ஒன்னே முக்கா கோடில கார் வாங்கனது அவரா! பெரிய பாய் ஏஆர் ரஹ்மானுக்கே டஃப் குடுத்தவர்! இன்னுமா அடையாளம் தெரியல?
இந்தியாவில் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும், மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக பாலிவுட் பிரபலங்கள் (Bollywood Celebrities), மிகவும் அதிக விலை கொடுத்து சொகுசு கார்களை (Luxury Cars) வாங்குகின்றனர். பாலிவுட் பிரபலங்கள் மத்தியில், ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. ஷில்பா ஷெட்டி, ஜான்வி கபூர், மாதுரி தீக்ஸித், சல்மான் கான், சஞ்சய் தத் மற்றும் கார்த்திக் ஆர்யன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலர், ரேஞ்ச் ரோவர் கார்களை வைத்துள்ளனர்.
இந்த வரிசையில் தற்போது மற்றொரு பிரபலம், ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ளார். அவர் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமாக உள்ள இசைமைப்பாளர்களில் ஒருவரான அனு மாலிக் (Anu Malik) ஆவார். அவர் வாங்கியிருப்பது ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport) கார் ஆகும்.

இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்தது. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை அனு மாலிக் டெலிவரி எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார், 1.40 கோடி ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக சுமார் 1.75 கோடி ரூபாய் வரும். ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 3.0 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும்.

இதில், பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 400 பிஹெச்பி மற்றும் 500 என்எம் ஆக உள்ளது. அதே நேரத்தில் டீசல் இன்ஜினின் பவர் அவுட்புட் 350 பிஹெச்பி மற்றும் 700 என்எம் ஆக இருக்கிறது. இந்த 2 இன்ஜின்கள் உடனும், 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரில், 4 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் ஏர் சஸ்பென்ஸன் ஆகிய அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. வசதிகளை பொறுத்தவரையில், 13.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரில் இடம்பெற்றுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சொகுசு வசதிகளுடன், கூடவே செயல்திறன் மிக்க ஒரு எஸ்யூவி ரக காரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ள இந்திய வாடிக்கையாளர்களுக்கு, ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் மிகவும் ஏற்றது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
ஆனால் அனு மாலிக் வாங்கியிருப்பது, ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் பெட்ரோல் வேரியண்ட்டா? அல்லது டீசல் வேரியண்ட்டா? என்பது உறுதியாக தெரியவில்லை. இவரிடம் ஏற்கனவே பிஎம்டபிள்யூ (BMW) உள்ளிட்ட நிறுவனங்களின் கார்கள் எல்லாம் இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
பாடல்களுக்கு இசையமைப்பதில் ஏஆர் ரஹ்மான் (A. R. Rahman) சிறந்தவரா? அல்லது அனு மாலிக் சிறந்தவரா? என்று விவாதிக்கும் அளவிற்கு, ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு இசையமைப்பாளராக அனு மாலிக் திகழ்கிறார். தேசிய விருது மற்றும் ஃபிலிம்பேர் விருதுகளை எல்லாம் அனு மாலிக் வாங்கி குவித்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








