பாவம்யா! சாதாரண ஹூண்டாய் காரில் வந்தது அவரா! ரோல்ஸ் ராய்ஸ், லம்போர்கினி கார்களில் சுற்றியவருக்கு இந்த நிலைமையா
இந்தியாவில் ஒரு காலத்தில் மிகவும் முக்கியமான தொழில் அதிபர்களில் (Businessman) ஒருவராக இருந்தவர் அனில் அம்பானி (Anil Ambani). ஆனால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அனில் அம்பானி நொடிந்து போய் விட்டார். இந்த சூழலில் அனில் அம்பானியின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரல் வீடியோவில், அனில் அம்பானி சாதாரணமான கார் ஒன்றில் பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அனில் அம்பானி பயணம் செய்தது ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) ஆகும். இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள எலெக்ட்ரிக் கார்களில் (Electric Car) ஒன்று.

ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை மிகவும் சாதாரணமான ஒரு கார் என்றெல்லாம் சொல்லி விட முடியாது. ஏனெனில் இதன் விலை 45.95 லட்ச ரூபாயாக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் அனில் அம்பானியை பொறுத்தவரையில் இது சாதாரணமான ஒரு கார்தான்.
ஏனெனில் கடந்த காலங்களில் ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் (Rolls Royce Phantom), லம்போர்கினி கல்லார்டோ (Lamborghini Gallardo) போன்ற விலை உயர்ந்த கார்களில் எல்லாம் அனில் அம்பானி வலம் வந்ததை நாம் பார்த்துள்ளோம். இது மட்டுமல்லாது, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் (Land Rover Range Rover Vogue), மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class) போன்ற கார்களிலும் கூட அனில் அம்பானியை பார்க்க முடிந்துள்ளது.

அப்படி இருக்கும்போது தற்போது ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் அவர் வலம் வந்துள்ளதால், நெட்டிசன்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் காரில் இருந்து ஹூண்டாய் நிறுவனத்தின் காரை பயன்படுத்தும் நிலைக்கு அனில் அம்பானி தள்ளப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து கொண்டுள்ளனர்.
சரி, நாம் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு வருவோம். இந்த எலெக்ட்ரிக் காரில், 72.6 kWh பேட்டரி தொகுப்பு (Battery Pack) பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 631 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) ஆகும்.
அத்துடன் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் பல்வேறு அதிநவீன வசதிகளும் (Features) வழங்கப்பட்டுள்ளன. இதில், 12.3 இன்ச் அளவுடைய 2 திரைகள் மிகவும் முக்கியமானவை ஆகும். இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் ஆக செயல்படும். மற்றொன்று இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக செயல்படும். இதுதவிர ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மற்றும் அடாஸ் போன்ற வசதிகளும் இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த வைரல் வீடியோ, மும்பை (Mumbai) நகரில் எடுக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு (Ayodhya Ram Mandir) சென்று விட்டு திரும்பியபோதுதான் அனில் அம்பானி ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் கேமரா கண்களில் சிக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications








