கடனை திருப்பி கொடுக்காத மருமகன் காரை கிரேனில் தூக்கிய மாமியார்!!
கொடுத்த கடனை பலமுறை கேட்டும் திருப்பிக் கொடுக்காத மருமகன் காரை கிரேன் வைத்து தூக்கி வந்துவிட்டார் துணிகர மாமியார். சீனாவில்தான் இந்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
வாங் கின் என்ற அந்த பெண்மணியிடம் அவரது மருமகன் தொழிலில் முதலீடு செய்வதற்காக அரை மில்லியன் யுவான் கடன் வாங்கியுள்ளார். பல முறை கேட்டும் பலனில்லை. இதற்கு முடிவு கட்டும் விதத்தில் ஒரு கிரேனை வாடகைக்கு எடுத்து மருமகன் வீட்டில் நிறுத்தியிருந்த காரை சத்தம் போடாமல் தூக்கி வந்துவிட்டார்.
அத்தோடு, அந்த காரை தனது வீட்டு மாடியின் பால்கனியில் நிறுத்திவிட்டார். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த காட்சிகளை ஸ்லைடரில் காணலாம்.

கிரேனில் தூக்கப்படும் கார்
மருமகன் வீட்டிலிருந்து நைசாக கிரேனில் தூக்கப்படும் ஆடி கார்.

மாமியார் வீடு
தனது வீட்டுக்கு காரை கிரேன் மூலம் எடுத்து வரும் மாமியார்.

பால்கனி பாதுகாப்பு
கீழே நிறுத்தியிருந்தால் திரும்ப எடுத்துச் சென்றுவிடுவார் என்ற அச்சத்தில் தனது வீட்டு மாடியின் பால்கனியில் காரை பத்திரமாக நிறுத்தியிருக்கும் மாமியார்.

காரில் தொங்கும் மானம்
ஏம்பா, மவராசனே, சீக்கிரம் காசை கொடுத்துட்டு காரை திரும்ப வாங்கிக்கப்பா. கிரேனில் உன்னோட கார் மட்டுமல்ல, மானமும் சேர்த்து தொங்குதப்பா.


Click it and Unblock the Notifications








