அம்பானி முன்னாடி கால் மேல கால் போட்டு உக்காந்து பேசற குடும்பத்தின் வாரிசு! பழைய கார்ல வந்ததால் ஷாக் ஆன மக்கள்!
இந்தியாவில் தொழில் அதிபர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் பலரும் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை அவர்கள் பயன்படுத்துவதை நாம் பார்க்கலாம். சந்தையில் சொகுசு கார்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டால், அவற்றை அவர்கள் உடனடியாக வாங்கி விடுகின்றனர்.
எனவே பொது இடங்களில் ஒவ்வொரு முறையும், வெவ்வேறு சொகுசு கார்களில் அவர்களை காண முடியும். ஆனால் இந்தியாவின் மிக பிரபலமான தொழில் அதிபர் ஒருவரின் மகள், மிகவும் பழைய காரை பயன்படுத்திய வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட மினி கூப்பர் கேப்ரியோ (MINI Cooper Cabrio) ஆகும். தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் இந்த காரின் பதிவு எண் தெளிவாக தெரிகிறது. அதை வைத்து தேடியதில், இது கடந்த 2012ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது என்பது தெரிய வந்தது.
அதாவது சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கார் வாங்கப்பட்டுள்ளது. இத்தனை வருடங்கள் பழைய காரை பயன்படுத்தியவர் அனன்யா பிர்லா (Ananya Birla) ஆவார். இவர் செல்வாக்கு மிக்க தொழில் அதிபர்களில் ஒருவரான குமார் மங்கலம் பிர்லாவின் (Kumar Mangalam Birla) மகள் ஆவார்.

குமார் மங்கலம் பிர்லா மற்றும் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு (Net Worth) சுமாராக 2.50 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு சொத்து மதிப்பு கொண்ட குடும்பத்தின் வாரிசான அனன்யா பிர்லா, 13 வருடங்கள் பழைய காரை பயன்படுத்தியதை நெட்டிசன்கள் ஆச்சரியமாக பேசி வருகின்றனர்.
இந்த காரில் பொருத்தப்பட்டிருப்பது 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். விமான நிலையம் ஒன்றுக்கு அவர் வந்தபோதுதான் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இது 13 வருடங்கள் பழைய கார் என்றாலும் கூட, கடந்த காலங்களில் பல்வேறு சொகுசு மற்றும் செயல்திறன் மிக்க கார்களில், அனன்யா பிர்லாவை பார்க்க முடிந்துள்ளது.
இதன்படி போர்ஷே 718 பாக்ஸ்டர் ஸ்பைடர் (Porsche 718 Boxster Spyder), ஃபோர்ஷே கேயென்னே (Porsche Cayenne), மெர்சிடிஸ் மேபெக் எஸ்560 (Mercedes Maybach S560) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்கே (Mercedes Benz SLK) போன்ற விலை உயர்ந்த கார்களில் எல்லாம் அனன்யா பிர்லாவை பார்க்க முடிந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அனன்யா பிர்லா சொகுசு கார்களை பயன்படுத்துபவர் மட்டுமல்ல. சொகுசு கார்களை மற்றவர்களுக்கு பரிசாகவும் வழங்க கூடியவர். தனது நெருங்கிய தோழியும், நடிகையுமான ஜான்வி கபூருக்கு சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புடைய லம்போர்கினி (Lamborghini) கார் ஒன்றை , இவர் சமீபத்தில் பரிசாக வழங்கியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








