கணவன் மீதான கோபத்தில் காரை அடுத்து நொறுக்கிய பெண்!
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழிக்கு ஏற்ப, பிரேசிலில் ஒரு பெண் கணவன் மீது ஏற்பட்ட கோபத்தில் அவரது காரை அடித்து நொறுக்கி, சின்னாபின்னாக்கிய வீடியோ யூ-ட்யூபில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கணவன் மீது கோபம் வந்தால், அதிகப்படியாக கையிலுள்ள டிவி ரிமோட்டோ அல்லது மொபைல்போனை தூக்கி அடிக்கும் பெண்கள் பற்றிய செய்திகளை படித்திருப்பீர்கள். ஆனால், ஒரு கார் என்ன பாடு படுகிறது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. இந்தளவு கணவன் மீது அப்பெண்ணுக்கு கோபம் ஏற்பட பெரிதாக என்ன காரணமாக இருக்கும் என்று தலையை பிய்த்துக் கொள்ளாமல் ஸ்லைடருக்கு வந்துவிடுங்கள்.

காரணம்
இந்தளவு அப்பெண்ணுக்கு கோபம் ஏற்பட வேறு என்ன காரணம் இருந்து விடப்போகிறது. பெண்ணின் கணவர் கள்ளக்காதலியுடன் கார் நின்றிருந்த பகுதியில் இருந்த ஒரு ரெஸ்ட்டாரண்டில் வைத்து கையும் களவுமாக பிடித்துவிட்டார்.

தலைக்கேறிய கோபம்
கட்டிய மனைவி கல்லு மாதிரி இருக்க, இன்னொரு பெண்ணுடன் கூத்தடிப்பதை நேரில் கண்டு கொந்தளித்துவிட்டார். வந்த கோபத்தை அப்படி, அவரது கணவரின் காரின் மீது காட்டு காட்டு என்று காட்டிவிட்டார்.

என்ன பாவம் செய்தது?
அந்த கார் என்ன பாவம் செய்து பிறந்தது என்று தெரியவில்லை. அப்பெண்ணின் ஆக்ரோஷத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சின்னாபின்னாமாகிவிட்டது.

ஆத்திரம் தீரும் வரை...
கல்லால் அடித்து கார் கண்ணாடிகளை உடைத்த அப்பெண், கோபம் தீராமல் கூரையின் மீது ஏறி நின்று கூரையை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டார். இதில், அந்த கார் உருக்குலைந்தது.

யூ-ட்யூபில் ஹிட்...
அப்பெண் காரை உடைக்கும் வீடியோ யூ-ட்யூபில் வெளியாகியது. இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது.

கைது?
பொது இடத்தில் வைத்து காரை சின்னாபின்னாமாக்கிய அப்பெண்ணை போலீசார் இதுவரை கைது செய்யவில்லையாம். மேலும், கணவனும் புகார் கொடுக்காததால், நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது.
வீடியோ
கோபத்தில் காரை உடைக்கும் காட்சிகள் அடங்கிய யூ-ட்யூப் வீடியோ.


Click it and Unblock the Notifications