அம்பானியின் ஹேப்பி விடைபெற்றது! பென்ஸ் காருல ஜாலியா வலம் வந்தது இப்ப இல்ல! மொத்த பேரும் சோகத்துல மூழ்கிட்டாங்க
இந்தியாவின் பெரும் பணக்காரக் குடும்பமாக அம்பானி குடும்பம் உள்ளது. இவர்களின் குடும்பத்தில் ஓர் அங்கமாக இருந்து வந்த 'ஹேப்பி' இப்போது இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹேப்பி என்பது அவர்கள் வீட்டின் செல்லப்பிராணி நாய் ஆகும். அம்பானி குடும்பத்தில் ஒருவராகவே இந்த நாய் வலம் வந்துக் கொண்டிருந்தது என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய நாயே இப்போது அவர்களை விட்டு மறைந்து போயிருக்கின்றது. இந்த இழப்பு அம்பானி குடும்பத்தினரை பெருத்த சோகத்தில் ஆழ்த்தி இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ஓர் நாயாக இருந்தாலும் அதை தங்களின் குடும்பத்தில் ஒருவராகவே அம்பானி குடும்பம் பார்த்து வந்தது. ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் கூட அது பிரத்யேக உடை அலங்காரத்துடன் வலம் வந்துக் கொண்டிருந்தது. அதுமட்டுமல்ல அது பயணிப்பதற்கு என தனி ஒரு ஆடம்பர காரை அவர்கள் ஒதுக்கி இருந்தனர்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி400 டி (Mercedes Benz G400d) சொகுசு எஸ்யூவி (luxury SUV) காரையே ஹேப்பி'யின் பயணத்திற்காக அவர்கள் ஒதுக்கி இருந்தனர். ஆகையால், இந்தியாவில் இந்த காரை வைத்திருந்த முதல் நாயாக ஹேப்பியே பார்க்கப்படுகின்றது. பென்ஸ் ஜி400டி மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே 2.55 கோடி ரூபாக்கும் அதிகம் என்பது கவனிக்கத்தகுந்தது.
இத்தகைய சொகுசான காரை இந்தியாவில் பயன்படுத்தி வந்த ஹேப்பி, அம்பானி குடும்பத்தினரை விட்டு பிரிந்து சென்றிருக்கின்றது. இது அம்பானி குடும்பத்தினரை மட்டுமல்ல மொத்த செல்லப் பிராணி காதலர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. பலரின் கனவு காராக இருக்கும் ஓர் கார் மாடலே மெர்சிடிஸ் பென்ஸ் ஜி400 டி ஆகும்.

இந்த காரை ஹேப்பியின் தேவைக்கு ஏற்ப சில கஸ்டமைசேஷனுக்கு அவர்கள் உட்படுத்தி இருந்ததாகக் கூறப்படுகின்றது. மேலும், அதன் பயணத்திற்கு அதிக அளவில் இந்த காரே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றனர். எனவே இந்த காரும் ஹேப்பியை மிகப் பெரிய மிஸ் பண்ணும் என நம்பப்படுகின்றது. இந்த காரை மட்டுமல்ல ஹேப்பியின் பயணத்திற்காக கடந்த நாட்களில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) மற்றும் டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) போன்ற கார்களும் பயன்படுத்தப்பட்டன என்பது கவனிக்கத்தகுந்தது.
இவையும் மிகவும் காஸ்ட்லியான கார்களே ஆகும். குறிப்பாக, டொயோட்டா ஃபார்ச்சூனர் இந்தியாவில் ரூ. 50 லட்சம் என்கிற விலையிலும், வெல்ஃபையர் ரூ. 1.5 கோடி என்கிற விலையிலும் விற்கப்படுகின்றது. இதை வைத்து பார்க்கையில் ஹேப்பி பயன்படுத்தியதிலேயே விலை குறைவான கார் மாடலாக 50 லட்சம் ரூபாய் மதிப்புக் கொண்ட ஃபார்ச்சூனரே இருக்கின்றது.

இதன் வாயிலாக அம்பானி குடும்பத்தினர் மட்டுமல்ல அம்பானி வீட்டில் உள்ள செல்லப் பிராணிகள் பயணிப்பதற்கும் மிகவும் காஸ்ட்லியான கார்களே பயன்படுத்தப்படுகின்றன என்பது தெரிய வந்திருக்கின்றது. அதேபோல், அம்பானியின் கான்வாயில் செக்யூரிட்டி தேவைக்காகவும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் போன்ற சொகுசு கார்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அம்பானி குடும்பத்தினரிடத்தில் இல்லாத ஆடம்பர காரே இருக்க முடியாது என கூறலாம். அந்த அளவிற்கு உலகின் முன்னணி பிராண்டுகளின் ஆடம்பர கார்களை தனக்குச் சொந்தமாக குவித்து வைத்திருக்கின்றது அம்பானி குடும்பம். இதேபோல், ஆடம்பர வசதிக் கொண்ட தனிநபர் பயன்பாட்டு விமானம், ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றையும் இந்த குடும்பத்தினர் தங்களுக்கு சொந்தமாக வைத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications









