விலையுயர்ந்த லக்சரி மெர்சிடிஸ் காரை புதுசா வாங்கி இருப்பது இந்த பிரபல நடிகரா!! தீயாய் பரவும் படங்கள்!

பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர் புதியதாக விலையுயர்ந்த மெர்சிடிஸ்-மேபக் எஸ்580 காரை வாங்கி உள்ளார். பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் என்றாலே மெர்சிடிஸ் மேபக் கார்களை அதிகளவில் வாங்குகின்றனர் என்ற பேச்சு ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அதனை உண்மை என்பது போல் நடிகர் அனில் கபூர் தற்போது லக்சரியான மேபக் ஒன்றை காரை வாங்கி உள்ளார்.

பாலிவுட் சினிமா நட்சத்திரங்களையும், சொகுசு கார்களையும் பிரிக்கவே முடியாது எனலாம். ஏனெனில், ஒவ்வொரு மாதமும் யாராவது ஒரு பாலிவுட் ஸ்டார் விலையுயர்ந்த காரை வாங்கி விடுகின்றனர். குறிப்பாக, மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.எஸ்600 கார் கிட்டத்தட்ட அனைத்து பாலிவுட் சினிமாக்கார்களின் வீடுகளிலும் உள்ளது.

anil kapoors mercedes maybach s580

அந்த அளவிற்கு, ஜி.எல்.எஸ்600 காரை இந்த பாலிவுட் ஸ்டார் வாங்கியுள்ளார் என நம் செய்தித்தளத்திலேயே கடந்த சில ஆண்டுகளில் பலமுறை பார்த்துள்ளோம். இந்த வரிசையில், தற்போது முன்னணி பாலிவுட் நடிகர் அனில் கபூர் புதியதாக விலையுயர்ந்த மெர்சிடிஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால், அனில் கபூர் வாங்கி இருப்பது மெர்சிடிஸ்-மேபக் எஸ்580 ஆகும்.

மேபக் எஸ்580 காரை கடந்த 2022 மார்ச் மாதத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. இதன் எக்ஸ்-ஷோரும் விலையாக ரூ.2.5 கோடி உள்ளது. மெர்சிடிஸ் எஸ்680 காரின் ஷார்ட்-வீல்பேஸ் வெர்சனாக பார்க்கப்படும் மேபக் எஸ்580 காரை முழுவதுமாக வெளிநாட்டில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தயாரித்து, இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது.

anil kapoors mercedes maybach s580

மெர்சிடிஸ்-மேபக் என்றாலே அவை தனி வித்தியாசமாக, மிகவும் விலையுயர்ந்த கார் போல் தெரிபவை. அவ்வாறே, அனில் கபூர் வாங்கி இருக்கும் மேபக் எஸ்580 காரும் காட்சியளிக்கிறது. குறிப்பாக, காரின் முன்பக்கத்தில் க்ரில் பகுதியில் கோல்டு நிறம் ஜொலிப்பதை, அனில் கபூர் காரை டெலிவிரி எடுக்கும்போது எடுக்கப்பட்ட படங்களில் காணலாம்.

அதேபோல், முன்பக்க பம்பரிலும் க்ரோம் வெண்ட்ஸை காண முடிகிறது. அத்துடன், அலாய் சக்கரங்களும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இந்த காரில் பொருத்தப்படுகின்றன. அனில் கபூர் வாங்கியுள்ள மேபக் எஸ்580 கார் எமரால்ட் பச்சை நிறத்தில் உள்ளது. இந்த காரின் கேபினுக்குள் இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு என மொத்தம் 5 திரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

இதில், முன்பக்க இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் 12.3 இன்ச்களிலும், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் 12.8 இன்ச்களிலும் உள்ளன. காரின் கேபின் முழுவதுமாக நப்பா லெதரால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இந்த மெர்சிடிஸ் கார் எந்த அளவிற்கு பிரம்மாண்டம் என்றால், இந்த காரினுள் 10 லிட்டர்கள் கொள்ளளவில் குளிர்சாதன பெட்டி உள்ளது.

இந்தியா மெர்சிடிஸ்-மேபக் எஸ்580 கார் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் உடன் விற்பனை செய்யப்படுகிறது. 48 வோல்ட் மைல்ட் ஹைப்ரீட் சிஸ்டத்துடன் வழங்கப்படும் இந்த என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 496 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இந்த என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அனில் கபூர் போன்ற இந்தியா முழுவதும் அறியப்பட்ட நபரால் ரூ.2.5 கோடியில் கார் வாங்குவது எல்லாம் பெரிய விஷயமே இல்லை. காரை டெலிவிரி செய்தது மட்டுமில்லாமல், அனில் கபூருக்கு தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள் மற்றும் இனிப்புகளையும் மெர்சிடிஸ் நிறுவனம் வழங்கியுள்ளது என்றால், அந்த அளவிற்கு அனில் கபூர் ஓர் முக்கியமான கஸ்டமராக விளங்குகிறார்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 9, 2023, 22:43 [IST]
English summary
Anil kapoor takes delivery of mercedes maybach s580 check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+