அப்பாவுக்கு சூப்பரான காரை வாங்கி கொடுத்த இன்ஸ்டா பிரபலம்! அட இந்த பொண்ணா அது! நாம கூட பாத்திருக்கோமே!
நீங்கள் சமூக வலை தளங்களில் மிகவும் பிரபலமானவர் என்றால், அஞ்சலி அரோராவை (Anjali Arora) பற்றி நிச்சயம் தெரிந்து வைத்திருப்பீர்கள். இன்ஸ்டாகிராமில் (Instagram) இவரை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இவர் தற்போது தனது தந்தையை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
ஆம், தனது தந்தைக்கு மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரை அஞ்சலி அரோரா தற்போது பரிசாக வழங்கியுள்ளார். ஹரியானா மாநிலம் குர்கான் நகரில் உள்ள ஒரு மாருதி சுஸுகி நெக்ஸா ஷோரூமில், இந்த கார் டெலிவரி எடுக்கப்பட்டுள்ளது. சிக்மா (Sigma), டெல்டா (Delta), ஜெட்டா (Zeta) மற்றும் ஆல்பா (Alpha) என மொத்தம் 4 வேரியண்ட்களில், மாருதி சுஸுகி பலேனோ கார் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த 4 வேரியண்ட்களிலும் 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷன்தான் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 90 பிஎஸ் பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
மாருதி சுஸுகி பலேனோ காரில் டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்தியாவில் அதிகம் விற்பனையாக கூடிய பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி பலேனோ திகழ்கிறது.
பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன், சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுவது மாருதி சுஸுகி பலேனோ காரின் முக்கியமான ப்ளஸ் பாயிண்ட்களில் ஒன்றாகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆரம்ப விலை (Price) 6.61 லட்ச ரூபாயாக இருந்து வருகிறது.
அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.88 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஹூண்டாய் ஐ20 (Hyundai i20), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) மற்றும் டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) உள்ளிட்ட கார்களுடன் மாருதி சுஸுகி பலேனோ போட்டியிட்டு கொண்டுள்ளது.
இதில், டொயோட்டா க்ளான்சா காரானது, மாருதி சுஸுகி பலேனோ காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய 2 நிறுவனங்களுக்கும் கூட்டணி இருப்பதால், அவை கார்களை பரிமாறி கொண்டு வருகின்றன. இந்த கூட்டணியின் அடிப்படையில் விற்பனை செய்யப்படும் ஒரு கார்தான், டொயோட்டா க்ளான்சா!
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வளர்த்து ஆளாக்கிய தந்தைக்கு, மகள் புத்தம் புதிய காரை பரிசாக வழங்குவது உண்மையிலேயே அருமையான விஷயம்தான்! இதன் காரணமாக அஞ்சலி அரோரா தந்தையின் மனம் குளிர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தந்தைக்கு புதிய காரை பரிசளித்த அஞ்சலி அரோராவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


Click it and Unblock the Notifications