5 கோடி ரூபாய் காரை அசால்டா வாங்கனது அவரா... நல்லா உத்து பாத்ததுக்கு அப்புறம்தான் அடையாளமே தெரியுது!
ஏஞ்சல் ஒன் (Angel One) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (CEO) இருப்பவர் தினேஷ் தக்கார் (Dinesh Thakkar). டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் வாசகர்களுக்கு இவரை நன்றாகவே தெரியும். ஏனெனில் இவர் தீவிரமான கார் ஆர்வலர் ஆவார். தினேஷ் தக்காரின் கார் கலெக்ஸன் (Car Collection) மிகவும் பெரியது.
பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7), மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூஇ (Mercedes-Benz EQE), போர்ஷே டைகன் டர்போ எஸ் (Porsche Taycan Turbo S), போர்ஷே 911 ஜிடி3 ஆர்எஸ் (Porsche 911 GT3 RS), போர்ஷே 911 ஜிடி3 டூரிங் (Porsche 911 GT3 Touring) மற்றும் ஃபெராரி 488 பிஸ்டா (Ferrari 488 Pista) என தினேஷ் தக்காரிடம் ஏகப்பட்ட விலை உயர்ந்த கார்கள் உள்ளன.

இந்த வரிசையில் தற்போது மற்றொரு விலை உயர்ந்த கார் ஒன்று, தினேஷ் தக்காரின் வீட்டிற்கு வந்துள்ளது. அது லம்போர்கினி ஹூராகேன் ஸ்டெராட்டோ (Lamborghini Huracan Sterrato) ஆகும். லம்போர்கினி ஹூராகேன் ஸ்டெராட்டோ காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-showroom Price) 4.61 கோடி ரூபாய் ஆகும்.
ஆன்-ரோடு விலை (On-road Price) இன்னும் ஒரு கோடி ரூபாய் அதிகமாக வரும். வழக்கமான லம்போர்கினி ஹூராகேன் காருடன் ஒப்பிடும்போது, ஸ்டெராட்டோ காரில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த காரில் பொருத்தப்பட்டிருப்பது, 5.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் வி10 பெட்ரோல் இன்ஜின் ஆகும்.

அதிகபட்சமாக 610 பிஎஸ் பவர் மற்றும் 560 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் இணைக்கப்பட்டிருப்பது, 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் கியர் பாக்ஸ் ஆகும். இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, இந்த கியர் பாக்ஸ் மூலமாக, காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது.
பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை, லம்போர்கினி ஹூராகேன் ஸ்டெராட்டோ 3.4 வினாடிகளில் எட்டி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 260 கிலோ மீட்டர்கள் ஆகும். இப்படி ஒரு சிறப்பான செயல்திறன் கொண்ட லம்போர்கினி ஹூராகேன் ஸ்டெராட்டோ காரை, தினேஷ் தக்கார் ஆலிவ் க்ரீன் (Olive Green) நிறத்தில், வாங்கியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: லம்போர்கினி ஹூராகேன் ஸ்டெராட்டோ உண்மையிலேயே ஒரு ஸ்பெஷலான கார் ஆகும். ஏனெனில் உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக வெறும் 1,499 லம்போர்கினி ஹூராகேன் ஸ்டெராட்டோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளன. அதில் ஒன்றை, தினேஷ் தக்கார் வாங்கி விட்டார்.
கூடிய விரைவில் இந்த லம்போர்கினி ஹூராகேன் ஸ்டெராட்டோ காரில், தினேஷ் தக்கார் பயணம் செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளிவரலாம் என நாங்கள் கருதுகிறோம். அத்துடன் வரும் காலங்களில் இன்னும் பல்வேறு விலை உயர்ந்த கார்களை தினேஷ் தக்கார் வாங்கி குவிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








