பாஜக தலைவர்களை ஆட்டி படைக்க போற சின்ன பையன்! 50 லட்ச ரூபா பைக்கை சர்வ சாதாரணமா ஓட்டீட்டு போனது அவரா!
சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், பைக் ரைடர்கள் நிறைய பேர் ஒன்றாக அணிவகுத்து செல்வதை நம்மால் காண முடிகிறது. அவர்கள் பெரும்பாலானோர் ஓட்டியது ஹார்லி டேவிட்சன் (Harley Davidson) நிறுவனத்தின் பைக்குகள் ஆகும். இந்த பைக் ரைடர்கள் குழுவிற்கு தலைமை ஏற்று, ஒருவர் முன்னால் சென்று கொண்டிருப்பதையும் இந்த வீடியோவில் நாம் பார்க்கலாம். அவர் ஓட்டியது ஹார்லி டேவிட்சன் ரோடு கிளைடு (Harley Davidson Road Glide) பைக் ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 41.79 லட்ச ரூபாய் என்ற விலையில் ஹார்லி டேவிட்சன் ரோடு கிளைடு பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொறுங்கள். இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மட்டுமே. ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 50 லட்ச ரூபாய் வரும்.

இவ்வளவு விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் ரோடு கிளைடு பைக்கை ஓட்டி சென்றது அனேகமாக ஏதாவது நடிகராக இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதுதான் இல்லை. சரி, அவர் ஹெல்மெட் உள்பட முறையான 'ரைடிங் கியர்' அணிந்திருப்பதால், மிகவும் பிரபலமான பைக் ரைடராக இருக்கலாம் என்றும் கூட நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் அதுவும் தவறு. உண்மையில் அவர் மிகவும் பிரபலமான ஒரு அரசியல்வாதி ஆவார். பொதுவாக நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலர் பொது சாலைகளில் மிகவும் விலை உயர்ந்த பைக்குகளை ஓட்டி சென்றதை நாம் கடந்த காலங்களில் பார்த்துள்ளோம். ஜான் ஆபிரஹாம் (John Abraham) மற்றும் எம்எஸ் டோனி (MS Dhoni) போன்றவர்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

ஆனால் அரசியல்வாதிகளை இது போன்று பார்ப்பது அரிதிலும் அரிது. இந்த அரிதிலும் அரிதான காரியத்தை செய்திருப்பவர் அனுராக் தாக்கூர் (Anurag Thakur) ஆவார். பாரதிய ஜனதா கட்சியை (BJP - Bharatiya Janata Party) சேர்ந்த இவர், லோக்சபா எம்பி-ஆக பணியாற்றி வருகிறார். இங்கே மற்றொரு விஷயத்தையும் நாங்கள் குறிப்பிட்டாக வேண்டும்.
பிசிசிஐ என சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (Board of Control for Cricket in India) தலைவராகவும், கடந்த காலங்களில் இவர் பணியாற்றியுள்ளார் என்பதுதான் அது. தற்போது நிகழ்ச்சி ஒன்றுக்காகவே அனுராக் தாக்கூர், ஹார்லி டேவிட்சன் ரோடு கிளைடு பைக்கை சாலையில் ஓட்டி சென்றுள்ளார்.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வரும் பிப்ரவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில், ரைடர்ஸ் மியூசிக் ஃபெஸ்டிவல் (Riders Music Festival) என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. ரெட் எஃப்எம் (Red FM) மூலம் இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதற்கு இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஒரு சில நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதாவது இந்த நிகழ்ச்சிக்கு தயாராகும் விதமாக, இந்தியாவின் பல்வேறு நகரங்களை சேர்ந்த பைக் ரைடர்கள் குழுக்களை ஒருங்கிணைத்து, வீக்எண்ட் பிரேக்ஃபாஸ்ட் ரைடுகள் (Weekend Breakfast Rides) நடத்தப்பட்டு வருகின்றன. அப்படி டெல்லியில் நடத்தப்பட்ட ஒரு வீக்எண்ட் பிரேக்ஃபாஸ்ட் ரைடின்போதுதான், தற்போது வைரலாக பரவி வரும் அனுராக் தாக்கூரின் வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அனுராக் தாக்கூரை இது போன்ற நிகழ்ச்சிகளில் பார்ப்பது இது முதல் முறை கிடையாது. அவர் பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் உடையவர் ஆவார். எனவே கடந்த காலங்களில் நல்லெண்ண அடிப்படையில் நடத்தப்பட்ட பல்வேறு பைக் பேரணிகளில் அனுராக் தாக்கூரை காண முடிந்துள்ளது. பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்ட அரசியல்வாதிகளை பார்ப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியான ஒரு விஷயம்தான்.
இதற்கிடையே அனுராக் தாக்கூரை பற்றிய மற்ற செய்திகளை பொறுத்தவரையில், அவர் கூடிய விரைவில் பாஜக தேசிய தலைவராக உருவெடுக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது பாஜகவின் தேசிய தலைவராக இருப்பவர் ஜேபி நட்டா (JP Nadda). இவருக்கு மாற்றாக கூடிய விரைவில் புதிய தேசிய தலைவரை பாஜக நியமனம் செய்யவுள்ளது.
அனேகமாக வரும் பிப்ரவரி மாதத்தில், பாஜகவிற்கு புதிய தேசிய தலைவர் நியமிக்கப்பட்டு விடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரம் மிக்க இந்த பதவியை கைப்பற்ற போவது யார்? என்ற விஷயத்தை எடுத்து கொண்டால், பலரின் பெயர்கள் அடிபடுகிறது. இதில், அனுராக் தாக்கூரின் பெயரும் ஒன்றாக உள்ளது. எனவே கூடிய விரைவில் அவர் பாஜக தேசிய தலைவராக நியமிக்கப்பட்டாலும் நியமிக்கப்படலாம்.
ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அனுராக் தாக்கூருக்கு தற்போது 50 வயது மட்டுமே ஆகிறது. ஒருவேளை அவர் தேர்வு செய்யப்பட்டால், மிக இளம் வயதிலேயே பாஜகவின் தேசிய தலைவராக நியமனம் செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் என்ற பெருமையை சொந்தமாக்குவார்.


Click it and Unblock the Notifications








