ஸ்ரீதேவிக்கும், இந்த நடிகருக்கும் இடையே இப்படி ஒரு கனெக்ஸனா! இந்த உண்மை எல்லாம் இப்பதான் நமக்கு தெரிஞ்சிருக்கு
பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் பலரும் மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு மூத்த நடிகர்களும் கூட விதிவிலக்கு அல்ல. இளம் நடிகர், நடிகைகளுக்கு போட்டியாக அவர்களும் சொகுசு கார்களை வாங்கி குவிக்கின்றனர். இதற்கு அனில் கபூர் (Anil Kapoor) ஒரு உதாரணம். கடந்த 2023ம் ஆண்டின் இறுதியில் வெளியான அனிமல் (Animal) திரைப்படத்தில் அனில் கபூர் நடித்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இவரது கார் கலெக்ஸன் (Car Collection), நீங்கள் நினைப்பதை விட மிகவும் பெரியது.
இதில், லம்போர்கினி கல்லார்டோ ஸ்பைடர் (Lamborghini Gallardo Spyder), மெர்சிடிஸ் மேபெக் எஸ்500 (Mercedes Maybach S500), ஆடி ஏ8 எல் (Audi A8 L), லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Land Rover Range Rover Sport), பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) மற்றும் வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90) போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு விலை உயர்ந்த புதிய கார் ஒன்றை அனில் கபூர் வாங்கியுள்ளார். அது ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Range Rover Autobiography) ஆகும். இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்தது. சுமார் 20 நாட்களுக்கு முன்புதான், அனில் கபூர் இந்த காரை வாங்கியுள்ளார்.
அனில் கபூர் தேர்வு செய்திருப்பது கருப்பு நிறம் ஆகும். கருப்பு நிறத்தில் முரட்டுத்தனமாக காட்சியளிக்கும் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில், அனில் கபூர் தனது வீட்டிற்கு வந்து இறங்கிய வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவை, அனில் கபூரின் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் தற்போது அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். அனில் கபூர் வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில், 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 394 ஹெச்பி பவர் மற்றும் 550 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக காரின் 4 சக்கரங்களுக்கும், இன்ஜின் உருவாக்கும் சக்தி செலுத்தப்படுகிறது.
எனவே ஆஃப்-ரோடு சாகச பயணங்களை மேற்கொள்வதற்கும் கூட, ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் ஏற்றது. இந்த காரில், 13.2 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் பிரீமியம் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளையும் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் பெற்றுள்ளது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) 2.60 கோடி ரூபாய் ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 3.25 கோடி ரூபாய் வரை வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தீபாவளி (Diwali) பண்டிகை காலத்தை முன்னிட்டு, பிரபல நடிகர், நடிகைகள் பலரும் மிகவும் விலை உயர்ந்த கார்களை தற்போது வாங்கி வருகின்றனர். இந்த வரிசையில்தான் அனில் கபூரும் தற்போது ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரை வாங்கியிருப்பார் என நாங்கள் கருதுகிறோம்.
பாலிவுட் நடிகர் அனில் கபூர் தமிழ் ரசிகர்களுக்கு பெரிதாக பரிட்சயமில்லாதவர்தான். ஆனால் இவரும், தமிழ் நடிகையான மறைந்த ஸ்ரீதேவியும் (Sridevi) நெருங்கிய உறவினர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பிரபல சினிமா தயாரிப்பாளரான சுரீந்தர் கபூர்தான் (Surinder Kapoor), அனில் கபூரின் தந்தை ஆவார்.
இவருக்கு 3 மகன் மற்றும் 1 மகள் என மொத்தம் 4 குழந்தைகள். இதில் ஒருவர்தான் அனில் கபூர். எஞ்சியவர்கள் போனி கபூர் (Boney Kapoor), (Sanjay Kapoor) மற்றும் ரீனா கபூர் மார்வா (Reena Kapoor Marwah) ஆகியோர் ஆவார். இதில், போனி கபூர் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமானவர்.
ஏனெனில் இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் ஆவார். அத்துடன் இவர் அஜீத் குமார் நடிப்பில் உருவான வலிமை (Valimai) உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக உள்ள போனி கபூரின் தம்பிதான் அனில் கபூர். எனவே நடிகை ஸ்ரீதேவி இவருக்கு அண்ணி முறை வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது தமிழ் ரசிகர்கள் நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








