எதயும் விட்டு வெக்க மாட்டேங்குறாரு! நடிகைகளுக்கு பிடிச்ச காரையும் வாங்கீட்டாரு! கப்பல் மாதிரி என்ஜாய் பண்ணலாம்

இந்தியாவை சேர்ந்த பிரபலமான நிறுவனங்களில் ஒன்று ஏஞ்சல் ஒன் (Angel One). இந்த நிறுவனம் ஏஞ்சல் ப்ரோக்கிங் (Angel Broking) என்ற பெயராலும் அறியப்படுகிறது. இதன் சேர்மன் (Chairman) ஆக உள்ள தினேஷ் தக்கார் (Dinesh Thakkar), கார் காதலர் ஆவார். இவரது கார் கலெக்ஸன் (Car Collection) மிகப்பெரியது.

போர்ஷே டேக்கன் டர்போ எஸ் (Porsche Taycan Turbo S), மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஇ (Mercedes Benz EQE), மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடிஆர் பிளாக் சீரிஸ் (Mercedes Benz AMG GTR Black Series) மற்றும் ஃபெராரி 488 பிஸ்டா (Ferrari 488 Pista) உள்ளிட்ட கார்கள் எல்லாம், தினேஷ் தக்காரிடம் இருக்கின்றன.

Angel One Chairman Buys BMW i7

இந்த வரிசையில் மற்றொரு புதிய கார் ஒன்று அவரது கலெக்ஸனில் இணைந்துள்ளது. அது பிஎம்டபிள்யூ (BMW i7) கார் ஆகும். சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்த இது எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரில், 101.7 kWh லித்தியம் அயான் பேட்டரி ஆப்ஷன் (Battery Options) வழங்கப்பட்டுள்ளது.

இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 590 கிலோ மீட்டர் முதல் 625 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும். பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் காரானது மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கிறது. இந்த வேரியண்ட்களை பொறுத்து, டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) சற்று மாறுபடும்.

BMW i7

பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை (Price) 2.03 கோடி ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 2.50 கோடி ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) இன்னும் கூடுதலாக வரும்.

இந்த எலெக்ட்ரிக் கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 4.7 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் இதன் டாப் ஸ்பீடு (Top Speed) மணிக்கு 239 கிலோ மீட்டர்களாக இருக்கிறது. அத்துடன் பல்வேறு அதிநவீன மற்றும் சொகுசு வசதிகளும் (Features) இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் காரானது, இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் மத்தியில் தற்போது மிகவும் வேகமாக பிரபலமடைந்து வரும் கார்களில் ஒன்றாகும். நடிகர் அஜய் தேவ்கன் (Ajay Devgn), நடிகைகள் ரேகா (Rekha), கிம் ஷர்மா (Kim Sharma) மற்றும் ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ் (Jacqueline Fernandez) உள்பட பலரும் இந்த எலெக்ட்ரிக் காரை வைத்துள்ளனர்.

இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், பிரபலங்கள் பலரும் எலெக்ட்ரிக் கார்களை வாங்க முன்வருவது என்பது, மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் கார்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்பதுதான். இதன் எதிரொலியாக வழக்கமான பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) கார்களில் இருந்து மக்கள் மாறலாம் என்பதால், இது இந்தியாவின் சுற்றுச்சூழலை பாதுகாக்க பயன்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தினேஷ் தக்காரை பொறுத்தவரையில், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், கார் காதலர் ஆவார். எனவே பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் காரையும் விட்டு வைக்காமல் அவர் தற்போது வாங்கி விட்டார். இந்த கார் உல்லாச கப்பலில் மிதப்பது போன்ற சொகுசான பயணத்தை அவருக்கு வழங்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 6, 2024, 17:35 [IST]
English summary
Angel one chairman buys bmw i7 price range all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+