மச்சம்யா உனக்கு! அழகு தேவதையுடன் பைக்கில் வந்த இளைஞர்! கொஞ்சம் உத்து பாத்ததும் எல்லாரும் வாயை பொளந்துட்டாங்க!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் (Amitabh Bachchan), யாரென்றே தெரியாத ஒருவரின் ராயல் என்பீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan) பைக்கில், லிஃப்ட் (Lift) கேட்டு சென்ற புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் தற்போது வைரல் (Viral) ஆகி வருகின்றன.
சினிமா ஷூட்டிங்கிற்கு அவசரமாக சென்று கொண்டிருந்த சமயத்தில், டிராஃபிக் ஜாம் (Traffic Jam) ஏற்பட்டு, அதில் சிக்கி கொண்டதால், அமிதாப் பச்சன் பைக்கில் லிஃப்ட் கேட்டு சென்றுள்ளார். இந்த ஆச்சரியத்தில் இருந்தே ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில், அடுத்த ஆச்சரியம் அரங்கேறியுள்ளது.

பாலிவுட் நடிகைகளில் ஒருவரும், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் (Virat Kohli) மனைவியுமான அனுஷ்கா சர்மா (Anushka Sharma) தற்போது பைக்கில் பயணம் செய்துள்ளார். அவர் பயணம் செய்தது, பஜாஜ் பல்சர் 220 எஃப் (Bajaj Pulsar 220 F) பைக் ஆகும்.
இந்த சம்பவம் மும்பையில் (Mumbai) நடைபெற்றுள்ளது. சாலையில் மரம் விழுந்து, வழியில் தடை ஏற்பட்ட காரணத்தால்தான் அனுஷ்கா சர்மா பைக்கில் பயணம் செய்துள்ளார். அனுஷ்கா சர்மாவை பைக்கில் அழைத்து சென்ற அதிர்ஷ்டம், அவரது பாதுகாவலருக்கு கிடைத்துள்ளது. பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து, செல்ல வேண்டிய இடத்தை அனுஷ்கா சர்மா அடைந்துள்ளார்.
அனுஷ்கா சர்மா பைக்கில் பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில், அனுஷ்கா சர்மாவின் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover) கார் நின்று கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது.
இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், பைக்கில் பயணம் செய்த போது, அனுஷ்கா சர்மா மற்றும் அவரது பாதுகாவலர் என இருவருமே ஹெல்மெட் (Helmet) அணியவில்லை. அமிதாப் பச்சன் மற்றும் அவருக்கு லிஃப்ட் வழங்கிய நபரும் கூட ஹெல்மெட் அணியவில்லை என்பது உண்மையிலேயே வேதனையான விஷயம்.
அமிதாப் பச்சன் மற்றும் அனுஷ்கா சர்மா போன்றவர்கள், நாடு முழுவதும் அனைவராலும் அறியப்படும் பிரபலங்களாக உள்ளனர். அவர்கள் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகவும் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும்.
இதன் காரணமாக அவர்கள் இருவர் மீதும் காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஹெல்மெட் அணியாமல் டூவீலர்களில் பயணம் செய்த காரணத்திற்காக, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலை தளங்களிலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் தற்போது எழுந்து வருகின்றன.
இதற்கிடையே அனுஷ்கா சர்மா பைக்கில் வலம் வந்தபோது, பொதுமக்கள் பலர் அவரை பார்த்துள்ளனர். கொஞ்சம் உற்று நோக்கிய பிறகு, அனுஷ்கா சர்மா என்று தெரிந்ததும், அவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். உண்மையிலேயே பிரபலங்களை சாலையில் திடீரென காண்பது மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஒரு சேர ஏற்படுத்தும்தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிகப்பெரிய பிரபலங்கள், டூவீலர்களில் பயணம் செய்வது என்பது அவர்களின் எளிமை மற்றும் நேரம் தவறாமையை எடுத்து காட்டுகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் என்னதான் அவசரம் என்றாலும், ஹெல்மெட் அணிந்து பயணிப்பது நல்லது. குறிப்பாக திரையுலகினர். ஏனெனில் அவர்கள் என்ன செய்தாலும், அதை அப்படியே பின்பற்றுவதற்கு இந்தியாவில் மிகப்பெரிய கூட்டமே இருக்கிறது!


Click it and Unblock the Notifications