எந்த பக்கம் திரும்புனாலும் ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் தான்... அம்பானி வீட்டு திருமணத்தை உலகமே உற்று பார்க்குது!!

மொத்த பாலிவுட்டும் முகேஷ் அம்பானியின் வீட்டில் உள்ளது என சொல்லும் அளவிற்கு பாலிவுட் ஸ்டார்கள் அனைவரும் ஆனந்த் அம்பானியின் இல்ல திருமணத்தில் கலந்துக் கொண்டுள்ளனர். நமது தென்னிந்திய நடிகர், நடிகைகளும் கலந்துக் கொண்டுள்ளனர் என்றாலும், திருமணம் மும்பையில் நடைபெறுவதால், பாலிவுட் நட்சத்திரங்கள் புகைப்படங்களிலும், வீடியோக்களிலும் இன்னும் ஹைலைட்டாக காட்டப்படுகின்றனர். இதனால், பாலிவுட் சினிமாக்காரர்களை போட்டோகிராபர்கள் எந்த அளவிற்கு வளைத்து, வளைத்து போட்டோ எடுக்கிறார்களோ அதே அளவிற்கு அவர்கள் வருகை தரும் வாகனங்களையும் படம் பிடிக்கிறார்கள். இந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரை பலா பழத்தில் ஈ மொய்ப்பது போல் பார்வையாளர்கள் மொய்க்க துவங்கிவிட்டனர்.

அம்பானி வீட்டு திருமணம் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடைபெறுவதை பற்றி கூற வேண்டியது இல்லை. செய்தி, சமூக வலைத்தளம் என எதை திறந்தாலும் ஆனந்த் அம்பானியின் திருமணம் குறித்த பேச்சாகவே உள்ளது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் நடக்கும் திருமணம் இந்த அளவிற்கு கூட வெளியில் தெரியவில்லை என்றால் எப்படி.... இந்த திருமணத்திற்கு உலகளவில் இருந்து பிரபலங்கள் பலர் வருகை தந்துள்ளனர்.

priyanka chopra in rolls-royce cullinan

அவர்களை அழைத்து வருவதற்காக 100 விமானங்களை முகேஷ் அம்பானி வாடகைக்கு எடுத்துள்ளார். அதேபோல், விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு விருந்தினர்களை அழைத்து வருவதற்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான லக்சரி கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனஸ் விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் காரில் அழைத்துவரப்பட்டு உள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில், மும்பையின் பிரைவேட் விமான நிலையத்தில் லேண்டிங் ஆன பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் வந்த விமானத்தையும், அதன்பின் அவர்கள் விமான நிலையத்திற்கு வெளியே தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரோல்ஸ்-ராய்ஸ் காரில் ஜியோ உலக கூட்டமைப்பு மையத்திற்கு அழைத்து செல்லப்படுவதையும் காணலாம்.

priyanka chopra in rolls-royce cullinan

பிரம்மாண்ட ஜியோ உலக கூட்டமைப்பு மையத்தில் தான் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நடிகை பிரியங்கா சோப்ரா அங்கிருந்த ரசிகர்களை நோக்கி கையசைத்த பின் ரோல்ஸ்-ராய்ஸ் காரில் கணவருடன் ஏறி சென்றார். காருடன் சேர்த்து, விருந்தினர்களின் பாதுகாப்புக்காக பாதுகாவலர்களும் விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தனர்.

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லீனன் கார் அழகான போஹேமியன் சிவப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்த வீடியோவில், பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதி சென்ற ரோல்ஸ்-ராய்ஸ் காருக்கு பின்னால், ஆடி க்யூ7 என்கிற மற்றொரு லக்சரி கார் நிற்பதை காணலாம். இது அரபு நாட்டை சேர்ந்த ஒரு தொழிலதிபரை விமான நிலையத்தில் இருந்து பிக்-அப் செய்ய வந்திருந்தது.

priyanka chopra in rolls-royce cullinan

அம்பானி குடும்பத்தில் 15க்கும் மேற்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் உள்ளன. அவற்றுள், ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார்கள் மட்டும் 9க்கும் அதிகமாக உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது பிரிட்டிஷ் லக்சரி கார் நிறுவனமான ரோல்ஸ்-ராய்ஸின் தயாரிப்புகளை அம்பானி குடும்பத்தினர் அந்த அளவிற்கு வெகுவாக விரும்புகின்றனர்.

முகேஷ் அம்பானி குடும்பத்தில் உள்ள 9 கல்லீனன் கார்களும் ஒன்றுக்கு ஒன்று தோற்றத்தில் வேறுப்படுகின்றன. தற்போது, நடிகை பிரியங்கா சோப்ராவை அழைத்துவர அனுப்பப்பட்டுள்ள கல்லீனன் காரின் உட்பக்க கேபின் ஆனது டேன் கலரில் உள்ளது. இவ்வாறு வெளியூர்களில் இருந்து திருமணத்திற்கு வருபவர்கள் ரோல்ஸ்-ராய்ஸ், ஆடி போன்ற விலையுயர்ந்த கார்களில் அழைத்துவரப்படும் நிலையில், மும்பையில் வசிப்பவர்கள் தங்களது கெத்தை காட்டிக் கொள்ள பிரம்மிக்க வைக்கும் ஆடைகளிலும், விலையுயர்ந்த வாகனங்களிலும் வருகை தந்துள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தங்களது சொந்த பயன்பாட்டிற்காக உள்ள ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார்களை தான் அம்பானி குடும்பம் திருமணத்திற்கு இவ்வாறு விருந்தினர்களை அழைத்துவர பயன்படுத்தி உள்ளார்களா? என கேட்டால், வாய்ப்பில்லை என்பதுதான் பதில். ஏனெனில், 100 விமானங்களை வாடகைக்கு எடுத்தவர்களுக்கு ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை வாடகைக்கு எடுப்பது ஒன்றும் பெரிய விஷயமாக இருக்காது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 13, 2024, 13:03 [IST]
English summary
Anant ambani wedding priyanka chopra arrives in rolls royce cullinan
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X