3 கோடி ரூபா கார்ல வந்தது கார்த்தி பட நடிகரின் பொண்ணா! தமிழ் சினிமால நடிக்க வந்தா அடுத்த நயன்தாரா இவங்கதான்!

இந்திய கோடீஸ்வரர்கள் மத்தியில், குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில், மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover). இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 2.36 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 4.98 கோடி ரூபாயாக இருக்கிறது. இத்தனைக்கும் இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மட்டுமே. அதிக விலை கொண்டதாக இருந்தாலும், சொகுசு வசதிகள் உள்ளிட்ட காரணங்களால் கோடீஸ்வரர்களில் விருப்பமான காராக இது உள்ளது.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி திரையுலகை சேர்ந்த பலர், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காரை வைத்துள்ளனர். இதில், சல்மான் கான் (Salman Khan), சஞ்சய் தத் (Sanjay Dutt), சுஷ்மிதா சென் (Sushmita Sen), கங்கனா ரனாவத் (Kangana Ranaut) மற்றும் ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty) போன்றவர்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

Ananya Panday Spotted In Land Rover Range Rover

இந்த வரிசையில் பாலிவுட் திரையுலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான அனன்யா பாண்டேவிடமும் (Ananya Panday), லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் கார் உள்ளது. அனன்யா பாண்டே வைத்திருப்பது, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும்.

அதாவது ரேஞ்ச் ரோவர் காரின் LWB HSE வேரியண்ட்டைதான், அனன்யா பாண்டே வைத்துள்ளார். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையே 2.36 கோடி ரூபாய் வருகிறது. ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 2.75 கோடி ரூபாய் வரும். ஒருவேளை அனன்யா பாண்டே மாடிஃபிகேஷன்களை செய்திருந்தால், இந்த காரின் மதிப்பு 3 கோடி ரூபாயை தொட்டு விடும்.

Land Rover Range Rover

இவ்வளவு விலை உயர்ந்த காரில் மும்பையின் பாந்த்ரா பகுதிக்கு, அனன்யா பாண்டே வந்தபோது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் அனன்யா பாண்டேவை மிகவும் சாதாரணமான ஒரு உடையில் நம்மால் பார்க்க முடிகிறது.

அத்துடன் அவரது வெள்ளை நிற லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காரையும் நீங்கள் காணலாம். அனன்யா பாண்டே ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தபோதோ அல்லது ரெஸ்ட்டாரெண்டிற்கு வந்தபோதோ இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. பாந்த்ரா பகுதியில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரை அடிக்கடி காணலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் நாம் காணும் அனன்யா பாண்டேவின் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காரில், 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 4,000 ஆர்பிஎம்மில் 346 பிஹெச்பி பவரையும், 1,500 ஆர்பிஎம்மில் 700 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஒரு கார் ஆகும். எனவே ஆஃப்-ரோடு பயணங்களையும் கூட இந்த காரில் மேற்கொள்ள முடியும். இந்த கார் ஒரு லிட்டருக்கு 13.16 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கியுள்ளது. இந்த காரின் எரிபொருள் டேங்க் கொள்ளவு 90 லிட்டர்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அனன்யா பாண்டேவிற்கு தற்போது 26 வயது மட்டுமே ஆகிறது. அதற்குள்ளாகவே பாலிவுட் திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக அவர் உயர்ந்து விட்டார். தற்போதைய நிலையில் ஒரு திரைப்படத்திற்கு அவர் 3 கோடி ரூபாயை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.

இதுதவிர விளம்பரங்களில் நடிப்பதன் மூலமாகவும் அவருக்கு வருமானம் கிடைக்கிறது. தற்போதைய நிலையில் அவரது சொத்து மதிப்பு (Net Worth) தோராயமாக 100 கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் போன்ற கார்களை எல்லாம் அவரால் எளிதாக வாங்க முடிகிறது.

தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் நாம் காணும் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் கார், கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். வரும் காலங்களில் இது போல் இன்னும் நிறைய சொகுசு கார்களை அனன்யா பாண்டே வாங்குவார் என நாம் எதிர்பார்க்கலாம்.

அனன்யா பாண்டேவின் தந்தை சங்கி பாண்டேவும் (Chunky Panday) புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இவர் தமிழில் கார்த்தி (Karthi) நடிப்பில் கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பு வெளியான சர்தார் (Sardar) திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அப்பா சங்கி பாண்டேவை போலவே, மகள் அனன்யா பாண்டேவும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இவர் தற்போது வரை ஒரு தமிழ் திரைப்படத்தில் கூடி நடித்தது கிடையாது. எனினும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 4, 2025, 15:51 [IST]
English summary
Ananya panday spotted in land rover range rover car worth rs 3 crore viral video all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+