1 கோடி ரூபா காரை வாங்கனது நடிகை ஸ்ரீதேவியின் இன்னொரு மகளா! வெளி உலகத்துக்கே தெரியாம வாழ்ந்துட்டு இருக்காங்க!
இந்தியா முழுக்க பிரபலமாக இருந்த நடிகை ஸ்ரீதேவி (Sridevi) கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவருக்கும், இவரது கணவர் போனி கபூருக்கும் (Boney Kapoor) 2 மகள்கள் இருப்பது நம் அனைவருக்குமே தெரியும். அவர்கள் ஜான்வி கபூர் (Janhvi Kapoor) மற்றும் குஷி கபூர் (Khushi Kapoor) ஆவர். இவர்கள் இருவருமே தற்போது வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளாக உள்ளனர். ஆனால் நடிகை ஸ்ரீதேவிக்கு இன்னொரு மகள் உள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? அவர் அன்சுலா கபூர் (Anshula Kapoor) ஆவார்.
எனினும் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூரை போல், இவர் ஸ்ரீதேவியின் சொந்த மகள் கிடையாது. இவர் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் முதல் மனைவியின் மகள் ஆவார். அதாவது போனி கபூர் கடந்த 1983ம் ஆண்டு மோனா ஷோரி கபூர் (Mona Shourie Kapoor) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

போனி கபூர்-மோனா ஷோரி கபூர் தம்பதியருக்கு 2 குழந்தைகள். அவர்களில் ஒருவர்தான் அன்சுலா கபூர். மற்றொருவர் மிகவும் பிரபலமான நடிகராக உள்ள அர்ஜூன் கபூர் (Arjun Kapoor) ஆவார். சுமார் 13 வருடங்கள் மோனா ஷோரி கபூருடன் குடும்பம் நடத்திய நிலையில், கடந்த 1996ம் ஆண்டு, அவரை போனி கபூர் விவாகரத்து செய்தார்.
பின்னர் அதே ஆண்டு ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டார். போனி கபூரின் குழந்தைகளான அர்ஜூன் கபூர், ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகிய மூவரும் திரைத்துறையில் உள்ளனர். எனவே அவர்கள் மூவரும் எப்போதும் ஊடக வெளிச்சத்திலேயே இருக்க கூடியவர்களாக திகழ்கின்றனர்.

ஆனால் இவர்கள் மூவரை காட்டிலும் அன்சுலா கபூர் முற்றிலும் வித்தியாசமானவர். அவர் திரைத்துறையில் இல்லை. எனவே அன்சுலா கபூரை பற்றி வெளி உலகிற்கு அவ்வளவாக எதுவும் தெரியாது. இருப்பினும் ஊடக வெளிச்சம் பெரிதாக படாத அன்சுலா கபூரின் பெயர் தற்போது செய்திகளில் இடம்பெற்று வருகிறது.
அவர் மிகவும் விலை உயர்ந்த ஒரு காரை வாங்கியிருப்பதுதான் இதற்கு காரணம். அன்சுலா கபூர் வாங்கியிருப்பது லெக்ஸஸ் ஆர்எக்ஸ் 350ஹெச் (Lexus RX 350h) ஆகும். இந்த காரில், 2.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 190 ஹெச்பி பவர் மற்றும் 242 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், e-CVT கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக, இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 95.80 லட்ச ரூபாய் முதல் 97.60 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் லெக்ஸஸ் ஆர்எக்ஸ் 350ஹெச் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
அன்சுலா கபூர் மிகவும் விலை உயர்ந்த லெக்ஸஸ் ஆர்எக்ஸ் 350ஹெச் காரை வாங்கியுள்ளது தொடர்பான வைரல் வீடியோ (Viral Video) ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலமாகவே அவர் இந்த காரை வாங்கியுள்ள தகவல் நமக்கு தெரிய வந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அன்சுலா கபூர் எப்படி பிரபலம் கிடையாதோ, அதேபோல் லெக்ஸஸ் ஆர்எக்ஸ் 350ஹெச் காரும் அவ்வளவாக பிரபலம் கிடையாது. திரையுலகத்தை சேர்ந்த குடும்பத்தினர், லெக்ஸஸ் ஆர்எக்ஸ் 350ஹெச் காரை வாங்குவது என்பது அரிதான ஒரு விஷயமாக உள்ளது. இருப்பினும் இந்த காரை வாங்கியிருப்பதன் மூலம், அன்சுலா கபூர் மிகவும் வித்தியாசமான ரசனை கொண்டவர் என்பதை நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.


Click it and Unblock the Notifications








