தேசிய நெடுஞ்சாலைகளில் புதிதாக முளைக்கும் பச்சை தூண்கள்! இது என்னன்னு உங்களுக்கு தெரியுமா?

தமிழகம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பச்சை நிற சிறிய தூண்களை சென்டர் மீடியன் பகுதியில் பொருத்தும் பணி நடந்து வருகிறது. சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இந்த பணிகள் நடந்து வருகிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்புக்காக இந்த கருவி பொருத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் அதிகம் பார்க்கப்படும் இந்த கருவி தற்போது இந்தியாவில் பொருத்தப்படுகிறது. இந்த கருவியால் என்ன பயன்? இதனால் வாகனங்கள் எப்படி வாகனங்கள் பாதுகாக்கப்படுகிறது என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலை என்பது மிக முக்கியமான பகுதியாக இருக்கிறது. தினம் தோறும் கோடிக்கணக்கான வாகனங்கள் இந்த தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றன. இப்படியாக தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது சிரமம் இல்லாமல் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக இரு வழிகளையும் தனித்தனியாக பிரித்து சென்டர் மீடியனை வைத்து பாதுகாப்பை அளித்துள்ளார்கள்.

Anti-glare screen in Highway

நீங்கள் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது சென்டர் மீடியனில் செடிகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருவதை நாம் பார்த்திருப்போம். இந்த செடிகள் சென்டர் மிடியனில் நடப்படுவதற்கு மிக முக்கியமான காரணம் எதிர் திசையில் வரும் வாகனங்களின் ஹெட்லைட் ஒளி இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்களுக்கு தொந்தரவு இல்லாமல் இருக்க இந்த செடி உதவுகிறது.

இதன் காரணமாகவே தேசிய நெடுஞ்சாலைகளில் செடி நடப்படுகிறது. ஆனால் அனைத்து இடங்களிலும் செடி நடும் அளவிற்கு செண்டர் மீடியனில் இடம் இல்லாத சூழ்நிலை இருக்கும். இந்த இடங்களில் நடுவே சிமெண்ட் ஸ்லாப் கொண்டு சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு இருக்கும். இப்படியான இடங்களில் வாகனம் வரும்போது நிச்சயம் அது எதிர் திசையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு ஹெட்லைட் தொந்தரவாக இருக்கும்.

இந்த பிரச்சினையை தடுப்பதற்காக தற்போது தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் சென்டர் மீடியனில் செடி வைக்க முடியாத இடங்களில் ஆண்டி கிளார் ஸ்கிரீன் எனப்படும் சில பச்சை நிற சிறிய தூண் போன்ற கருவியை பொருத்தி வருகிறார்கள். இது வாகனம் அதிவேகமாக வரும் போது எதிரே வரும் வாகனத்தில் உள்ள ஹெட்லைட் தொந்தரவு செய்யாத வகையில் தடுத்து நிறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முதற்கட்டமாக இது விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை சுமார் 194கிமீ தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்தது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பணி துவங்கியது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் சுமார் 80-100கிமீ வேகத்தில் பயணிக்க கூடியதாக இருக்கின்றன. இங்கே நடுவே கான்கிரீட் பாதை கொண்டு தான் சென்டர் மீடியன்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு செடி வைப்பது என்பது சாத்தியமில்லாமல் இருக்கிறது.

செடி வைக்கும் அளவிற்கு சென்டர் மீடியன் அமைக்கப்பட வேண்டும் என்றால் நான்கு மீட்டர் அகலத்திற்கு சென்டர் மீடியனிற்காக இடம் தேவைப்படும். அப்படி இடமில்லாத சூழ்நிலையில், வெறும் கான்கிரீட் ஸ்லாப்புகளைக் கொண்டே செண்டர் மீடியன் அமைக்கப்படும். அந்த இடத்தில் ஒளி எதிரில் வரும் வாகனத்திற்கு தொந்தரவை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் அந்தப் பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் வகையில் தற்போது ஆன்ட்டி கிளார் ஸ்கிரீன்களை தற்போது நெடுஞ்சாலை துறையினர் பொருத்தி வருகிறார்கள். பச்சை நிறத்தில் சிவப்பு தூண் போல இருக்கும் இந்த அமைப்புகளை குறிப்பிட்ட இடைவெளியில் வரிசையாக பொருத்துவதன் மூலம் எதிரில் வரும் வாகனங்களின் ஒளி இரவு நேரத்தில் மற்ற வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு இல்லாமல் இருக்கும்.

இது மட்டுமல்ல சாலையில் அந்த குறிப்பிட்ட வாகனம் செல்லும் பாதையில் ரோடு எப்படி இருக்கிறது என்பதை காட்டுவதற்காக அதன் நடுவே ஸ்டிக்கர்களை பொருத்திருக்கிறார்கள். இந்த ஸ்டிக்கர்கள் ரோடு எந்த வழியாக பயணிக்கிறது என்பதை எளிதாக ஓட்டுனருக்கு காட்டும் வகையில் ரிப்லெக்ட் செய்யும். இதனால் எதிரில் வரும் வாகன ஓட்டிகள் தொந்தரவு இல்லாமல் தைரியமாக வேகமாக பயணிக்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது இந்த ஆன்டி கிளார் ஸ்கிரீன் விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் மட்டுமே பொருத்தப்பட்டு வருகிறது. இது வெற்றிகரமாக செயல்படும் பட்சத்தில் தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளிலும் இது விரிவுபடுத்தப்பட வேண்டும். முக்கியமாக அபாயம் நிறைந்த பகுதிகளை கண்டறிந்து அந்த இடங்களில் கட்டாயம். இந்த ஆண்டி கிளார் ஸ்கிரீன்கள் பொருத்தப்பட வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 11, 2024, 16:19 [IST]
English summary
Anti glare screen installation four lane highway tamilnadu
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+