அணிமல் படத்தின் யாரோ யாரோ பாடலுக்கு இசையமைத்தவர் வாங்கி இருக்கும் காரை பாத்தீங்களா! ஊரு உலகமே மிரண்டு நிக்குது

தமிழ் திரையுலகில் 2016 ஆம் ஆண்டில் பிரபு தேவா மற்றும் தமன்னா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தேவி. இந்த படத்தில் நா முத்துக்குமார் எழுத்துக்களில் உருவாக்கப்பட்ட பாடல்கள் 'ரங் ரங் ரங்கோலி' மற்றும் 'பேசாமல் பேசி பார்த்தேன்' ஆகும். இந்த இரு பாடல்களுக்கும் இசை அமைத்தவரே விஷால் மிஷ்ரா ஆவார்.

இவர் இதுபோன்று பல முன்னணி திரைப்படங்களில் பணியாற்றி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. பால பாடல்களுக்கு இசை அமைத்தும், பாடியும் இருக்கின்றார் விஷால் மிஷ்ரா. அணிமல், டிரிபிள் ஆர் (RRR) மற்றும் டங்கி போன்ற முன்னணி திரைப்படங்களிலும் இவர் பணியாற்றி இருக்கின்றார் கவனிக்கத்தகுந்தது.

Vishal mishra buys merceds maybach gls600

இத்தகைய முன்னணி இசை அமைப்பாளர் மற்றும் பாடகரே தற்போது இந்தியாவின் விலை உயர்ந்த கார் மாடல்களில் ஒன்றான மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 (Mercedes Maybach GLS 600) கார் மாடலை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றார். இந்த கார் மாடலின் ஆரம்ப விலையே ரூ. 2.43 கோடி ஆகும்.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 3 கோடியைத் தொடும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய விலை உயர்ந்த கார் மாடலை வாங்கி இருப்பதனாலேயே அவர் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகத் தொடங்கி இருக்கின்றார். இதே கார் மாடலையே சமீபத்தில் கங்கனா ரனாவத் வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

தற்போது பாஜகவின் மண்டியா தொகுது எம்பி வேட்பாளராக தேர்தலில் நிற்கும் இவர் இந்த சொகுசு காரிலேயே வலம் வர தொடங்கி இருக்கின்றார். இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் மிக வேகமாக பகிரப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே திரையுலகைச் சேர்ந்த மற்றுமொரு பிரபலம் மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 சொகுசு காரை வாங்கி இருக்கின்றார்.

இதன் வாயிலாக இந்திய திரையுலகினரின் பிரியமான கார் மாடல் மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 என்பது தெரிய வந்திருக்கின்றது. ஷோரூமிற்கு குடும்பத்துடன் விரைந்த விஷால் மிஷ்ரா, அங்கேயே வைத்து அக்காருக்கு ஆரத்தி காண்பித்து வீட்டுக்கு எடுத்துச் சென்றிருக்கின்றார். மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்600 ஓர் சொகுசு அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.

இந்த காரில் பயணிக்கும்போது சாலையில் உள்ள பள்ளம் மேடுகள் என்பது துளியளவும் தெரியாது. பஞ்சை மெத்தையில் இருப்பதைப் போன்ற அனுபவமே இதில் கிடைக்கும். இந்த காரை இந்தியாவிலேயே ஏகப்பட்ட நடிகர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், நடிகை நயன்தாராவும் மேபேக் ஜிஎல்எஸ்600 காரை பயன்படுத்தி வருகின்றார்.

இவர் மட்டுமில்லைங்க ரன்வீர் சிங் மற்றும் அவரது மனைவி தீபிகா படுகோன், மலையாள நடிகர் மம்மூட்டி உள்ளிட்டோரும் மேபேக் ஜிஎல்எஸ்600 காரை பயன்படுத்தி வருகின்றனர். பனோரமிக் சன்ரூஃப், சிறிய குளிர்சாதன பெட்டி, பர்மெஸ்டர் ஆடியோ சிஸ்டம், விர்சுவல் அசிஸ்டன்ட், பொழுதுபோக்கு திரை போன்ற பிரீமியம் தர அம்சங்களும் இந்த சொகுசு காரில் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, எம்பியூஎக்ஸ், வாய்ஸ் கன்ட்ரோல், 12.3 அங்குல தொடுதிரை மல்டி மீடியா திரை, 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் திரை, ஸ்டியரிங் வீல் டச் கன்ட்ரோல் பட்டன், 7 யுஎஸ்பி சி போர்ட், பின் பக்கத்திலும் ஒயர் இல்லாமல் சார்ஜ் செய்யும் வசதி, ஹெட் அப் திரை, ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஒயர்ரெல் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

பிரீமியம் அம்சங்களும் பல வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், ஹூட் மற்றும் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, இருக்கையில் மசாஜ் வசதி, கோப்பைகளை குளிர்வித்தல் மற்றும் ஹூட் செய்யும் வசதி, சாவியே இல்லாமல் பயணிக்கும் வசதி, கேபினில் உள்ள காற்றை வடி கட்டும் வசதி, நெப்பா லெதர் இருக்கை போன்ற அம்சங்களும் மேபேக் ஜிஎல்எஸ் 600 சொகுசு எஸ்யூவி காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த கார் மைலேஜ் தருவதிலும் சிறந்ததாக விளங்குகின்றது. இதற்காக மைல்டு ஹைபிரிட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சம் 22பிஎஸ் மற்றும் 250என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், 557பிஎஸ் மற்றும் 730என்எம் டார்க்கை வழங்கக் கூடிய 4.0லிட்டர் வி8 மோட்டாரும் வழங்கப்பட்டு இருக்கின்றது. 9ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இந்த காரில் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாகவே காரின் அனைத்து வீல்களுக்கும் இயக்க திறன் கடத்தப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மேபேக் ஜிஎல்எஸ் 600 சொகுசு காருக்கு செல்வந்தர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே கங்கனா ரனாவத்தைத் தொடர்ந்து விஷால் மிஷ்ரா வாங்கி இருக்கும் சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 10, 2024, 5:00 [IST]
English summary
Animal music director buys maybach gls600
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+