பெரிய பெரிய ஆட்களையே சூடேத்தி விட்ட தேவதை! 3 கோடி ரூபா காரை வாங்கனது அவங்களா! அவங்கள மாதிரியே காரும் அழகு!

இந்தியாவை சேர்ந்த நடிகைகள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்த கார்களில் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக பெரும்பாலான பாலிவுட் நடிகைகள் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் பயணம் செய்கின்றனர். இதற்கு அனன்யா பாண்டேவும் (Ananya Panday) விதிவிலக்கு அல்ல. பாலிவுட் திரையுலகில் மட்டும் பிரபலமாக இருந்த இவர், சமீபத்தில் இந்தியா முழுக்க பேசு பொருளானார். ஐபிஎல் (IPL - Indian Premier League) தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணிக்காக விளையாடி வரும் ரியான் பராக்தான் (Riyan Parag) இதற்கு காரணம்.

இளம் கிரிக்கெட் வீரரான ரியான் பராக், யூடியூப் தளத்தில் என்னனென்ன விஷயங்களை எல்லாம் தேடியுள்ளார்? (YouTube Search History) என்ற தகவல் சமீபத்தில் இணையத்தில் கசிந்தது. இதன் மூலமாக, அனன்யா பாண்டேவின் ஹாட் (Ananya Panday Hot) வீடியோக்களை அவர் தேடியிருந்தது அனைவருக்கும் தெரியவந்தது.

Ananya Pandey Buys Range Rover

இதன் காரணமாக ரியான் பராக் சர்ச்சையில் சிக்கிய நிலையில், அனன்யா பாண்டே மிகவும் பிரபலமான ஒருவராக மாறினார். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், அனன்யா பாண்டே சொகுசு கார்களில் பயணம் செய்வதில் ஆர்வம் காட்ட கூடியவர். இதை நிரூபிக்கும் வகையில் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை அவர் வாங்கியுள்ளார்.

அது ரேஞ்ச் ரோவர் (Range Rover) ஆகும். இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்தது. அனன்யா பாண்டே வாங்கியிருப்பது, ரேஞ்ச் ரோவர் காரின் 3.0 எல்டபிள்யூபி ஹெச்எஸ்இ வேரியண்ட் (Range Rover 3.0 LWB HSE Variant) ஆகும்.

Ananya Pandey Buys Range Rover Luxury SUV

இந்த காரில், 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 345 பிஹெச்பி பவர் மற்றும் 700 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் ஆன்-ரோடு விலை (On-road Price) தோராயமாக 2.70 கோடி ரூபாய் இருக்கும். இந்த விலை உயர்ந்த காரில், அனன்யா பாண்டே பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று யூடியூப் தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது. மும்பை நகரில் எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில், ரெஸ்டாரெண்ட் ஒன்றில் இருந்து வெளியே வந்த அனன்யா பாண்டே, புதிய ரேஞ்ச் ரோவர் காரில் ஏறி பயணிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்றாக ரேஞ்ச் ரோவர் உள்ளது. கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு, அனன்யா பாண்டேவின் தோழியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூரும் (Jahnavi Kapoor) கூட ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், அனன்யா பாண்டே மற்றும் ஜான்வி கபூர் ஆகிய இருவரும், ஒரே வேரியண்ட்டைதான் வாங்கியுள்ளனர். அத்துடன் கலரும் கூட ஒன்றுதான். அது ஃபூஜி ஒயிட் கலர் ஆகும். இந்த காரின் சொகுசு அம்சங்கள், பாலிவுட் நடிகைகளை எல்லாம் ஈர்க்க கூடியதாக உள்ளன என்பது எங்களுடைய கருத்து.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 23, 2024, 14:46 [IST]
English summary
Ananya pandey buys range rover luxury suv viral video full details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+