2 கோடி ரூபாய் சொகுசு காரை வாங்கியது அவரா! பெரிய பெரிய தொழில் அதிபர்களுக்கே டஃப் குடுத்துட்டாரு!
இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் (Festive Season) களைகட்ட தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு மக்கள் பலரும் புதிய கார் (Car) மற்றும் பைக் (Bike) உள்ளிட்ட வாகனங்களை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். இதற்கு இந்தியாவை சேர்ந்த திரையுலக நட்சத்திரங்களும் விதிவிலக்கு அல்ல.
பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் (Shraddha Kapoor), லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா (Lamborghini Huracan Tecnica) காரை தற்போது வாங்கியுள்ளார். அதேபோல் மற்றொரு நடிகையான பூஜா ஹெக்டே (Pooja Hegde), லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover) காரை வாங்கியுள்ளார்.

இந்த வரிசையில் ஸ்டாண்ட்-அப் காமெடியனும் (Stand-up Comedian), நடிகருமான (Actor) அனுபவ் சிங் பாஸி (Anubhav Singh Bassi) தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport) கார் ஆகும். இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலை (Price) 1.64 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 1.84 கோடி ரூபாயாக இருக்கிறது. நாங்கள் இங்கே குறிப்பிட்டிருப்பது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

அனுபவ் சிங் பாஸி வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார், 'சான்டோர்னி பிளாக்' நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் சொகுசு எஸ்யூவி காரில் மொத்தம் 4 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவை அனைத்துமே மிகவும் சக்தி வாய்ந்த இன்ஜின்கள் ஆகும்.
3.0 லிட்டர் மைல்டு-ஹைப்ரிட் டீசல் (340 ஹெச்பி), 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு ப்ளக்-இன் ஹைப்ரிட் பெட்ரோல் (434 ஹெச்பி), 3.0 லிட்டர் மைல்டு-ஹைப்ரிட் டர்போ பெட்ரோல் (394 ஹெச்பி) மற்றும் 4.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் (626 ஹெச்பி) என இந்த காரில் மொத்தம் 4 இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த அனைத்து இன்ஜின்கள் உடனும், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படுகிறது. 4.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட இந்த காரின் டாப் வேரியண்ட், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.8 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறனை பெற்றுள்ளது.
செயல்திறன் மிக்கது என்பதுடன், மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், டிஜிட்டல் எல்இடி ஹெட்லைட்கள், 23 இன்ச் வீல்கள், ஹீட்டட், கூல்டு மற்றும் மசாஜ் வசதியுடன் கூடிய முன் இருக்கைகள் ஆகிய அம்சங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாகவே இது கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த பண்டிகை காலத்தில் இன்னும் பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் புதிய சொகுசு கார்களை வாங்குவார்கள் என நாங்கள் கருதுகிறோம். பொதுமக்களும் அதிக அளவில் புதிய வாகனங்களை வாங்கி வருவதால், அனைத்து நிறுவனங்களும் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்யும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications









