இந்திய இரயில்களில் ஆடம்பரமாக பயணிக்க தயாராகுங்கள்

Written By: Azhagar

2013ம் ஆண்டில் இரயில்வே அமைச்சராக இருந்த பவன் குமார் பன்சால், நாட்டில் அதிக கிலோமீட்டரில் பயணிக்கும் இரயில்களில் ஆடம்பர வசதிகளை வழங்கக்கூடிய அனுபூதி பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதையொட்டி, இரயில் பெட்டி தொழிற்சாலையில் அனுபூதி பெட்டிகள் உருவாக்கப்பட்டு முதற்கட்டமாக டெல்லி முதல் சண்டிகர் செல்லும் சதாப்தி இரயில்களில் இணைக்கப்பட்டன.

ஆடம்பர பயணத்தை தரும் ’அனுபூதி’ பெட்டிகள்

சதாப்தி இரயில் வண்டியில் சோதனை ஓட்டமாக இணைக்கப்பட்ட அனுபூதி பெட்டிகளுக்கு பயணிகளிடம் வரவேற்பு அதிகரிக்கவே, மேலும் இருக்கக்கூடிய சதாப்தி வண்டிகளில் இணைக்கும் முடிவை இரயில்வே நிர்வாகம் எடுத்தது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளமால், அனுபூதி பெட்டிகளின் தயாரிப்பு பணிகளும் என்ன ஆனது என்றும் தெரியாமல் இருந்து வந்தது.

ஆடம்பர பயணத்தை தரும் ’அனுபூதி’ பெட்டிகள்

தற்போது, அனுபூதி பெட்டிகளை இரயில்களில் இணைக்க தொடர்ந்து எழுந்த கோரிக்கைகளை அடுத்து தற்போது இரயில்வே துறையை சேர்ந்த அதிகாரிகள், அதற்கான தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தாண்டு இறுதிக்குள் மொத்தம் 10 அனுபூதி பெட்டிகள் தயாரிக்கப்பட்டு அடுத்தாண்டு மார்சிற்குள் இரயில்களில் இணைக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆடம்பர பயணத்தை தரும் ’அனுபூதி’ பெட்டிகள்

இந்திய ரயில்வேவிற்கான பெட்டிகளை தயாரிக்கும் ஜெர்மன் நிறுவனமான 'லிங்கே ஹாஃப்மேன் பூச்' நிறுவனம் தான் அனுபூதி பெட்டிகளையும் தயாரிக்கவுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் கபூர்தலா என்ற இடத்தில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் அனுபூதி பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடம்பர பயணத்தை தரும் ’அனுபூதி’ பெட்டிகள்

தற்போது சதாப்தி அதிவிரைவு இரயில்களில் இணைக்கப்பட்டு இருப்பதை விட மேம்படுத்தப்பட்ட தரத்தில் அனுபூதி பெட்டிகள் உருவாக்கப்படவுள்ளன. 46 பேர் பயணிக்கும் வகையில் தயாராகிப்படவுள்ள அனுபூதி பெட்டிகளில் ஒன்றை தயாரிக்க ரூ.3 கோடி ஆகும் என இரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆடம்பர பயணத்தை தரும் ’அனுபூதி’ பெட்டிகள்

முழுக்க ஸ்டெயில்லெஸ் ஸ்டீலில் (எஃகு) உருவாக்கப்பட்டு, பல பாதுகாப்பான அம்சங்களை கொண்டு அனுபூதி பெட்டிகள் மக்களின் பயன்பாட்டிற்காக வரவுள்ளன. இந்த இரயில் பெட்டிகளில் ஆடம்பர வசதிகள் என்று பார்த்தால், இன்ஃபோசெய்மெண்ட் வசதி கொண்ட இருக்கைகள், LED விளக்குகள், கண்ணாடியிழையில் வலுவூட்டப்பட்ட பேனல்கள், தானியங்கி கதவுகள், தொடு இலவச வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள், அனுபூதி பெட்டிகளுக்காகவே இயங்கும் பிரத்யேக பேண்ட்ரிகள் என பல வசதிகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு அனுபூதி பெட்டிகளுக்கு விமான பணிப்பெண்கள் போல, பணியாட்களும் நியக்கப்படவுள்ளார்கள்.

ஆடம்பர பயணத்தை தரும் ’அனுபூதி’ பெட்டிகள்

அடம்பர வசதிக்கொண்ட அனுபூதி பெட்டிகளை தொடர்ந்து இந்திய இரயில்வே நிர்வாகம் ஹம்சஃபர், அண்டியோதயயா, தீன் தயாளு ஆகிய பெயர்களில் இரயில் சேவையை வழங்கவுள்ளது. தற்போது ஓடும் இரயில்களை விட உயர் வசதிகொண்டதாக இந்த ரயில்கள் உருவாக்கப்படும். மேலும் முன்பதிவு இல்லாத பொதுப் பிரிவு பெட்டிகளிலும் பயணிக்களின் வசதிக்கான மாற்றங்கள் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடம்பர பயணத்தை தரும் ’அனுபூதி’ பெட்டிகள்

2016ம் ஆண்டுக்கான இரயில்வே பட்ஜெட்டில், அதிக தூரம் கொண்ட இடங்களுக்காக ஹை-ஸ்பீடில் செல்லும் தேஜஸ் என்ற இரயில் சேவையை கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தியாவின் அதீத எதிர்பார்ப்புகளுள் ஒன்றான தேஜஸ் எக்ஸ்பிரஸ் அடுத்தாண்டு சூரத்திலிருந்து, மும்பை வரையிலான வழித்தடத்தில் அறிமுகப்படுத்தப்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் வெளிவரயிருக்கும் டோயாட்டாவின் பைரஸ் காரின் புகைப்படங்கள்

English summary
Suresh Prabhu-led Indian Railways is looking to introduce luxury chair car 'Anubhuti' coaches in its Shatabdi trains
Story first published: Wednesday, March 15, 2017, 8:30 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos