடியாக முகேஷ் அம்பானியின் வீட்டிற்கே கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

'அந்திலியா' (Antilia) என அழைக்கப்படும் முகேஷ் அம்பானியின் பிரம்மாண்டமான அடுக்குமாடி வீட்டிற்கு விலையுயர்ந்த கார்கள் மற்றும் பைக்குகள் சூழ சிறிய ரக லாரி ஒன்றில் வைத்து விநாயகர் சிலை கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இதுதொடர்பான விபரங்கள் 'சிஎஸ் 12 விலாக்ஸ்' (CS 12 VLOGS) என்கிற யூடியூப் (Youtube) சேனலில் வெளியிடப்பட்டு உள்ளது.

anant ambani spotted in rolls-royce

அதன்படி பார்க்கும்போது, முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட விநாயகர் சிலைக்கு கூட லக்சரி வாகனங்களில் பலக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் எல்லாவற்றிற்கும் முன்பாக, முகேஷ் அம்பானி குடும்பத்தாரின் பாதுகாப்பு வாகனங்களாக பயன்படுத்தப்படும் வெள்ளை நிறத்திலான எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster) மற்றும் கருப்பு நிறத்திலான டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார்கள் சென்றன.

நெட்வொர்க் ஜாமர் (Network Jammer) உடன் இருந்த இந்த பாதுகாப்பு கார்களில் இருந்தவர்கள் சாலையில் அவர்களுக்கு முன்னால் சென்றுக் கொண்டிருந்த வாகன ஓட்டிகளை எச்சரித்தப்படி செல்ல, அவர்களுக்கு பின்னால், நிறைய இந்து பக்தர்கள் காவி நிற உடையில் இரு சக்கர வாகனங்களில் படை சூழ பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

anant ambani spotted in rolls-royce

இவர்களுக்கு பின்னால், மீண்டும் ஒரு பாதுகாப்பு வாகனமாக விலையுயர்ந்த மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 (Mercedes-AMG G63) கார் சென்றது. இந்த மெர்சிடிஸ் காரில் ஏகப்பட்ட பாதுகாப்பு வீரர்கள் அமர்ந்திருந்தனர். இந்த விலையுயர்ந்த மெர்சிடிஸ் காரை பின்தொடர்ந்து கருப்பு நிற மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N) கார் செல்ல, அதற்கு பின்னால்தான் சிறிய லாரியில் விநாயகர் சிலை தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த இந்த லாரி போன்றதான வேனுக்குள் நிறைய பூசாரிகள் அமர்ந்திருந்தனர். இதனை தொடர்ந்து, கவர்ச்சிகரமான ஆரஞ்சு நிறத்தில் ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் பிளாக் பேட்ஜ் (Rolls-Royce Cullinan Black Badge) கார் செல்ல, அதனினுள் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி பின் இருக்கையில் அமர்ந்தப்படி சென்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த காலங்களில் குடும்பமாக அருகில் இருந்த விநாயகர் கோவில்களுக்கு சென்று வழிப்பட்ட நிலையில், இந்த முறை நேரடியாக கடவுளையே தங்களது சொகுசு பங்களாவுக்கு தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளனர். தனது வீட்டிற்கு வரும் விநாயகரை ரோல்ஸ்-ராய்ஸ் காரில் பின் இருக்கையில் அமர்ந்தப்படி ஊர்வலம் முழுக்க பார்த்தப்படி செல்லும் பாக்கியம் ஆனந்த் அம்பானிக்கு கிடைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 27, 2025, 23:59 [IST]
English summary
Anant ambani spotted in rolls royce cullinan while welcoming lord ganesha
மேலும்... #ganesh chaturthi #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X