”சாலை விதிகளை தயவுசெய்து பின்பற்றுங்கள்...” வாகன ஓட்டியிடம் கையெடுத்து கும்பிட்ட போலீஸ்காரர்..!!

Written By:

ஒரே பைக்கில் தன் மொத்த குடும்பத்தையும் ஏற்றி வந்த ஓட்டுநரை பார்த்து, ஒரு காவலர் கையெடுத்து கும்பிடம் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாகன ஓட்டியிடம் கையெடுத்து கும்பிட்ட காவலர்... வைரல் புகைப்படம்..!!

காவல்துறையா இப்படி செய்தது என நெட்டிசன்கள் மத்தியில் இந்த புகைப்படம் ஆவலாக பார்க்கப்பட்டு வருகிறது.

வாகன ஓட்டியிடம் கையெடுத்து கும்பிட்ட காவலர்... வைரல் புகைப்படம்..!!

மேலும் இந்த சம்பவம் பற்றி, காவலர் ஏன் கையெடுத்து கும்பிடுகிறார்? புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது புகைப்படத்தை எடுத்தவர் யார்? என்பதும் பலரது கேள்விகளாக அடுத்தடுத்து முளைத்தன.

வாகன ஓட்டியிடம் கையெடுத்து கும்பிட்ட காவலர்... வைரல் புகைப்படம்..!!

ஆந்திராவின் ஆனந்த்பூர் மாநில நெடுஞ்சாலையில், ஒரே பைக்கில் தனது 5 பேர் கொண்ட மொத்த குடும்பத்தையும் ஏற்றிக்கொண்டு ஒரு குடும்ப தலைவர் பைக்கில் சென்று கொண்டு இருந்தார்.

Recommended Video - Watch Now!
TVS Jupiter Classic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
வாகன ஓட்டியிடம் கையெடுத்து கும்பிட்ட காவலர்... வைரல் புகைப்படம்..!!

5 பேர் ஒரே பைக்கில் பயணம் செய்வது என்பது சாலை விதிகளை மீறும் செயல், மேலும் அந்த பைக்கை ஓட்டிக்கொண்டு வந்த குடும்ப தலைவர் ஹெல்மெட் எதையும் அணிந்திருக்கவில்லை.

வாகன ஓட்டியிடம் கையெடுத்து கும்பிட்ட காவலர்... வைரல் புகைப்படம்..!!

இதனால் அவர் நெடுஞ்சாலையில் இருந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

நாட்டில் தற்போது சாலை விதிகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற, சட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

வாகன ஓட்டியிடம் கையெடுத்து கும்பிட்ட காவலர்... வைரல் புகைப்படம்..!!

இதனால் அந்தந்த மாநிலங்களை சேர்ந்த காவல்துறையினருக்கு, மாநில அரசாங்கம் மிகுந்த அழுத்தம் கொடுத்து வருகின்றன.

குறிப்பாக தமிழ்நாட்டில் அனைத்து வாகன ஓட்டிகளும் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவேண்டும் என அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

வாகன ஓட்டியிடம் கையெடுத்து கும்பிட்ட காவலர்... வைரல் புகைப்படம்..!!

தெலங்கானா மற்றும் ஆந்திராவிலும் சாலை விதிமீறல்கள், விபத்துகள் அதனால் ஏற்படும் உயிரழப்புகள் அதிகரித்து வருகின்றன.

இதனால் இரண்டு மாநில அரசாங்கங்களுமே அங்கு போக்குவரத்து விதிகளை கடுமையாக்கி வருகின்றன.

வாகன ஓட்டியிடம் கையெடுத்து கும்பிட்ட காவலர்... வைரல் புகைப்படம்..!!

இதன்படி, ஆந்திராவின் ஆனந்த்பூர் பகுதியில் உள்ள மடாகாசிகிரா சர்க்கிள் என்ற பகுதியில் 5 பேரை ஏற்றிக்கொண்டு, ஹெல்மெட் அணியாமல் சென்ற ரைடரால் பரபரப்பு ஏற்பட்டது.

வாகன ஓட்டியிடம் கையெடுத்து கும்பிட்ட காவலர்... வைரல் புகைப்படம்..!!

அங்கு, பணியில் இருந்த காவல் ஆய்வாளரான பி. சுபு குமார், போக்குவரத்து விதிமீறல் செய்த பலருக்கும் அப்போதுதான் செலான் கொடுத்துவிட்டு ஆசுவாசமடைந்திருந்தார்.

வாகன ஓட்டியிடம் கையெடுத்து கும்பிட்ட காவலர்... வைரல் புகைப்படம்..!!

3 சிறுவர்கள் மற்றும் தன் மனைவி என அனைவரையும் ஒரே பைக்கில் ஏற்றி வந்த குடும்ப தலைவரை பார்த்து, போக்குவரத்து விதிமீறல் செய்யவேண்டாம் என கெஞ்சும் தோனியில் கேட்டுக்கொண்டார்.

வாகன ஓட்டியிடம் கையெடுத்து கும்பிட்ட காவலர்... வைரல் புகைப்படம்..!!

அப்போது அவருடன் இருந்த, காவல்துறை துணை ஆணையாளர் அபிஷேக் கோயல், இந்த சம்பவத்தை புகைப்படமாக எடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

வாகன ஓட்டியிடம் கையெடுத்து கும்பிட்ட காவலர்... வைரல் புகைப்படம்..!!

மேலும் அவர், பல்வேறு அறிவுறைகளை வழங்கியும் தொடர்ந்து பொதுமக்கள் போக்குவரத்து விதிமீறல் செய்தால் என்ன தான் செய்யும்? கையெடுத்து கும்பிடத்தான் முடியும்? என்று பதிவில் குறிப்பிட்டார்.

வாகன ஓட்டியிடம் கையெடுத்து கும்பிட்ட காவலர்... வைரல் புகைப்படம்..!!

போக்குவரத்து விதிமீறலால் பாதிப்பிற்குள்ளாவது வாகன ஓட்டிகள் தான் என்றாலும், அதை கட்டுப்படுத்தும் இடத்தில் காவல்துறையினர் தான் உள்ளனர்.

மக்களின் அலட்சியத்தால் நடைபெறும் ஒவ்வொரு நகர்விற்கும் காவல்துறையினர் தான் பதில் சொல்ல வேண்டியாதாக உள்ளது.

வாகன ஓட்டியிடம் கையெடுத்து கும்பிட்ட காவலர்... வைரல் புகைப்படம்..!!

அதில் அவர்களுக்கு இருக்கும் அழுத்தத்தையும், மன உளைச்சலையும் ஒருங்கே விவரிக்கும் புகைப்படமாகவே இது தற்றோது அமைந்துள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Andhra Pradesh Policeman Begs Repeat Offender to Follow the Traffic Rules. Click for Details...
Story first published: Wednesday, October 11, 2017, 16:57 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark