நடிகைக்கு லம்போர்கினி கார் வாங்கி கொடுத்தது இவர்தானா? ரோட்டில் எல்லோரும் பார்க்க உண்மை வெளிச்சத்துக்கு வந்தது!

ஜான்வி கபூர் (Janhvi Kapoor), மறைந்த பிரபல இந்திய நடிகை ஸ்ரீதேவி (Actress Sridevi) மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் (Boney Kapoor) தம்பதியின் மூத்த மகளான ஜான்வி கபூர், சினிமா (Cinema) திரைக்குள் எப்படியாவது நுழைய போராடி வருகிறார். தந்தை மிக பெரும் தயாரிப்பாளராக இருப்பினும் ஜான்வி கபூருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதன் காரணமாகவே, தெலுங்கு சினிமாவிற்கு வந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் (Junior NTR) உடன் 'தேவாரா' (Devara) திரைப்படத்தில் நடித்தார்.

அடுத்ததாகவும் தெலுங்கு நடிகர் ராம் சரண் உடன் 'பீடி' (Beedi) என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் பட வாய்ப்புகள் அதிகமாக வரவில்லை என்றாலும், நடிகை ஜான்வி கபூருக்கு பாலிவுட் சினிமா துறையை சேர்ந்த நிறைய நடிகர், நடிகைகள் நண்பர்களாக உள்ளனர்.

ananya birla gifted lamborghini huracan

தாய், தந்தை என இருவருமே சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்பதால், சிறு வயது முதலே ஜான்வி கபூருக்கு பல பாலிவுட் ஸ்டார்கள் நெருக்கமானவர்களாக உள்ளனர். பாலிவுட் சினிமா துறையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, மும்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பெரும் செல்வந்தர்களும், அவர்களது மகன்/ மகள்களும் கூட ஜான்வி கபூருக்கு நண்பர்களாக உள்ளனர்.

அந்த வகையில் பிரபல பிர்லா (Birla) குடும்பத்தை சேர்ந்த அனன்யா பிர்லா நடிகை ஜான்வி கபூரின் நெருங்கிய தோழி ஆவார். ஆதித்யா பிர்லா க்ரூப் (Aditya Birla Group)ஐ உருவாக்கிய ஆதித்யா விக்ரம் பிர்லாவின் பேத்தி தான் இந்த அனன்யா பிர்லா ஆவார். குடும்பத்தின் நிறுவனங்களுள் சிலவற்றை இவர் கவனித்துக் கொள்கிறார்.

அதேநேரம், பாடல்கள் பாடுவது, பாடல்களை எழுதிக் கொடுப்பது என சினிமா துறையிலும் அனன்யா பிர்லா தனது சேவையை வழங்கி வருகிறார். இதன் மூலமாகவே, அனன்யா பிர்லா மற்றும் ஜான்வி கபூர் இடையே நெருக்கம் ஏற்பட்டது. நாளுக்கு நாள் நெருக்கமாகி கொண்டே வரும் இந்த நட்பு தற்போது விலையுயர்ந்த கார்களை ஒருவருக்கு ஒருவர் பரிசளித்துக் கொள்ளும் அளவிற்கு ஆழமாக சென்றுவிட்டது.

அந்த வகையில், அனன்யா பிர்லா அவரது தோழி ஜான்வி கபூருக்கு விலையுயர்ந்த லம்போர்கினி (Lamborghini) காரை பரிசாக வழங்கி ஆச்சிரியப்படுத்தி உள்ளார். ஆனால், இவ்வாறு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளதை ஜான்வி கபூரும் சரி, அனன்யா பிர்லாவும் சரி இதுவரையில் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், ஜான்வி கபூருக்கு அனன்யா பிர்லா சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டு இருப்பது உறுதி.

ஏனெனில், இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில், ஊதா நிறத்திலான லம்போர்கினி கார் ஒன்றை சிலர் நடிகை ஜான்வி கபூரின் வீட்டிற்கு கொண்டுவரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவில் காட்சி தருவது, லம்போர்கினி நிறுவனத்தின் ஹூராகென் எவோ ஸ்பைடர் (Huracan Evo Spyder) கார் ஆகும்.

2 இருக்கைகளை மட்டுமே கொண்ட இந்த லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் காரின் முன் இருக்கைகளில் ஒன்றில் டிரைவர் அமர்ந்திருக்க, மற்றொரு இருக்கையில் ஆள் உயர நீளத்திற்கு ஒரு பரிசு பெட்டி இருப்பதை வீடியோவில் காணலாம். அதில், "அன்புடன், அனன்யா பிர்லா" என குறிப்பிடப்பட்டு இருப்பதையும் காணலாம்.

லம்போர்கினி ஹூராகென் எவோ ஸ்பைடர் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் இந்த விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் ரியர்-வீல்-டிரைவ் (RWD) மற்றும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.3.54 கோடி மற்றும் ரூ.4.10 கோடி ஆகும். இந்த லம்போர்கினி கார் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் விலையாக மேலே குறிப்பிடப்பட்டு இருப்பவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் 1 கோடி ரூபாய் அளவிற்கு அதிகமாக வரும். இத்தகைய விலையுயர்ந்த லம்போர்கினி காரை வாங்குவது என்பதே நம்மில் பலருக்கு கனவாக இருக்கும் நிலையில், இதனை ஒருவர் பரிசாக வழங்கியுள்ளார் என்றால் அவரது சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்...

More from DriveSpark

Article Published On: Friday, April 11, 2025, 22:48 [IST]
English summary
Ananya birla gifted lamborghini huracan evo spyder to actress janhvi kapoor
மேலும்... #celebrity cars #car gift #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+