சென்னைல டிக்கெட் எடுக்க இனி க்யூல நிக்க வேணாம்! ஒரே ஆப் மூலம் பஸ், மெட்ரோ, கேப்களுக்கு டிக்கெட் எடுக்கலாம்!

சென்னையில் மெட்ரோ, பஸ், ஆட்டோ, கேப் உள்ளிட்ட வாகனங்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்க புதிய ஆப்பை தமிழக அரசு அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த ஆப்பிற்கான சோதனைகள் ஏற்கனவே துவங்கிய நிலையில் அடுத்த மாதம் இது பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது என்ன ஆப்? இதை எப்படி பயன்படுத்துவது? இது மக்களுக்கு எந்த வகையில் பலனளிக்கவுள்ளது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சென்னை ஒருங்கிணைந்த மெட்ரோபொலிடன் போக்குவரத்து ஆணையம் சார்பில் "அண்ணா ரைடு புக்கிங் ஆப்" என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றனர். சென்னை சிட்டி பகுதியில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க பயணிகள் தற்போது பல்வேறு விதமான போக்குவரத்துகளை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.இந்நிலையில் ஒவ்வொரு போக்குவரத்திற்கும் தனித்தனி டிக்கெட் முறை இருக்கிறது. இந்நிலையில் இதை ஒருங்கிணைக்கவே இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

Anna Ride Booking App

இந்த ஆப்பில் சென்னை மெட்ரோ ரயில், எம்டிசி பஸ் சேவைகள், ஆட்டோக்கள், நம்ம யாத்ரீ கேப் சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஆப்பில் நீங்கள் எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என பதிவு செய்தால் போதும், நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து செல்ல வேண்டிய இடத்திற்கு எந்த வழியாக எந்த வாகன்ஙகளில் எல்லாம் பயணிக்க வேண்டும் என்ற தகவலை இந்த ஆப் வழங்கும்.

இந்த ஆப் மூலம் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு ஒரே டிக்கெட்டை புக் செய்து கொள்ளலாம். உதாரணமாக நீங்கள் தாம்பரத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு செல்ல வேண்டும் என்றால் நீங்கள் பஸ், ஆட்டோ, மெட்ரோ, கேப் உள்ளிட்டவற்கு மாறி மாறி செல்ல வேண்டாம். அதற்கு பதிலாக இந்த ஆப்பில் புக் செய்தால் நீங்கள் தாம்பரத்திலிருந்து ஏர்போர்ட் மெட்ரோ வரை செல்ல பஸ் டிக்கெட், ஏர்போர்ட் மெட்ரோவில் நீங்கள் இறங்கும் நேரத்தில் கிளம்பும் மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட் எல்லாம் இதிலேயே புக் செய்துவிடலாம்.

Anna Ride Booking App

இதில் டிக்கெட் புக் செய்தவுடன் ஒரு க்யூஆர் கோடு வழங்கப்படும். அந்த க்யூ ஆர் கோடை நீங்கள் பயணிக்க வேண்டிய இடத்தில் டிக்கெட்டிற்கு பதிலாக இதை பயன்படுத்தலாம். தற்போது இந்த சேவையில் சென்னையில் இயங்கி வரும் பஸ் சேவையில் பஸ் தற்போது எங்கு இருக்கிறது. எத்தனை மணிக்கு குறிப்பிட்ட இடத்திற்கு வரும், குறிப்பிட்ட இடத்திற்கு எத்தனை மணிக்கு சென்று சேரும் என்ற தகவல்களை எம்டிசி நிர்வாகத்திடம் கேட்டுள்ளது.

இந்த தகவலை அடிப்படையாக வைத்தே இந்த சேவை வழங்கப்படுகிறது. இது மட்டுமல்ல தற்போது இந்த ஆப்பில் சென்னை எம்ஆர்டிஎஸ் எலெக்ட்ரிக் ரயிலை இணைக்கவும் ரயில்வே நிர்வாகத்திடம் பேசப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகமும் இதற்கான முதற்கட்ட ஒப்பந்தத்தை செய்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் எலெக்ட்ரிக் ரயில் சேவையும் இதில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Anna Ride Booking App

தற்போது பல்வேறு டிக்கெட்களால் மக்கள் அவதிப்படும் நிலையில் இப்படியான ஆப் தேவை அதிகமாக இருப்பதை உணர்ந்த அரசு இந்த அண்ணா ரைடு புக்கிங் ஆப்பை அறிமுகப்படுத்துகிறது. இது பயன்பாட்டிற்கு வரும் போது நிச்சயம் பலர் இதனால் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆப் நிச்சயம் பெரிய அளவில் பிரபலமாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தில் மக்கள் ஒரே டிக்கெட் முறையை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வரும் நிலையில் இந்த ஆப் நிச்சயம் மக்களுக்கு பயன்படும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். படிப்படியாக இது சென்னையை தாண்டி மற்ற நகரங்களுக்கு வரிவாக்கம் செய்தால் தமிழகம் முழவதும் உள்ள மக்கள் பயன்பெறுவார்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 25, 2025, 16:00 [IST]
English summary
Anna ride booking app to launch in chennai by july end 2025
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X