இனி இந்த பஸ்லயும் பெண்கள் இலவசமாக போகலாம்! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த முதல்வர்!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், அரசு பஸ்கள் தற்போது நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் (Tamil Nadu) வெகு சமீபத்தில் வால்வோ சொகுசு பஸ்கள் (Volvo Buses) அறிமுகம் செய்யப்பட்டிருப்பதை இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம். குறிப்பாக பழைய டீசல் பஸ்களுக்கு பதிலாக, எலெக்ட்ரிக் பஸ்களை (Electric Buses) அறிமுகம் செய்வதில், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள போக்குவரத்து கழகங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

இதற்கு ஆந்திர பிரதேசம் (Andhra Pradesh) ஒரு உதாரணம். ஆந்திர பிரதேசத்தில் தற்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு (Chandrababu Naidu) தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் (Telugu Desam Party) ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திர பிரதேச மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ், ஆந்திர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம் (Andhra Pradesh State Road Transport Corporation) இயங்கி கொண்டுள்ளது.

SETC Bus

இந்த அமைப்பிற்கு புதியதாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் பஸ்கள் வாங்கப்படவுள்ளன. ஆந்திர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு புதியதாக 1,050 எலெக்ட்ரிக் பஸ்கள் வாங்கப்படவுள்ளதை அம்மாநில முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு உறுதி செய்துள்ளார். இந்த 1,050 எலெக்ட்ரிக் பஸ்களை கொள்முதல் செய்யும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளன.

எனவே அவை வெகு விரைவில் ஆந்திர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகத்தில் இணையவுள்ளன. இதன் மூலம் ஆந்திர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம் நவீனமயமாக்கப்படும் என்பதுடன், இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ்களால், சுற்றுச்சூழல் மாசுபாடு வெகுவாக குறையும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Chandrababu Naidu Felicitates Beneficiaries Of Stree Shakti Scheme

பழைய டீசல் பஸ்களால், இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்சனை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சனையை குறைக்க வேண்டும் என்பதற்காகவே, பல்வேறு மாநில அரசுகளும் தற்போது எலெக்ட்ரிக் பஸ்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

சென்னை (Chennai) மற்றும் பெங்களூர் (Bangalore) உள்பட இந்தியாவின் பெரு நகரங்கள் பலவற்றிலும், எலெக்ட்ரிக் பஸ்களின் பயன்பாடு தற்போது மிக வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. டீசல் பஸ்கள் உடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதற்கு மிகவும் குறைவான செலவே ஆவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில அரசுகளின் போக்குவரத்து கழகங்கள் எலெக்ட்ரிக் பஸ்கள் மீது அதிக ஆர்வம் காட்டுவதற்கு இதுவும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

முன்னதாக தமிழ்நாட்டை போலவே, ஆந்திர பிரதேச மாநிலத்திலும், பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீ சக்தி (Stree Shakti) என்ற பெயரில், இந்த திட்டம் அங்கு அமலில் உள்ளது. தற்போது ஆந்திர மாநில அரசு இந்த திட்டத்தை, எலெக்ட்ரிக் ஏசி பஸ்களுக்கும் விரிவாக்கம் செய்துள்ளது. அதாவது இனி எலெக்ட்ரிக் ஏசி பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய முடியும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஆந்திர பிரதேச மாநிலத்தில் புதியதாக 1,050 எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யப்படவிருப்பதும், எலெக்ட்ரிக் ஏசி பஸ்களிலும் பெண்கள் இனி இலவசமாக பயணம் செய்யலாம் என்ற முடிவை அம்மாநில அரசு எடுத்திருப்பதும் உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய விஷயம் ஆகும். குறிப்பாக எலெக்ட்ரிக் ஏசி பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது, அவர்கள் மிகவும் சௌகரியமாக பயணம் செய்வதை உறுதி செய்யும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 4, 2025, 18:01 [IST]
English summary
Andhra pradesh to get 1050 electric buses soon check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+