பிரபல யுட்யூபருக்கு சொந்தமான 4கோடி ரூபா காரை பறிமுதல் செய்த சென்னை போலீஸ்.. அந்த யுட்யூபர் நம்ம ஊருகூட இல்லை!

பிரபல யுட்யூபரும், பிக்பாஸ் 17 (இந்தி) பங்கேற்பாளருமான அனுராக் தோபால்-க்கு சொந்தமான விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் (Sports Car)-ஐ சென்னை போலீஸ் பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அனுராக் தோபால் 'யுகே 07 ரைடர்' என்கிற பெயரிலும் அறியப்படுகின்றார்.

இவர் சொந்தமாக உலகின் விலை உயர்ந்த கார் மாடல்களில் ஒன்றான லம்போர்கினி ஹூராகேன் (Lamborghini Huracan) ஸ்போர்ட்ஸ் கார் மாடலையே வைத்திருக்கின்றார். இந்த காரையே சென்னை மாநகர காவல்துறை பறிமுதல் செய்திருப்பதாக யுகே07 ரைடர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.

Youtuber anurag dhobal lamborghini

மேலும், தன்னுடைய கார் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறித்து அவர் ஓர் வீடியோ பதிவையும் சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் அழுது கதறுவதை நம்மால் பார்க்க முடிகின்றது. காரை பறிமுதல் செய்ததோடு அவருக்கு மிகப் பெரிய தொகையை அபராதமும் போலீஸ் விதித்து இருக்கின்றது.

ரூ. 3.5 கோடி அபராதமே அனுராக் தோபாலுக்கு விதிக்கப்பட்டு இருப்பதாகவே அவர் தெரிவித்து இருக்கின்றார். இது உச்சபட்ச அபராத தொகை ஆகும். கார் டிரக்கில் எடுத்து வரும்போதே பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆவணங்கள் சரியாக இல்லை என கூறி போலீஸ் அந்த காரை பறிமுதல் செய்திருப்பதாக அவர் கூறி இருக்கின்றார்.

ஆனால், அனைத்து பேப்பர்களும் சரியாகவே இருக்கின்றன என்றும், தன் கார் மீது வைத்திருக்கும் புகார் தவறானது என்றும் அனுராக் தோபால் கூறியிருக்கின்றார். ஐபிஎல் போட்டிக்காகவே அனுராக் இந்த காரை சென்னைக் கொண்டு வந்ததாகக் கூறப்படுகின்றது. அவர் இந்த காரைக் கொண்டு சுரேஷ் ரெய்னாவை வீடியோ எடுக்கவே சென்னை கொண்டு வந்திருக்கின்றார்.

இந்த பணிகள் நிறைவு பெற்ற பின்னர் மீண்டும் அதை மும்பை எடுத்துச் செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த நிலையிலேயே டிரக்கில் அந்த காரை எடுத்து வரும்போது சென்னை போலீஸ் பறிமுதல் செய்திருக்கின்றது. இந்த நிலையிலேயே போலீஸார் காரை பறிமுதல் செய்யவில்லை. முதலில் காரை ஏற்றி வந்த டிரக்கையே பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Youtuber anurag dhobal fined

அந்த டிரக்கின் ஆவணங்கள் சில சரியில்லை என கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே டிரக்குடன் சேர்த்து காரும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றது. இதைத்தொடர்ந்தே அந்த காருக்கு ரூ. 3.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த சம்பவத்தில் சில முரண்பாடான தகவல்களே இப்போதைய நிலவரப்படி வெளியாகி இருக்கின்றன.

விரைவில் முழு விபரமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. யுட்யூபர் இந்த காரை நடப்பாண்டு ஜனவரி மாதத்திலேயே வாங்கினார் இந்த காரின் மதிப்பு ரூ. 4 கோடிக்கும் அதிகம் ஆகும். இதில் 5.2 லிட்டர் வி10 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 640 பிஎஸ் பவரையும், 565 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

Lamborghini seized

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 325 கிமீ ஆகும். இந்த கார் மாடல் தவிர இன்னும் சில ஆடம்பர வகை கார் மாடல்களையும் அவர் பயன்படுத்தி வருகின்றார். இந்த காருக்கு இந்தியாவில் மிகப் பெரிய ரசிக பட்டாளம் உண்டு. அந்தவகையில், ட்ராப் ஷூட்டிங் விளையாட்டு வீரரான விவான் கபூர்கூட இந்த கார் மாடலை பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சூப்பர் கார் பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதனாலேயே லம்போர்கினி, ஃபெர்ராரி போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தியாவை மையப்படுத்தி தங்களுடைய சூப்பர் கார்களை களமிறக்கிக் கொண்டு இருக்கின்றர்.

More from DriveSpark

Article Published On: Sunday, March 31, 2024, 5:00 [IST]
English summary
Anurag dobhal s lamborghini huracan super car seized by chennai police
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X