3 கோடி ரூபா கார்ல வந்த தேவதை! தாலி கட்றவருக்கு குடுத்து வெச்சிருக்கு! அந்த வீடியோ பாத்தவருக்குதான் அதிர்ஷ்டமா!

திரைப்பட நடிகர், நடிகைகள் விலை உயர்ந்த சொகுசு கார்களில் பயணம் செய்வதைதான் விரும்புகின்றனர். அதிலும் குறிப்பாக, திரைத்துறையை சேர்ந்த ஒரு சில குடும்பங்களில், ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு விலை உயர்ந்த கார் இருக்கும். இதற்கு பாண்டே குடும்பம் ஒரு மிகச்சிறந்த உதாரணம். உங்களுக்கு சங்கி பாண்டேவை (Chunky Pandey) தெரியுமா? இவர் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்னமும் உங்களுக்கு தெரியவில்லையா? பிரபல பாலிவுட் நடிகையான அனன்யா பாண்டேவின் (Ananya Pandey) தந்தைதான் இவர்.

தற்போது சங்கி பாண்டே யார்? என்பது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறோம். சங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே என்ற காலம் மாறி, அனன்யா பாண்டேவின் தந்தை சங்கி பாண்டே என்று சொல்லும் அளவிற்கு காலம் மாறி விட்டது. உண்மையில் அனன்யா பாண்டே அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

Ananya Panday Spotted In Range Rover Autobiography

ரசிகர்கள் மட்டுமல்லாது, கிரிக்கெட் வீரர்களையும் கூட அனன்யா பாண்டே கவர்ந்துள்ளார். சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரியான் பராக்கின் (Riyan Parag) 'யூடியூப் சர்ச் ஹிஸ்டரி' (YouTube Search History) வெளிவந்தது. அதில், 'அனன்யா பாண்டே ஹாட்' (Ananya Pandey Hot) என ரியான் பராக் தேடியிருந்தார்.

இதன் காரணமாக ரியான் பராக் மற்றும் அனன்யா பாண்டேவின் பெயர்கள் சமூக வலை தளங்களில் அவ்வப்போது ஜோடி சேர்த்து கிசுகிசுக்கப்படுகிறது. கடந்த ஒரு சில நாட்களாக கூட, ரியான் பராக் மற்றும் அனன்யா பாண்டே ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை? என்பது தெரியவில்லை.

Chunky Panday Spotted In Kia Carnival

இது போன்ற கிசுகிசுக்களுக்கு மத்தியில், அனன்யா பாண்டே மற்றும் அவரது தந்தை சங்கி பாண்டேவின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், ஸ்டூடியோ ஒன்றுக்கு தங்கள் விலை உயர்ந்த கார்களில் வலம் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

அவர்கள் இருவரும் ஒரே இடத்திற்குதான் வந்துள்ளனர். ஆனால் தனித்தனி விலை உயர்ந்த கார்களில் அவர் வருகை புரிந்துள்ளனர். இதில், அனன்யா பாண்டே வந்தது ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Range Rover Autobiography) ஆகும். இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 2.60 கோடி ரூபாய் வருகிறது.

மிகவும் விலை உயர்ந்த இந்த காரில், 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 398 பிஎஸ் பவர் மற்றும் 550 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சங்கி பாண்டே வந்தது, கியா கார்னிவல் (Kia Carnival) கார் ஆகும். இது கியா நிறுவனத்தின் மிகவும் விலை உயர்ந்த கார்களில் ஒன்று. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா கார்னிவல் காரின் விலை 63.90 லட்ச ரூபாயாக உள்ளது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.

இந்த காரில், 190 ஹெச்பி பவர் மற்றும் 441 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சங்கி பாண்டே இந்த காரை புதிதாக வாங்கியுள்ளார். இன்னும் சொல்லப்போனால், கியா கார்னிவல் காரின் புதிய தலைமுறை வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அதைதான் சங்கி பாண்டே வாங்கியுள்ளார். மறுபக்கம் அவரது மகளான அனன்யா பாண்டே வந்த ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார், ஏற்கனவே அவர்களிடம் இருக்க கூடிய கார்களில் ஒன்றுதான் என கூறப்படுகிறது. தந்தை, மகளின் இந்த வைரல் வீடியோவை, சமூக வலை தளங்களில் அவர்களது ரசிகர்கள் தற்போது அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவும், அவரது தந்தை சங்கி பாண்டேவும், அவரவர் தேவைகளுக்கு ஏற்ற கார்களை பயன்படுத்துவதாக நாங்கள் கருதுகிறோம். ஆனால் இந்த 2 கார்களுமே, சொகுசான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்க கூடியவை என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, November 14, 2024, 14:25 [IST]
English summary
Ananya chunky panday spotted in range rover autobiography kia carnival viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+