அன்னா ஹசாரேவுக்கு 'தம்பி'யாக தோள் கொடுத்த ஸ்கார்ப்பியோ நாளை ஏலம்!

By Saravana

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பயன்படுத்தி வந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோ நாளை அவரது சொந்த ஊரில் ஏலம் விடப்படுகிறது.

ஊழலுக்கு எதிராக அவர் நடத்திய பல போராட்டங்களின்போது அவருக்கு உறுதுணையாக இருந்த வாகனம் இது. எனவே, இதனை மிகவும் மதிப்பு வாய்ந்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அன்னா டிரஸ்ட்டுக்கு சொந்தமானது

அன்னா டிரஸ்ட்டுக்கு சொந்தமானது

அன்னா ஹசாரே பெற்ற விருதுகளின் மூலம் கிடைத்த நிதியை நிர்வகித்து வரும் சுவாமி விவேகானந்தர் குருத்நாத அறக்கட்டளைக்கு இந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோ சொந்தமானது.

தோற்கொடுத்த வாகனம்

தோற்கொடுத்த வாகனம்

ஜன லோக்பால் மசோதாவை உடனடியாக பார்லிமென்ட்டில் நிறைவேற்ற வலியுறுத்தி அன்னா ஹசாரே மேற்கொண்ட போராட்டங்களின்போது இந்த எஸ்யூவி அவருக்கு தோளோடு தோள் நின்றது. பலர் கழன்று ஓடிய போதும், அவருக்கு உறுதுணையாக இருந்த வாகனம் இது. 2011ல் நாக்பூரில் நடந்த ஊழலுக்கு எதிரான போராட்டத்தின்போது, காங்கிரஸ் ஆதரவாளர்களால் இந்த எஸ்யூவி தாக்குதலுக்குள்ளானது.

ஸ்கார்ப்பியோ ஏலம் ஏன்?

ஸ்கார்ப்பியோ ஏலம் ஏன்?

இந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோ 8 ஆண்டுகள் பழமையானது. இந்தநிலையில், அன்னா ஹசாரேவுக்கு இப்போது முதுகு வலி ஏற்படுகிறதாம். எனவே, அதற்கு தோதான புதிய காரை வாங்க திட்டமிட்டுள்ளனர். அதற்காகவே, இந்த ஸ்காப்பியோவை ஏலம் விட முடிவு செய்துள்ளனர்.

 ஏலம் நடைபெறும் இடம்

ஏலம் நடைபெறும் இடம்

மஹாராஷ்டிர மாநிலம், அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள அன்னா ஹசாரேவின் சொந்த ஊரானராலகான் சித்தியில் அவரது ஸ்கார்ப்பியோ கார் ஏலம் விடப்படுகிறது. நாளை காலை 11 மணியளவில் ஏலம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஸ்கார்ப்பியோ பற்றி..

ஸ்கார்ப்பியோ பற்றி..

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடல்களில் ஒன்று. ஆதரவாளர்களை ஏற்றி செல்வதற்கு சிறப்பான இடவசதியை அளிப்பதால், அன்னா ஹசாரேவுக்கு மட்டுமல்லாமல், அரசியல்வாதிகளின் ஆஸ்தான வாகனமாக இருந்து வருகிறது.

எஞ்சின்

எஞ்சின்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோவில் 120 பிஎச்பி சக்தியை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது.

வசதிகள்

வசதிகள்

வசதிகள் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, 2 டின் ஆடியோ சிஸ்டம், சன் வைசர், எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்டபிள் ரியர் வியூ மிரர் ஆகிய வசதிகள் உள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்ஸ், சிறப்பான ஹெட்லைட் ஆகிய பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது.2009ம் ஆண்டு இந்த பாதுகாப்பு வசதிகள் ஸ்கார்ப்பியோவில் அறிமுகம் செய்யப்பட்டது.

Most Read Articles
English summary
The SUV used by social activist Aanna Hazare during various agitations, including the Jan Lokpal movement, will be auctioned at his native village Ralegan Siddhi.
Story first published: Saturday, May 16, 2015, 16:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X