சைக்கிள் ஓட்டி கொண்டிருந்தவர் இப்ப இத்தனை சொகுசு கார்களுக்கு சொந்தக்காரரா! மயக்கம் போட வைக்கும் விலை!
இந்தியாவில் கிரிக்கெட் (Cricket) ஒரு மதம் போல் மாறி விட்டது. கிரிக்கெட் வீரர்கள் (Cricket Players), கடவுளுக்கு இணையாக கொண்டாடப்படுகின்றனர். கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பின்னால் மிகப்பெரிய வியாபாரம் (Business) உள்ளது என்பது தனிக்கதை. ஆனால் இது கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களுக்கும் பயன் அளிக்கவே செய்கிறது.
கிரிக்கெட் மூலமாக நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், நேரடியாக களத்தில் இறங்கிதான் விளையாட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ட்ரீம்11 (Dream11) போன்ற ஃபேன்டஸி ஸ்போர்ட் பிளாட்பார்ம்கள் (Fantasy Sports Platform) மூலமாகவும் கூட நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். இதுபோன்ற ஃபேன்டஸி தளங்கள் மூலம் பணம் சம்பாதித்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.

அவர்களில் ஒருவர்தான் அனுராக் திவேதி (Anurag Dwivedi). உத்தர பிரதேச (Uttar Pradesh) மாநிலத்தை சேர்ந்த இவருக்கு வெறும் 21 வயது மட்டுமே ஆகிறது. இந்த வயதில் பெரும்பாலான இளைஞர்கள் தங்களுடைய உண்மையான திறமை என்ன? என்பதை கண்டுபிடிக்க போராடி கொண்டிருப்பார்கள்.
ஆனால் அனுராக் திவேதியோ ஏழ்மையான ஒரு குடும்பத்தில் இருந்து வந்து, பெரும் பணக்காரராக மாறியுள்ளார். ட்ரீம்11 மூலமாக இவர் சம்பாதித்த பணம்தான் இதற்கு முக்கியமான காரணம். ஆனால் தனது இந்த திறமையை இவர் சமூக வலை தளங்கள் மூலமாக மற்றவர்களுக்கும் கற்று கொடுத்து வருகிறார்.

இவர் தனது ஆரம்ப நாட்களில், சாதாரண அட்லஸ் சைக்கிளைதான் (Atlas Bicycle) ஓட்டி கொண்டிருந்தார். ஆனால் தற்போதோ மிகவும் விலை உயர்ந்த பல்வேறு கார்களுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். அனுராக் திவேதியின் மிகவும் விலை உயர்ந்த கார் கலெக்ஸன் (Car Collection) குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். இது உங்களுக்கு உத்வேகம் கொடுக்க கூடியதாக இருக்கலாம்.
பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-Series): அனுராக் திவேதியிடம் இருக்கும் கார்களில் இது மிகவும் முக்கியமானது. சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் போன்ற இந்தியாவின் பிரபல மனிதர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான காராக பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் கார் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரின் ஆரம்ப விலை (Price) 1.78 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 1.81 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலை ஆகும். எனவே ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும்.
ஆனால் அனுராக் திவேதியிடம் இருப்பது புத்தம் புதிய கார் கிடையாது. இது யூஸ்டு கார் (Used Car) ஆகும். அனுராக் திவேதியிடம் இருப்பது பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரின் டீசல் வெர்ஷன் (Diesel Version) என தகவல்கள் தெரிவிக்கின்றன. செகண்ட் ஹேண்ட் (Second Hand) மார்க்கெட்டில் வாங்கியிருந்தாலும் கூட, பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரை வைத்திருப்பது பெரிய விஷயம்தான்!
மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் (Mercedes Benz E-Class): கடந்த 2022ம் ஆண்டுதான், மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் காரை அனுராக் திவேதி வாங்கினார். இவர் வாங்கியிருப்பது இந்த காரின் 350d வேரியண்ட் ஆகும். இதன் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 80 லட்ச ரூபாய் ஆகும். இந்த வேரியண்ட்டில், 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 (Land Rover Defender 130): நடப்பு 2023ம் ஆண்டு ஜூன் மாதம்தான், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 130 காரை, அனுராக் திவேதி டெலிவரி எடுத்தார். இதன் விலை 1.41 கோடி ரூபாய் ஆகும். இது அனுராக் திவேதி-யிடம் உள்ள கார்களில் மிகவும் விலை உயரந்த ஒன்றாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சைக்கிள் ஓட்டி கொண்டிருந்த ஒருவர் இத்தனை விலை உயர்ந்த கார்களுக்கு சொந்தக்காரராக மாறியிருப்பது உண்மையிலேயே அனைவருக்கும் உத்வேகம் அளிக்க கூடிய ஒரு விஷயம்தான். நாங்கள் இங்கே கூறியுள்ள கார்களை தவிர, இன்னும் பல்வேறு கார்களும் அனுராக் திவேதி-யிடம் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








