அனாதை போல் நிற்கும் அம்பானி வீட்டு திருமண கார்கள்... பாதிக்கு மேல் வாடகை கார் தான்!! பட்ஜெட் போட்டு திருமணம்!
இடியுடன் கனமழை பெய்து முடித்தது போல, ஒருவழியாக ஆனந்த் அம்பானியின் திருமணம் படுவிமர்சையாக நடந்து முடிந்தது. உலகின் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சண்ட்டிற்கும் கடந்த ஜூலை 12ஆம் தேதி மும்பையில் திருமணம் நடந்தது. அவர்களது முறைப்படி ஜூலை 12இல் இருந்து 14ஆம் தேதி வரையில் 3 நாட்களுக்கு திருமணம் நடந்தது. ஆனந்த் அம்பானியின் திருமணத்தால் தலைக்கீழாக திருப்பி போட்டது போல் திக்குமுக்காடி போன மும்பை தற்போதுதான் மெல்ல மெல்ல தனது இயல்புக்கு திரும்பி வருகிறது.
இந்த நிலையில், ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் விருந்தினர்களுக்காக பயன்படுத்தப்பட்ட சொகுசு கார்கள் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்காக முகேஷ் அம்பானி ஏறக்குறைய ரூ.5,000 கோடியை செலவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் இருந்து இந்த திருமணம் எந்த அளவிற்கு பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது என்பதை அறியலாம். உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தொழிலதிபர்களும், விவிஐபி-களும் இந்த திருமணத்தில் கலந்துக் கொண்டனர். விருந்தினர்களை அழைத்து வருவதற்காகவே சுமார் 100 விமானங்களை முகேஷ் அம்பானி வாடகைக்கு எடுத்துள்ளார் என்றால் இந்த திருமணத்திற்கு பணம் எந்த அளவிற்கு தண்ணி போல் செலவிடப்பட்டுள்ளது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.
விமானங்களையே வாடகைக்கு எடுத்தவருக்கு லக்சரி கார்களை வாங்குவது மட்டும் என்ன பெரிய விஷயமாகவா இருக்க போகிறது. திருமணத்தில் கலந்துக் கொண்ட விருந்தினர்களுக்கான லக்சரி கார்கள் தொடர்பான வீடியோ ஒன்று ஜன்ஹவி என்பவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 'அம்பானியின் செல்வாக்கு' என்கிற கேப்ஷன் உடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், திருமணம் நடைபெறும் பகுதிக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லக்சரி கார்கள் காட்டப்பட்டுள்ளன.

இந்த வீடியோவை காட்சிப்படுத்தியவர் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு சென்றவர் கிடையாது. ஏனெனில், சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த கார்களை அந்த சாலையில் சென்ற அனைவராலும் பார்க்க முடிந்தது. இந்த வீடியோவில் காட்சித்தரும் சொகுசு கார்களில் பெரும்பாலானவை வாடகைக்கு எடுக்கப்பட்டவை ஆகும். இதற்கு சாட்சியாக, இந்த வீடியோவில் சில கார்களில் மஞ்சள் நிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு உள்ளதை காணலாம்.
அதாவது, திருமணத்திற்கு வந்த விருந்தினர்களின் போக்குவரத்துக்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட இந்த லக்சரி கார்கள் திருமணம் முடிந்துவிட்டதால், இந்நேரம் திருப்பி கொண்டுவிடப்பட்டு இருக்கும். இந்த வீடியோவில், பிஎம்டபிள்யூ எக்ஸ்5, மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ், ஏ-கிளாஸ், ஆடி க்யூ7, பிஎம்டபிள்யூ 7-சீரிஸ், ரேஞ்ச் ரோவர்கள், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ், டொயோட்டா லேண்ட் க்ரூஸர், டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் உள்ளிட்ட கார்கள் காட்சி தருகின்றன.

சில விருந்தினர்களின் போக்குவரத்துக்கு, முகேஷ் அம்பானியின் சொந்த கேரேஜில் இருந்து லக்சரி கார்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால்தான் வீடியோவில் சில கார்கள் வெள்ளை நிற நம்பர் பிளேட் உடன் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திருமணத்தில் கலந்துக் கொண்ட விவிஐபிகள் தங்களது சொந்த காரில் வந்ததால், அவர்களுக்கு முகேஷ் அம்பானியின் வாடகை கார்கள் தேவைப்படவில்லை.
ஆனால், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திருமணத்திற்கு வந்தவர்கள் மும்பைக்கு வந்த பின் டாக்ஸி புக் செய்ய வேண்டிய தேவை இல்லாமல், முகேஷ் அம்பானியின் குடும்பமே அவர்களுக்கு லக்சரி கார்களை விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தது. இந்த வகையில், மும்பை தனி விமான நிலையத்திற்கு வந்த நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் தம்பதி ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரில் பிக்-அப் செய்யப்பட்டதை நமது செய்தித்தளத்தில் கூட பார்த்திருந்தோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மழை நின்றாலும் தூரல் நிற்காது என்பது போல, ஆனந்த் அம்பானியின் திருமணம் முடிந்த போதிலும் திருமணத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் தொடர்ந்து வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. முகேஷ் அம்பானியிடம் ஆயிரக்கணக்கிலான சொகுசு கார்கள் உள்ளன. இருப்பினும், வாடகைக்கு சொகுசு கார்களை பெற்றுள்ளார் என்றால், எத்தனை விருந்தினர்கள் திருமணத்தில் கலந்துக் கொண்டனர் என்று யோசித்து பாருங்கள்.


Click it and Unblock the Notifications









