இவரு நினைச்சா காஸ்ட்லியான காரையே வாங்கலாம்! ஆனா இந்த காரை வாங்கிட்டாருன்னா சும்மாவா?

மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி கார்கள் இந்திய பிரபலங்கள் மத்தியில் தற்போது பிரபலமாகி வருகிறது. பிரபலங்கள் பலர் இந்த காரை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டின் மிக முக்கியமான சினிமா இசையமைப்பாளர் ஒருவர் இந்த காரை வாங்கியுள்ளார். இதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் தனது வித்தியாசமான எலெக்ட்ரிக் கார்களை வரிசையாக களம் இறக்கி வருகிறது. இது இந்தியா முழவதும் மிகப்பெரிய அளவில் பலரை ஈர்த்துள்ளது. இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் பிஇ6 என்ற காரை இந்திய மார்கெட்டில் களம் இறக்கியுள்ள நிலையில் பலர் இந்த காரை வாங்கி வருகின்றனர். இந்திய பிரபலங்கள் மத்தியிலும் இந்த கார் பிரபலமாகி வருகிறது.

Anirudh buys Mahindra BE 6

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் சமீபத்ததில் இந்த காரை வாங்கி தனது கலெக்ஷனில் சேர்த்துள்ளார். இவர் இந்த காரில் பயணித்த வீடியோ தற்போது விக்கி டாக்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் உள்ள கார் நம்பரை வைத்து நாம் பரிவாகன் தளத்தில் பார்த்த போது இந்த கார் கடந்த ஏப்ரல் மாதமே வாங்கப்பட்ட்ளது தெரிகிறது.

இந்த கார் சிவப்பு நிற பிஇ6 காரின் டாப்வேரியன்டான பேக் 3 வேரியன்ட் கார் தான். இந்த செக்மெண்டிலேயே பவர்ஃபுல் எஸ்யூவியாக இருக்கிறது. இந்த கார் கடந்த நிதியாண்டு மார்கெட்டிற்கு வந்தது. தற்போது இதன்டெலிவரி துவங்கியுள்ளது. இந்த காரில் பிரிமியமான ஏர்வென்ட்கள், 20 இன்ச் வீல், டிராப் டவுன் எல்இடி டிஆர்எல், கனெக்டெட்ட எல்இடி டெயில் லைட்டுகள், வெல்கம் ஃபங்சன், ஸ்டியரிங் வீலில் இலுமினேட்டட் பிஇ லோகோ, எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்டபிள் சீட்டுகள், லெவல் 2 அடாஸ், ஆட்டமோட்டிக் வைப்பர் மற்றும் ஹெட்லைட்டுகள், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, ஹார்மன் கார்டன் ஸ்பீக்கர் சிஸ்டம், பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

Anirudh buys Mahindra BE 6

இந்த காரில் 59kWh மற்றும் 79kWh ஆகிய 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன சிறிய பேட்டரி 535 கி.மீ ரேஞ்சையும், பெரிய பேட்டரி 682 கி.மீ ரேஞ்சையும் வழங்குகிறது. இந்த காரின் டாப் வேரியன்டான பேக் 3 வேரியன்டின் விற்பனை மட்டுமே முதலில் துவங்கியது. தற்போத பேக் 2 வேரியன்டின் டெலிவரியும் துவங்கியுள்ளது. இந்த காிரன் பேட்மேன் எடிசன் சமீபத்தில் அறிமுகுமானது வெறும் 999 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டநிலையில் 135 நொடிகளில் அத்தனை கார்களும் விற்று தீர்ந்துவிட்டனர்.

இதில் சிறிய ரக பேட்டரி228 பிஎச்பி பவரையும் 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பெரிய பேட்டரி காரில் 282 பிஎச்பி பவரையும் 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உரவாக்கப்பட்டுள்ளது. இந்தகாரின் விலையை பொருத்தவரை ரூ18.90 லட்சம் முதல் ரூ26.90 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரை வாங்கும் முதல் பிரபலம் இவர் அல்லது இதற்கு முன்னர் வட இந்தியாவில் அனுராக் கஷ்யப், நடிகை ஆகான்ஷா சிங்,தற்போது அனிருத் ஆகியோர் இதை வாங்கியள்ளது. இந்த காருக்கான சவுண்ட் டிசைனை இசையமைப்பாளர் ஏஆர்ரஹ்மான் செய்திருந்தார். இவர் எக்ஸ்இவி 9இ காரை வாங்கியுள்ளார் என்பது முக்கியமான தகவல். இது குறித்து உங்கள் கருத்துக்களையும், நீங்கள் இந்த காரை வாங்குவீர்களா? வாங்கினால் அதற்கு என்ன காரணம், வாங்கவில்லை என்றால் ஏன் வாங்கமாட்டீர்கள் என்பதையும் கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, August 29, 2025, 12:15 [IST]
English summary
Anirudh buys mahindra be6 rajinikanth coolie music director
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X