மனைவி உடன் ஷோரூமுக்கு வந்தவர் இந்த கம்பெனி எம்டி -ஆ? 5 கோடி ரூபா செலவு செய்து வாங்கி கொடுத்த கார்!
மெர்சிடிஸ் (Mercedes) கார்களுக்கு என்றே உலகளவில் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. இந்தியாவிலும் அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மெர்சிடிஸ் விளங்குகிறது. ஜெர்மனி (Germany)-ஐ சேர்ந்த மெர்சிடிஸ் நிறுவனத்தில் மிகவும் அதிக விலையில் விற்பனை செய்யப்படும் கார்கள், மெர்சிடிஸ்-மேபக் (Maybach) கார்கள் ஆகும். மிகவும் உயர் தரத்திலான மெட்டீரியல்களால் உருவாக்கப்படுவதாலும், பவர்ஃபுல்லான என்ஜின் பொருத்தப்படுவதாலும் மெர்சிடிஸ்-மேபக் கார்களின் விலைகள் மிகவும் அதிகமாக நிர்ணயிக்கப்படுகின்றன. இதனாலேயே, மெர்சிடிஸ் கார்களை வாங்குபவர்களில் மெர்சிடிஸ்-மேபக் காரை வாங்குபவர்களின் எண்ணிக்கை சற்று குறைவே ஆகும்.
ஆனால், அத்தகைய மெர்சிடிஸ்-மேபக் கார்களுள் ஒன்றை இங்கு ஒரு தொழிலதிபர் தனது மனைவிக்காக வாங்கி, சர்பிரைஸ் பரிசு (Surprise Gift)-ஆக வழங்கி உள்ளார். யார் அந்த தொழிலதிபர் என்பதையும், மனைவிக்காக அவர் வாங்கியுள்ள மெர்சிடிஸ்-மேபக் காரை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

ஏஞ்சல் ஒன் (Angel One), இந்த நிறுவனத்தை பற்றி உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்தியாவின் முதன்மையான பங்குத்தரகர் நிறுவனம் மற்றும் சரியான முதலீடுகளை மேற்கொள்வதற்கான அறிவுரைகளை வழங்கக்கூடிய நிறுவனமாக ஏஞ்சல் ஒன் விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் (MD)-ஆக இருப்பவர், தினேஷ் தாக்கர் (Dinesh Thakkar).
இவர் தான் தற்போது தனது மனைவியை விலையுயர்ந்த கார் மூலமாக ஆச்சிரியப்படுத்தி உள்ளார். இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களுள் ஒருவராக இருக்கும் தினேஷ் தாக்கர் தனது மனைவி ஹேமா தாக்கர் (Hema Thakkar)-க்கு சர்பிரைஸ் பரிசாக வழங்கி இருப்பது, மெர்சிடிஸ்-மேபக் எஸ்680 (S680) என்கிற அல்ட்ரா-லக்சரி கார் ஆகும்.

கணவனும் மனைவியும் ஜோடியாக மும்பை (Mumbai)-இல் உள்ள மெர்சிடிஸ் ஷோரூம் (Showroom)-க்கு சென்று விலையுயர்ந்த மேபக் எஸ்680 காரை டெலிவிரி பெறும் வீடியோவை தினேஷ் தாக்கர் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவரது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம், புதிய மெர்சிடிஸ்-மேபக் கார் ஹேமா தாக்கருக்கு சர்பிரைஸ் பரிசாக வழங்கப்பட்டு இருப்பதை அறிய முடிகிறது.
மனைவிக்காக பிராண்ட்-நியூ மேபக் எஸ்680 காரை 'வெர்டே சில்வர்' (Verde Silver) நிறத்தில் தொழிலதிபர் தினேஷ் தாக்கர் வாங்கி உள்ளார். இந்த சில்வர் நிறம் பார்ப்பதற்கு உண்மையான சில்வர் உலோகத்தை திரவமாக கூழாக்கி கார் முழுவதும் ஊற்றியதுபோல் உள்ளது. இவ்வாறான சில்வர் நிறத்தில் மெர்சிடிஸ்-மேபக் எஸ்680 காரை நாங்கள் பார்த்தது இல்லை. ஆக, இந்தியாவிலேயே வெர்டே சில்வர் நிறத்திலான முதல் மேபக் எஸ்680 காராக இது இருக்கலாம்.

இந்த மேபக் காரின் வெளிப்பக்கம் மட்டுமின்றி, உட்புறமும் 'மக்சியாடோ பழுப்பு' (Macchiato Beige) என்கிற வித்தியாசமான வெளிறிய பழுப்பு நிறத்தில் உள்ளது. இது காரின் வெளிப்புறத்துடன் மிகவும் நன்றாகவே ஒன்றிப்போய் உள்ளது. மற்ற மெர்சிடிஸ்-மேபக் கார்களை போலவே இந்த காரிலும் ஆடம்பர வசதிகளுக்கும், சொகுசு வசதிகளுக்கும் எந்தவொரு குறையும் இல்லை.
இந்த மேபக் எஸ்680 காருக்குள் பயணிகளின் வசதிக்காக மடக்கக்கூடிய மேசைகள் கூட வழங்கப்பட்டு உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மேபக் எஸ்680 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மெர்சிடிஸ் நிறுவனத்தின் தாழ்வான உடலமைப்பை கொண்ட லக்சரி செடான் (Sedan) ரக கார் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெர்சிடிஸ்-மேபக் எஸ்-கிளாஸ் காரின் வேரியண்ட்களுள் ஒன்று, எஸ்680 ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே சுமார் ரூ.3.48 கோடியாக உள்ளது. ஆன்-ரோடு விலை இன்னும் ஒரு கோடி ரூபாய் அளவிற்கு அதிகமாக வரும். அதுமட்டுமில்லாமல், இந்த காருக்கு பிரத்யேகமான பெயிண்ட்டை வழங்கி உள்ளதால், தொழிலதிபர் தினேஷ் தாக்கர் எப்படியிருந்தாலும் ரூ.5 கோடிக்கும் அதிகமான தொகையை இந்த காருக்காக செலவு செய்து இருப்பார்.


Click it and Unblock the Notifications









