TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
பார்ச்சூனர் காரில் குப்பை அள்ளும் 'கெத்து' மாநகராட்சி.. ஆங்ரி பேர்டு கஸ்டமரால் டொயோட்டா அதிர்ச்சி
பார்ச்சூனர் காரை ஒழுங்காக சர்வீஸ் செய்து தராத காரணத்தால், அதனை கார்ப்பரேஷன் குப்பை அள்ளும் பணிக்கு, நன்கொடையாக வழங்குவதாக தொழிலதிபர் ஒருவர் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிறுவனத்தின் நன்மதிப்பு பாதிக்கப்படும் என்பதால், டொயோட்டா அதிர்ச்சியடைந்துள்ளது. இதுபற்றிய விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
ஆங்ரி பேர்டு பிஸ்னஸ்மேன்
மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த தொழிலதிபர் ஹேம்ராஜ் சௌத்ரி. கடந்த மார்ச் மாதம், டொயோட்டா பார்ச்சூனர் கார் ஒன்றை வாங்கினார். இதற்காக 39 லட்ச ரூபாயை, ஹேம்ராஜ் சௌத்ரி செலவழித்துள்ளார்.
ஆனால் வாங்கியது முதலே, டொயோட்டா பார்ச்சூனர் காரில் பிரச்னைகள் ஏற்பட்டு கொண்டே வந்தன. எனவே ரிப்பேர் செய்வதற்காக, அந்த காரை சர்வீஸ் சென்டரில், ஹேம்ராஜ் சௌத்ரி விட்டுள்ளார்.
எனினும் காரில் ஏற்பட்ட பிரச்னை சரி செய்யப்படவில்லை. எனவே மீண்டும் மீண்டும் சர்வீஸ் சென்டரில் காரை, ஹேம்ராஜ் சவுத்ரி விட்டுள்ளார். ஆனால் ரிப்பேர் மட்டும் சரி செய்து தரப்படவே இல்லை.
பொதுவாக ஒரு சில நிறுவனங்கள் காரை விற்பனை செய்வதோடு சரி. அதன்பிறகு சர்வீஸில் பெரிய அளவில் அவர்கள் அக்கறை காட்ட மாட்டார்கள். ஆனால் டொயோட்டா அப்படி அல்ல. வாடிக்கையாளர் சேவையில் நன்மதிப்பை பெற்ற நிறுவனம்தான் டொயோட்டா.
அப்படிப்பட்ட டொயோட்டா நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரிலேயே, ஒழுங்காக சர்வீஸ் செய்து தராத காரணத்தால், ஹேம்ராஜ் சௌத்ரி மிகுந்த ஆத்திரமடைந்தார். எனினும் அந்த டீலருக்கு நூதன முறையில் பாடம் புகட்ட அவர் எண்ணினார்.
குப்பை வண்டி ஆன பார்ச்சூனர்
பல லட்ச ரூபாய் செலவழித்து தான் வாங்கிய டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி கார் முழுவதும், குப்பைகளை நிரப்பினார் ஹேம்ராஜ் சௌத்ரி. பின்னர் நேராக சர்வீஸ் சென்டருக்கு சென்ற அவர், காரை குப்பைகளுடன் அப்படியே விட்டு விட்டு வந்து விட்டார்.
இதைப்பார்த்ததும் சர்வீஸ் சென்டரில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சில மணி நேரங்களில், அந்த கார் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து ஹேம்ராஜ் சௌத்ரிக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.
அந்த காரை போலீஸ் ஸ்டேஷனுக்கு யார் அனுப்பினார்கள்? என்பது குறித்த உறுதியான தகவல் தெரியவரவில்லை. ஆனால் சர்வீஸ் சென்டரில் உள்ளவர்கள்தான், போலீஸ் ஸ்டேஷனுக்கு காரை அனுப்பியிருக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை சற்று தாமதமாக அறிந்து கொண்ட ஹேம்ராஜ் சௌத்ரி, நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். ஆனால் மிகவும் கூல்-ஆக இருந்த ஹேம்ராஜ் செளத்ரி, அந்த காரை கார்ப்பரேஷனுக்கு நன்கொடையாக அளிப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதாவது குப்பை அள்ளும் பணிகளுக்கு அந்த காரை அவர்கள் பயன்படுத்தி கொள்ளட்டுமாம். என்ன ஒரு பெருந்தன்மை பாருங்கள்...!!!
ஹேம்ராஜ் சௌத்ரி கோபத்தில் இப்படி சொன்னாரா? அல்லது உண்மையில் அப்படி கூறினாரா? என்பது தெரியவில்லை. அதேபோல் அந்த கார் தற்போது எங்கு உள்ளது? என்ற தகவலும் வெளியாகவில்லை. எனினும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டொயோட்டா பார்ச்சூனர் காரில் குப்பை நிரம்பி காணப்படும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இதைவிட அசிங்கப்படுத்த முடியாது
டொயோட்டா பார்ச்சூனர், அதன் செக்மெண்டில் மிகவும் வெற்றிகரமாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்று. இந்த லக்ஸரி எஸ்யூவி காரானது, ஒரு மாதத்திற்கு சராசரியாக 2,000 என்ற எண்ணிக்கையிலாவது விற்பனை செய்யப்பட்டு விடும். அதாவது அதன் நெருக்கமான போட்டியாக கருதப்படும் ஃபோர்டு என்டேவர் காரை விட 2 மடங்கு அதிகம் விற்பனையாகிறது.
இந்திய மார்க்கெட்டில், டொயோட்டா பார்ச்சூனர் கார், பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. நம்பகத்தன்மை, சொகுசு, மிகவும் மலிவான பராமரிப்பு செலவு உள்ளிட்ட காரணங்களுக்காகவே, டொயோட்டா பார்ச்சூனர் கார் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.
மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடனான டொயோட்டா பார்ச்சூனர் காரில், 2.8 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 175 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இதன் ஆட்டோமெட்டிக் வேரியண்ட்கள் 450 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியவை.
இதுதவிர 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் கூடிய வேரியண்டையும் டொயோட்டா வழங்குகிறது. இது 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இப்படிப்பட்ட டொயோட்டா பார்ச்சூனர் காரை, ஹேம்ராஜ் சவுத்ரியை விடவும் வேறு யாராலும் அசிங்கப்படுத்த முடியுமா என்ன?
Video Source: LoksattaLive
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
02.சிறந்த மைலேஜ் தரக்கூடிய டாப் 5 பைக்குகளின் பட்டியல்
03.அரசு எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் திட்டம் தள்ளிவைப்பு; சார்ஜ் ஏற்றும் மையங்களை நிறுவ முத்தாய்ப்பு