இதுதான் அம்பானி குடும்பம் போன வாரம் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரா! சாருக்கு இப்பவே கல்யாண கலை வந்திருச்சே!

சொகுசு மற்றும் ஆடம்பர கார்களை வைத்திருப்பதில் அம்பானி குடும்பத்தினரை அடித்துக்கொள்ள ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஆளே இல்லை என கூறலாம். அந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையில் அவர்களிடத்தில் விலை உயர்ந்த கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்த குடும்பத்தினரிடத்தில் 200-க்கும் அதிகமான லக்சூரி கார்கள் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. மேலும், கார்களை நிறுத்துவதற்கு என்றே மும்பை அன்டிலியா இல்லத்தில் தனி தங்களே இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே புதியதாக மேலும் ஓர் சொகுசு காரை கடந்த வாரத்தில் தங்களின் கார் கலெக்சனில் இணைத்தது அம்பானி குடும்பம்.

அவர்கள் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி (Rolls Royce Cullinan SUV) ரக காரையே இந்த முறை வாங்கி இருக்கின்றனர். இது அவர்கள் வாங்கும் ஒன்பதாவது கல்லினன் எஸ்யூவி கார் மாடல் ஆகும். ஆமாங்க, ஏற்கனவே 8 ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி-க்கள் பயன்பாட்டில் இருக்கின்ற சூழலில், மீண்டும் அதே கார் மாடலையே தற்போதும் அம்பானி குடும்பத்தினர் வாங்கி இருக்கின்றனர்.

Ambanis 9th rolls royce cullinan

தற்போது வாங்கப்பட்டு இருப்பது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் (Cullinan Black Badge) ஆகும். இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 10 கோடிக்கும் அதிகம் ஆகும். இந்த காரிலேயே தற்போது அம்பானி குடும்பத்தினர் வலம் வர தொடங்கி இருக்கின்றனர்.

சமீபத்தில் தன்னுடைய திருமணத்திற்கு பிரபல நடிகர் அக்ஷய் குமாரை அழைக்க ஆனந்த் அம்பானி இந்த காரிலேயே சென்றிருந்தார். பாதுகாப்பு வீரர்களின் படைசூழ இந்த காரில் அவர் நடிகர் வீட்டிற்கு சென்ற வீடியோ இணையத்தில் இப்போதும் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இந்த வீடியோவில் 9ஆவதாகத வாங்கப்பட்ட கல்லினன் காரின் சரியான நிறத்தை அறியமுடியவில்லை.

ஆனால், தற்போது வெளியாகி இருக்கும் காட்சிகள் அந்த கார் பெப்பிள் பாரடிசோ எனப்படும் அரிய வண்ணத்தால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதை வெளிக்காட்டுகின்றது. இந்த நிறத்திற்கு மட்டுமே பல லட்ச ரூபாய் வரை அவர்கள் வாரி இறைத்திருப்பார்கள் என யூகிக்க முடிகின்றது. இந்த காரில் கைகளால் வரையப்பட்ட கோல்டன் கோச் வரிகளையும் நம்மால் காண முடிகின்றது.

இதேபோல், அம்பானி குடும்பத்தினர் இந்த காரின் சிறப்பு சொகுசு வசதிகளிலும் தனிப் பயனாக்கம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆகையால், ஏற்கனவே சொகுசு கப்பலைப் போல இருக்கும் அந்த கார் தற்போது சொல்ல முடியாத அளவிற்கு அரிய வசதிகளைத் தாங்கிய காராக மாறி இருக்கின்றது.

காரின் வெளிப்புறத்தைப் போலவே உட்புறத்தையும் தனித்துவமான நிறத்தால் அலங்கரிக்கச் செய்திருக்கின்றனர். அந்தவகையில், கண்கவரும் நீல நிறத்தை அவர்கள் அதில் பயன்படுத்தி இருக்கின்றனர். இதுதவிர, அதிக சொகுசான அனுபவத்தை வழங்கக் கூடிய ஹெட்ரெஸ்ட்கள், இருக்கைகள் மற்றும் பல அம்சங்களை அவர்கள் புதிய கல்லினன் பிளாக் பேட்ஜ் காரில் சேர்த்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்த காரின் "ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸி" உட்பட பல்வேறு முக்கிய பாகங்கள் பிரத்யேக கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரில் 6.75 லிட்டர், ட்வின் டர்போ வி12 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 600 பிஎச்பி மற்றும் 900 என்எம் டார்க் ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்டது. இது வழக்கமான கல்லினன் கார் மாடலைக் காட்டிலும் 29 பிஎச்பி மற்றும் 50 என்எம் டார்க் அதிகம். தானியங்கி டிரான்ஸ்மிஷனே இந்த காரில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாகவே நான்கு சக்கரங்களுக்கும் இயங்கு சக்தி கடத்தப்படுகின்றது.

இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை முதன்முதலில் வாங்கியவர்கள் அம்பானி குடும்பத்தினரே ஆவர். 2019 லேயே இந்த காரை ரோல்ஸ் ராய்ஸ் முதலில் அறிமுகப்படுத்தியது. இது அறிமுகம் செய்யப்பட்ட விரைவிலேயே இந்த காரை அம்பானி குடும்பத்தினர் வாங்கினர். இந்த கார் சந்தையில் பல்வேறு விதமான பதிப்புகளிலும், வண்ண தேர்வுகளிலும் விற்பனைக்கு கிடைக்கின்றது. இதில் பல பதிப்புகளை இந்த குடும்பத்தினர் தற்போது வைத்திருக்கின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அம்பானி குடும்பத்தினர் அனைவரும் மிகப் பெரிய சொகுசு கார் விரும்பிகளாக உள்ளனர். இதனால்தான் அவர்கள் வாரம் ஒன்றிற்கு அல்லது மாதத்திற்கு ஒன்று என்று சொகுசு கார்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால்தான் வாகன உலகிலும் இவர்கள் அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Friday, June 28, 2024, 5:00 [IST]
English summary
Anant ambani spotted with rolls royce cullinan black badge worth over rs 10 crore
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+