வெறும் 11 நிமிடங்களில் லண்டன் டூ நியூயார்க் செல்லும் புதிய ஹைப்பர்சானிக் விமானம்!

Written By:

விமானப் பயணம் என்பது விரைவானதாக இருந்தாலும், நீண்ட தூர பயணங்கள அலுப்புத் தட்டும் சமாச்சாரமாகவே இருக்கிறது. சென்னையிலிருந்து ஒருவர் அமெரிக்கா சென்றடைய கிட்டத்தட்ட 35 மணி நேரம் வரை செலவிட வேண்டியிருக்கிறது. எனவே, நீண்ட தூர வழித்தடங்களுக்கு எதிர்காலத்தில், அதிவேக ஹைப்பர்சானிக் விமானங்கள் அவசியமானதாக இருக்கின்றன.

இந்த ஹைப்பர்சானிக் பயணிகள் விமானத்தை உருவாக்கும் முயற்சிகள் மிக தீவிரமாக நடந்து வருகின்றன. அந்த விதத்தில், வெறும் 11 நிமிடங்களில் லண்டனிலிருந்து நியூயார்க் செல்லும் அதிவேக ஹைப்பர்சானிக் ரக விமானத்தை கனடா நாட்டு விமானவியல் துறை பொறியாளர் வெளியிட்டிருக்கிறார். இந்த விமானத்தின் சிறப்பம்சங்களை தொடர்ந்து ஸ்லைடரில் காணலாம்.

கனடா நாட்டு பொறியாளர்

கனடா நாட்டு பொறியாளர்

பம்பார்டியர் விமான தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வரும் தலைமை பொறியாளர் சார்லஸ் இந்த விமானத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார். ஆன்டிபாட் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த விமானத்தின் சிறப்பம்சங்களை தொடர்ந்து காணலாம்.

 வேகம்

வேகம்

இந்த ஹைப்பர்சானிக் ரக விமானம் மணிக்கு மேக்-24 என்ற வேகத்தில் பறக்கும். ஒலியைவிட 24 மடங்கு அதிவேகத்தில் இந்த விமானம் பறக்கும் திறன் கொண்டதாக இருக்கும். உதாரணத்திற்கு, லண்டன் நியூயார்க் நகரங்களுக்கு இடையிலான 5,560 கிமீ தூரத்தை வெறும் 11 நிமிடங்களில் கடந்துவிடும்.

நாசாவை விஞ்சிய நுட்பம்

நாசாவை விஞ்சிய நுட்பம்

அதிவேக சூப்பர்சானிக் விமானங்களை உருவாக்குவதில் திறன் பெற்ற அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பிடம் கூட இதுவரை 24 மேக் வேகத்தில் பறக்கும் மாதிரி விமானத்தை கூட இதுவரை உருவாக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்திய டிசைனர்

இந்திய டிசைனர்

இந்த விமானத்தின் டிசைன் ஸ்கெட்ச்சை இந்தியரான அபிஷேக் ராய் வடிவமைத்து கொடுத்துள்ளார். இவர் லுனாடிக் கான்செப்ட்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓடுபாதை

ஓடுபாதை

இந்த விமானத்தை தரையிறக்குவதற்கு 6,000 அடி நீள ஓடுபாதை தேவைப்படும் என்று சார்லஸ் தெரிவித்துள்ளார்.

குளிரூட்டும் அமைப்பு

குளிரூட்டும் அமைப்பு

இந்த விமானத்தை இயக்கும்போது வெளிப்படும் அபரிமிதமான வெப்பத்தை தணிப்பதற்காக, விமானத்தின் மேல்புறத்தில் காற்றை உறிஞ்சி வெப்பத்தை தணிக்கும் துளைகள் அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

சவால்

சவால்

ஆனால், விமானத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்திலான உலோகத்தை உருவாக்குவதும், விமானத்தின் கட்டமைப்பிலும் மிகப்பெரிய சவால்கள் இருப்பதாக பம்பார்டியர் நிறுவனம் தெரிவிக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

விண்வெளிக்கு செல்லும் ராக்கெட்டுகளை மேலே எழுப்புவதற்கு பயன்படுத்தப்படும் பூஸ்டர்கள் இந்த விமானத்தின் இறக்கைகளில் பொருத்தப்பட்டிருக்கும். விமானத்தை மேலே உந்தி எழுப்புவதற்கு பூஸ்டர்கள் பயன்படும். 40,000 அடி உயரத்தை விமானம் எட்டியவுடன், பூஸ்டர்கள் தனியாக கழன்றுவிடும். அதன்பின்னர விமானம் அதிகபட்சமாக 24 மேக் வேகத்தில் பறக்கும். ஒரு மேக் என்பது மணிக்கு 1,195 கிமீ வேகத்திற்கு இணையானது.

பயணிகள் எண்ணிக்கை

பயணிகள் எண்ணிக்கை

இந்த விமானத்தில் 10 பயணிகள் செல்ல முடியும். எனவே, விவிஐபி பயன்பாட்டுக்கு பொருத்தமானதாக இருக்கும். ஆனால், இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தும்போதும், அதிக அளவில் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில், எதிர்காலத்தில் அதிக பயணிகள் செல்வதற்கான விமானத்தை தயாரிக்கும் வாய்ப்புள்ளது.

விலை மதிப்பு

விலை மதிப்பு

பெரும் பணக்காரர்கள் பயன்படுத்தும் பிசினஸ் ஜெட் ரகத்தை சேர்ந்த தனி நபர் பயன்பாட்டு சொகுசு விமானங்களை விட சற்றே அதிக விலை கொண்டதாக இருக்கும் என சார்லஸ் மதிப்பு தெரிவித்துள்ளார்.

கான்கார்டு விமானத்துடன் ஒப்பீடு

கான்கார்டு விமானத்துடன் ஒப்பீடு

உலகின் அதிவேக பயணிகள் விமானமாக கருதப்படும் கான்கார்டு விமானம் அடிக்கடி விபத்தில் சிக்கியதால், சேவையிலிருந்து விலக்கப்பட்டது. இந்தநிலையில், கான்கார்டு விமானத்தை விட புதிய ஆன்டிபாட் விமானம் 12 மடங்கு கூடுதல் வேகத்தில் பறக்கும். அதாவது, டெல்லியிலிருந்து சென்னைக்கு ஒரு சில நிமிடங்களில் வந்துவிடும்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Antipode supersonic jet concept would fly New York to London in 11 minutes.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark