தமிழ்நாட்டை மறந்து ஆந்திரா பக்கம் போகும் முதலீடு! இப்ப இந்த கம்பெனியும் போயிடுச்சா?

ஆந்திர மாநில அரசு சரளா ஏவியேசன் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முதன் ஜிகா ஸ்கேல் எலெக்ட்ரிக் ஏர் டாக்ஸி ஹப்பை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையில் ட்ரோன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. உலகளவில் ட்ரோன் தேவை அதிகரித்து வரும் நிலையில் இதை பெரிய அளவில் தயாரிக்கும் ஆலை ரெடியாகிறது.இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

விசாகபட்டிணத்தில் சமீபத்தில் சிஐஐ பார்ட்னர்ஷிப் மாநாடு நடந்தது. இதில் ஆந்திர மாநில அரசு மற்றும் பெங்களூருவை அடிப்படையாக கொண்ட சரளா ஏவியேஷன் நிறுவனம் இணைந்து இந்தியாவின் முதல் ஜிகா ஸ்கேல் எலெக்ட்ரிக் ஏர் டாக்ஸியை உருவாக்கும் ஆலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இது இந்தியாவில் அடுத்த கட்ட ட்ரோன் வளர்ச்சிக்கும், நகர்புற பயணத்திற்கும் தேவையான வாகனங்களை தயாரிக்கும் ஆலையை செயல்படவுள்ளுது.

andhra Sarla Aviation Sky factory

இதற்காக அனந்தபூர் மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது. சரளா ஏவியேசன் நிறுவனம் ரூ1300 கோடியை முதற்கட்டமாக இதில் முதலீடு செய்யவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் கையெழுத்தானது. இதில் மத்திய சிவில் ஏவியேசன் அமைச்சர் ராம் மோகன் நாயுடுவும், ஆந்திர மாநில அமைச்சர் ஜெகன்நாதன் ரெட்டியும் கலந்து கொண்டனர்.

சரளா ஏவியேஷன் நிறுவனம் உலகின் மிகப்பெரிய புராஜெக்டாக இதை பார்க்கிறது. இதற்கு ஸ்கை ஃபேக்டரி என பெயர் வைத்துள்ளது.இந்த ஆலையில் இந்தியாவிலேயே வடிவமைத்து, உருவாக்கி, சோதனை செய்து சான்று வாங்கும்முயற்சியை செய்துவருகிறது. ஒரே இடத்தில் அத்தனை பணிகளையும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளுது.

இந்த ஆலையில் எலெக்ட்ரிக் வெர்டிகல் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் ட்ரோன்கள், கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளுது. இதில் ட்ரோன்களுக்குன உதிரி பாங்கள் தயாரிப்பு, ட்ரோன்களுக்கான மோட்டார்கள் மற்றம் முக்கிய பாகங்கள் தயாரிப்பு, இந்தியாவின் மிகப்பெரிய விண்ட் டனல், சிமுலேஷன் லேப் மற்றும் பைலட் பயிற்சி மையம், எம்ஆர்ஓ வசதிகள், விடிஓஎல்களை சோதனை செய்ய 2 கி.மீ ரன்வே உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

இந்த ஆலையில் ஆண்டிற்கு 1000 ட்ரோன்களை தயாரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மத்திய அரசின் விஸ்கித் பாரத் 2047 மற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஸ்வார் ஆந்திரா 2047 திட்டத்தின் கீழ் உருவாக்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி அதிக ஸ்கில் கொண்ட வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் புதிய ஏரோ ஸ்பேஸ் சப்ளை செயின் உருவாக்கப்படவேண்டும் என்ற திட்டதின் அடிப்படையில உருவாக்கப்பட்டுளு்ளுது.

சரளா ஏவியேசன் நிறுவனம்இந்த ஆலையை வெறும் ட்ரோன் தயாரிப்பு செய்யும் ஆலையாக மட்டும் அல்லாமல் அதை இயக்குவதற்கான பயிற்சி மையம் மற்றும் மற்றும் ஏர் டாக்ஸி சேவை நடத்தும் மையமாக செயல்பட வைக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த ஆலை இந்தியாவிலேயே ட்ரோன் தயாரிப்பை ஊக்கு விக்கவும், வெளிநாட்டிலிருந்து ட்ரோனுக்கான இந்திய சார்ந்திருக்க வேண்டியதை குறைக்கவும், எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் ஏவியேசன் களை ஊக்குவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போக இந்தியாவில் வெர்டிபோர்ட் மற்றும் ஏர்மொபிலிட்டி காரிடார்களை ஊக்குவிக்கும் மையமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீபகாலமாக தமிழத்திற்கு முக்கியத்துவம் குறைந்து வருவதை உணர முடிகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்குதமிழகம் ஒரு ஹப்பாக இருப்பது போல தற்போது ஆந்திர மாநிலம் வளர்ந்து வருகிறது. இந்த ஆலை தமிழகத்திற்கு வந்திருந்தால் தமிழக வளர்ச்சி சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் மிஸ்ஸாகி ஆந்திராவிற்கு சென்றுவிட்டது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 20, 2025, 14:30 [IST]
English summary
Andhra sarla aviation sky factory electric air taxi hub
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+