அவ்வளவு ஆத்திரம்... விலையுயர்ந்த பென்ஸ் சொகுசு காரை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்... காரணம் என்ன தெரியுமா?

40 வயதுமிக்க நபரை நொய்டா காவல்துறையினர் சொகுசு காரை தீயிட்டு கொளுத்திய காரணத்திற்காக கைது செய்திருக்கின்றனர். இந்த அதிர்ச்சியளிக்கும் நிகழ்வுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அவ்வளவு ஆத்திரம்... விலையுயர்ந்த பென்ஸ் சொகுசு காரை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்... காரணம் என்ன தெரியுமா?

நொய்டாவின் சதர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயுஷ். இவருக்கு சொந்தமான மெர்சிடிஸ் பென்ஸ் காரையே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் தீயிட்டு கொளுத்திவிட்டு தப்பி ஓடியிருக்கின்றார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அந்த மர்ம நபர் ரன்வீர் என்பது தெரிய வந்திருக்கின்றது.

அவ்வளவு ஆத்திரம்... விலையுயர்ந்த பென்ஸ் சொகுசு காரை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்... காரணம் என்ன தெரியுமா?

சுமார் 40 வயதுமிக்க இவரை நொய்டா காவலர்கள் புதன் கிழமை (செப்டம்பர் 14) அன்று கைது செய்தனர். கார் தீயிட்டு கொளுத்தியதுகுறித்து காவல்துறையினர் ரன்வீரிடத்தில் விசாரணை மேற்கொண்டதில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரன்வீர் - ஆயுஷ் இவர்கள் இருவரிடையே பணம் பரிமாற்றம் பிரச்னை இருப்பதாகக் கூறப்படுகின்றது.

அவ்வளவு ஆத்திரம்... விலையுயர்ந்த பென்ஸ் சொகுசு காரை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்... காரணம் என்ன தெரியுமா?

அண்மையில், ஆயுஷின் இல்லத்தில் பிளம்பிங் வேலைக்காக ரன்வீர் பணியமர்த்தப்பட்டிருக்கின்றார். இந்த பணிக்கு ரூ. 5 லட்சம் வரை செலவாகும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு ஒப்புதல் அளித்த ஆயுஷ் கணிசமான தொகையை அட்வான்ஸாக அளித்து பணியைத் தொடங்கக் கூறியிருக்கின்றார். தற்போது அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது. மேலும், இதுவரை ரூ. 2.80 லட்சம் வரை அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

அவ்வளவு ஆத்திரம்... விலையுயர்ந்த பென்ஸ் சொகுசு காரை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்... காரணம் என்ன தெரியுமா?

அதை அடுத்து ரூ. 2.20 லட்சம் வரை ரன்வீருக்கு ஆயுஷ் தர வேண்டியிருக்கின்றது. ஆனால், இந்த தொகையை தர ஆயுஷ் மறுத்திருக்கின்றார். இதனால் மனமுடைந்த ரன்வீர், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயுஷின் பென்ஸ் சொகுசு காரை பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கின்றார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலேயே ரன்வீர் மீது வழக்கு பதிந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 435ன் கீழ் ரன்வீர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

அவ்வளவு ஆத்திரம்... விலையுயர்ந்த பென்ஸ் சொகுசு காரை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்... காரணம் என்ன தெரியுமா?

ஆகையால், விரைவில் ரன்வீல் சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், பணம் மறுத்த சொகுசு கார் உரிமையாளர் மீது என்ன மாதிரியான நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. அதேநேரத்தில், தீயால் ஏற்பட்ட சேதங்களைச் சரி செய்ய அவர்கள் தற்போது காப்பீடு நிறுவனத்தை நாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வளவு ஆத்திரம்... விலையுயர்ந்த பென்ஸ் சொகுசு காரை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்... காரணம் என்ன தெரியுமா?

ரன்வீர் தீ வைத்திருப்பது பென்ஸ் கார் என்பது மட்டுமே தற்போது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், அதன் மாடல் பற்றிய துள்ளியமான விபரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும், வெளிப்புற தோற்றத்தை வைத்து பார்க்கையில் அது மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவி ரக கார் என்பதை நம்மால் யூகிக்க முடிகின்றது. மிகவும் கவர்ச்சியான தோற்றம், அதிக சொகுசு வசதிகள் உள்ளிட்டவற்றிற்கு பெயர்போனவையாக இக்கார் காட்சியளிக்கின்றது.

அவ்வளவு ஆத்திரம்... விலையுயர்ந்த பென்ஸ் சொகுசு காரை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்... காரணம் என்ன தெரியுமா?

இந்த வாகனம் இந்திய சந்தையில் ரூ. 85.80 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஜிஎல்இ 300டி 4மேட்டிக் (GLE 300d 4MATIC) மற்றும் ஜிஎல்இ 400டி 4மேட்டிக் (GLE 400d 4MATIC) ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வுகளிலேயே இந்த சொகுசு கார் மாடலை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இரண்டுமே டீசல் மோட்டார்கள்தான் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அவ்வளவு ஆத்திரம்... விலையுயர்ந்த பென்ஸ் சொகுசு காரை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்... காரணம் என்ன தெரியுமா?

இதில், முதல் ஒன்று அதிகபட்சமாக 180kW பவரையும், இரண்டாவது ஒன்று 243kW பவரையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இவ்விரு மோட்டார்களிலும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்படுகின்றது. இதுதவிர எண்ணற்ற சொகுசு வசதிகளை அக்காரில் பென்ஸ் நிறுவனம் வாரி வழங்கியிருக்கின்றது.

இதனாலேயே செல்வந்தர்கள் பலரின் விருப்பமான காராக பென்ஸ் ஜிஎல்இ இருக்கின்றது. இத்தகைய சூப்பரான காரையே பண தகராறு காரணமாக தொழிலாளி ஒருவர் தீயிட்டு கொளுத்தியிருக்கின்றார். நேச்சுரல் வாய்ஸ் கன்ட்ரோல், தொடுதிரை வசதிக் கொண்ட எம்பியூஎக்ஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இ-ஆக்டீவ் பாடி கன்ட்ரோல் சஸ்பென்ஷன், நேவிகேஷன், வெயிக்கிள் மானிட்டரிங், வெயிக்கிள் செட்-அப், மெர்சிடிஸ் பென்ஸ் எமர்ஜென்சி கால் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

அவ்வளவு ஆத்திரம்... விலையுயர்ந்த பென்ஸ் சொகுசு காரை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்... காரணம் என்ன தெரியுமா?

இந்த படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது.

இவற்றுடன், பாதுகாப்பு அம்சங்களாக மல்டி பீம் எல்இடி, அடாப்டீவ் ஹைபீம் அசிஸ்ட் பிளஸ், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட பார்க்கிங் கேமிரா, பிளைன்ட் ஸ்பாட் அசிஸ்ட், ஆக்டீவ் பிரேக்கிங் அசிஸ்ட், எமர்ஜென்சி ஸ்பேர் வீல் மற்றும் டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, September 15, 2022, 13:42 [IST]
English summary
Angry man sets fire mercedes benz luxury suv here is why
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+