மகளை தொடக்கூடாத இடத்தில் தொட்ட இளைஞர்! ஆத்திரத்தில் விமானத்திற்குள்ளேயே தந்தை செய்த தரமான சம்பவம்!
விமானத்திற்குள் தன் மகளை தகாத முறையில் தொட்ட இளைஞரிடம் தந்தை சண்டைக்குப் போன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விஸ்தாரா நிறுவனத்தின் விமானத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை தெளிவாக காணலாம் வாருங்கள்.
சமீபகாலமாக விமானங்களில் பயணிகள் விதிமுறைகளை மீறி நடந்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக விமானத்தில் பயணிக்கும் பயணிகள் சக பயணிகளுக்கு தொந்தரவு செய்யும் வகையிலும் விமான பணி பெண்களுக்கு தொந்தரவு செய்யும் நடந்து கொள்கின்றனர். இது குறித்த பல செய்திகள் வெளியில் வருகிறது.

விமானத்தில் பயணிகள் நடந்து கொள்ள வேண்டிய விதிமுறைகளை மீறி இவர்கள் செயல்படுகின்றனர். முன்பெல்லாம் இப்படியாக விதிமுறைகளை மீறி செயல்படும் பயணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவும், அரிதாகவும் இருந்தது. ஆனால் சமீப காலமாக இப்படியாக விதிமுறைகளை மீறும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந் நிலையில் விஸ்தாரா விமானத்திற்குள் பயணி ஒருவர் மோசமாக நடந்து கொண்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதில் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை பக்கத்து சீட்டில் இருந்த இளைஞர் தகாத முறையில் தொட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் அந்தப் பெண்ணும் இளைஞரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதை எடுத்து விமான பணி பெண்கள் அப்பகுதிக்கு வந்து நடந்தது குறித்து விசாரித்தனர். பக்கத்து வரிசை சீட்டில் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணின் தந்தை இது குறித்து அந்த இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதை இவர்களது பின் சீட்டில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பல இந்த பெண்ணை தகாத முறையில் தொட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.
இப்படியாக சமீப காலங்களில் வரிசையாக பல சம்பவங்களில் விமானத்திற்குள் பயணிகள் மோசமாக நடந்து கொள்ளும் சம்பவம் பதிவாகி வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் விமான நிறுவனங்கள் பயணிகளின் சேவை கருதி மோசமாக நடந்து கொள்ளும் பயணிகள் மீது பெரிய அளவில் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதுதான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமான நிறுவனங்கள் தங்கள் பயணிகளுக்கு விமான பயணம் மோசமாக அனுபவித்து விடக்கூடாது என்பதற்காக இவ்வாறாக செயல்படும் பயணிகளையும் தங்கள் நிறுவனத்தின் பயணிகள் தான் என்பதால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்கி வருகிறது. இதை சிலர் பயன்படுத்தி இவ்வாறு மோசமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் மோசமாக நடந்து கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க விமான நிறுவனங்கள் முன் வர வேண்டும்.


Click it and Unblock the Notifications








