75 லட்ச ரூபாய் காரை திடீர்னு தீ வைத்து எரித்த டாக்டர்! காரணத்தை கேட்டதும் ஒட்டுமொத்த தமிழ்நாடே ஆடிப்போயிருச்சு
கோபத்தில் இருக்கும்போது முட்டாள்தனமான செயல்களை நிறைய பேர் செய்கின்றனர். தாங்கள் செய்யும் செயலின் விளைவு என்ன? என்பதை பற்றி அவர்கள் கொஞ்சம் கூட யோசிப்பதில்லை. இதுபோன்றதொரு சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் பகுதியில் அரங்கேறியுள்ளது.
டாக்டர் ஒருவர் தனது காதலியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) காரை எரித்துள்ளார். அந்த டாக்டர் தீ வைத்து எரித்திருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ 45 ஏஎம்ஜி (Mercedes Benz CLA 45 AMG) கார் ஆகும். இந்த காரின் விலை சுமார் 75 லட்ச ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரியத்தை செய்திருக்கும் டாக்டரின் பெயர் கவின். 28 வயதாகும் கவின், தனியார் மருத்துவமனை ஒன்றில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

எம்பிபிஎஸ் படிச்சிருக்காரு!
எம்பிபிஎஸ் படித்த டாக்டர் இப்படியா செய்வது? என அனைவரும் கேள்வி எழுப்பும் வகையில், கவினின் செயல்பாடு அமைந்துள்ளது. 28 வயதான பெண் மருத்துவர் ஒருவரை கவின் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்துள்ளனர். சமீபத்தில் அந்த பெண் மருத்துவரை கூட்டி கொண்டு, கவின் காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது கவின்தான் காரை ஓட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் சென்னை-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் பெரிதாக மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியை அவர்கள் அடைந்துள்ளனர்.
பொசுக்குனு தீ வச்சுட்டாரு!
அப்போது காருக்கு உள்ளே இருந்தபடியே அவர்கள் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்பின் இருவரும் காரை விட்டு வெளியே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறிய கவின் பெட்ரோல் ஊற்றி காருக்கு தீ வைத்து விட்டார். அந்த வழியாக சென்றவர்கள் கார் தீப்பற்றி எரிவதை கண்டு, தீயணைப்பு துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இது முதல் முறையல்ல!
ஆனால் அவர்கள் வந்த நேரத்தில் கார் தீயில் கருகி முற்றிலும் சேதமடைந்திருந்தது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கவினை கைது செய்தனர். ஆனால் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் இந்தியாவில் கார் உரிமையாளர்கள் ஆத்திரத்தில் தங்கள் காருக்கு தீ வைப்பது இது முதல் முறை கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
ஃபைன் போட்டதுக்காக எல்லாம் இப்படியா பண்றது?
கார் தொடர்ச்சியாக பழுதாகி கொண்டே இருக்கிறது என்பதற்காக கோவத்தில் ஒரு சிலர் காரை தீ வைத்து எரித்துள்ளனர். இன்னும் ஒரு சிலரோ காவல் துறையினர் அபராதம் விதித்த காரணத்திற்காக கூட வாகனங்களை தீ வைத்து எரித்திருக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டே வருவது வேதனையான ஒரு விஷயம்தான். ஏனெனில் கார் போன்ற வாகனங்கள் மிகவும் விலை உயர்ந்தவை.
நிறைய பேருக்கு இதுலாம் கனவுப்பா!
அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் தற்போது டாக்டர் கவின் தீ வைத்து எரித்திருக்கும் காரின் விலை சுமார் 75 லட்ச ரூபாய் வருகிறது. இப்படிப்பட்ட காரை எல்லாம் வாழ்க்கையில் ஒரு முறையாவது வாங்கி விட முடியாதா? என பலர் ஏக்கத்தில் இருக்கின்றனர். அப்படிப்பட்ட மனிதர்கள் நிறைய பேர் இருக்கும்போது, கோபத்தில் இவ்வளவு விலை உயர்ந்த காரை தீ வைத்து எரிப்பது என்பது கவலைக்குரிய ஒரு விஷயம்தான்.
ஃப்ரீ அட்வைஸ்!
எனவே கோபத்தில் இதுபோன்ற செயல்களை செய்வதை வாகன உரிமையாளர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கோபத்தில் இருக்கும்போது முடிந்தவரை வாகனம் ஓட்டுவதை கூட தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் கோபமான மனநிலையில் வாகனத்தை ஓட்டினால், விபத்துக்கள் நிகழலாம். அல்லது சாலையில் வரும் மற்ற வாகன ஓட்டிகளுடனோ, பாதசாரிகளுடனோ சண்டை ஏற்படலாம். எனவே அனைத்து நேரங்களிலும் நிதானமான மனநிலையில் இருக்க முயற்சி செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications