பெரிய மனசு! விபத்தில் சிக்கியவர்களை காப்பாத்துனது அவங்களா! ஒட்டுமொத்த தமிழ்நாடே கையெடுத்து கும்புடுது!
தமிழ்நாட்டில் (Tamil Nadu) சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு புதிய மாவட்டங்கள் உருவாகியுள்ளன. அப்படி உதயமான மாவட்டங்களில் ஒன்றுதான் ராணிப்பேட்டை (Ranipet). இந்த மாவட்டத்தின் ஆட்சியராக (Collector) தற்போது வளர்மதி (Valarmathi) பணியாற்றி வருகிறார்.
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டு ஊராட்சி வழியாக, ஆட்சியர் வளர்மதி நேற்று (அக்டோபர் 20) தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக அவர் சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது அந்த பகுதியில் சாலை விபத்து (Road Accident) ஒன்று நிகழ்ந்தது.

மாவட்ட ஆட்சியரின் வாகனம் பொன்னப்பந்தாங்கல் கூட்டுச்சாலை அருகே வந்தபோது, எதிரே மாருதி சுஸுகி ஆம்னி (Maruti Suzuki Omni) கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில் நர்சரி பள்ளி ஒன்றில் படிக்கும் 8 மாணவர்கள் இருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மாருதி சுஸுகி ஆம்னி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
விபத்து நிகழ்ந்ததை கண்டவுடன், மாவட்ட ஆட்சியர் தனது வாகனத்தை நிறுத்தினார். பின்னர் அவர் உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டார். இந்த விபத்தில் நல்ல வேளையாக மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் மாணவர்கள் அனைவரும் பதற்றத்தில் இருந்தனர். எனவே அவர்களிடம் பேசி, பதற்றத்தை போக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டார்.

அவர்களின் பதற்றம் நீங்கியதையடுத்து, தன்னுடன் வந்த செய்தி மக்கள் தொடர்பு அலுவலரின் காரில் ஏற்றி, மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்தார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதியின் இந்த செயல், பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் சமூக வலை தளங்களில் அவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உண்மையில் இந்தியாவில் சாலை விபத்துக்கள் நிகழ்ந்தால்,நம்மில் பலரும் நமக்கு என்ன? என சென்று விடுகின்றனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் வளர்மதி அப்படி நடந்து கொள்ளாமல், பொறுப்பை உணர்ந்து செயல்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. இதன் மூலம் அவர் அனைவருக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ளார்.
சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய பலரும் தயங்குவதற்கு முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. கோர்ட், கேஸ் என அலைய வேண்டியது வரும் என்ற அச்சம்தான் இதற்கு காரணம். ஆனால் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்தவர்களை எந்த வகையிலும் துன்புறுத்த கூடாது என உச்ச நீதிமன்றமே (Supreme Court) உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு பரிசு வழங்கும் திட்டங்களும் கூட இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு தயங்காமல் உதவி செய்யுங்கள். பரிசு, பாராட்டு என்பதை எல்லாம் கடந்து இதன் மூலம் விலை மதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப்படும்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதியை போல், பாமக தலைவரும் (PMK President), ராஜ்யசபா எம்பியுமான (Rajya Sabha MP) டாக்டர் அன்புமணி ராமதாசும் (Anbumani Ramadoss), சாலை விபத்தில் சிக்கிய 2 பேருக்கு சமீபத்தில் உதவி செய்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த சம்பவம் தர்மபுரி (Dharmapuri) அருகே நடைபெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications