பைக்ல வந்தவர் மேல வெறி! நடுரோடுனு கூட பாக்காம பெண் செய்த காரியத்தால் அதிர்ச்சி! கொஞ்சம் கூட கண்ட்ரோல் இல்ல!
இந்திய சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்படுவது என்பது தற்போது சர்வ சாதாரணமான ஒரு நிகழ்வாக மாறி விட்டது. வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சாலையில் ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொள்ளும் ஏராளமான வீடியோக்கள் (Videos) இணையத்தில் வலம் வந்து கொண்டுள்ளன.
இந்த வரிசையில் தற்போது வேகமாக பரவி வரும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று, காண்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இருக்கிறது. கேடிஎம் ஆர்சி 390 (KTM RC 390) பைக்கை, பெண் ஒருவர் சேதப்படுத்துவதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.

இது சற்று விலை (Price) உயர்ந்த பைக் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கேடிஎம் ஆர்சி 390 பைக் 3.16 லட்ச ரூபாய் முதல் 3.18 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
சம்பவத்தன்று, பைக்கை சேதப்படுத்திய பெண் சாலையை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது கேடிஎம் ஆர்சி 390 பைக், அந்த பெண் மீது மோதுவதை போல் வந்ததாக தெரிகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை. எனினும் மோதுவது போல் வந்த காரணத்தால், அந்த பெண் கோபம் அடைந்துள்ளார்.

இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும். மோதுவதை போல் வந்த காரணத்தால், அந்த பெண் கோபம் அடைந்துள்ளார் என்பது மட்டுமே நமக்கு தெரியவந்துள்ளது. ஆனால் தவறு பைக் ரைடர் மீதா? அல்லது அந்த பெண் மீதா? என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை. அப்படி இருக்கும்போது, அந்த பெண் நடந்து கொண்டது தவறு என்றுதான் கருத தோன்றுகிறது.
விபத்து தவிர்க்கப்பட்டு விட்ட சூழலில், அந்த பெண்ணுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விட்டதா? என்பதை பார்ப்பதற்காக கேடிஎம் ஆர்சி 390 பைக்கின் ரைடர் திரும்பி வந்துள்ளார். அப்போதுதான் அந்த பெண் பைக்கை சேதப்படுத்தி, சாமியாடியுள்ளார். இதற்கிடையே பைக் ரைடருக்கும், பெண்ணுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதை பார்த்ததும், நிறைய பேர் அங்கு கூடி விட்டனர்.
இதில் ஒரு சிலர் அந்த பெண்ணுக்கு ஆதரவாக பேசியுள்ளனர். இந்த ஆதரவு காரணமாக, அந்த பெண் தனது குரலை மேலும் உயர்த்த தொடங்கி விட்டார். உண்மையில் என்ன நடந்தது? என்பது தெளிவாக தெரியாத காரணத்தால், தவறு யார் மீது என்ற முடிவுக்கு வர இயலவில்லை. ஆனால் எந்தவொரு சூழலிலும் பொறுமையை கையாள வேண்டும் என்ற கருத்துப்படி, அந்த பெண் நடந்து கொண்டதை நிச்சயம் தவறு என கூறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சாலைகளில் பாதசாரிகள் திடீர் திடீரென வாகனத்தின் குறுக்கே வருவார்கள். எனவே வாகனத்தை எப்போதும் மிதமான வேகத்தில் ஓட்டுவது நல்லது. அதிவேகமாக சென்றால், வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போய் விபத்துக்கள் நிகழலாம். அதேபோல் சாலைகளை கடப்பவர்களும் இரு புறமும் பார்த்து விட்டு, கவனமாக கடப்பது சிறந்தது.


Click it and Unblock the Notifications








