எந்தவொரு விமானிக்கும் சவாலான நேரம் அப்போதுதான் வரும்!! உயிரை விட்டவங்க தான் அதிகம்!

வானில் நாம் செலுத்தும் விமானங்கள் மட்டும் இருப்பதில்லை. பறவைகளும் அங்குதான் பறக்கின்றன. பறவைகளுக்கு பல ஆயிரம் அடி உயரத்தில் வேலி அமைப்பது எல்லாம் சாத்தியமற்றது. ஆதலால், விமானங்களுக்கு குறுக்கே பறவைகள் வருவதும், அவற்றில் சில பறவைகள் விமானத்தின் என்ஜினில் மாட்டி இறப்பதும் தவிர்க்க முடியாததாக உள்ளது.

பறவைகள் மட்டும்தான் பல்லாயிரக்கணக்கான அடி உயரத்தில் விமானத்தை பழுதாக்கக்கூடிய ஒரேயொரு காரணமா என கேட்டால், இல்லை. சில சமயங்களில், விமானத்தின் என்ஜின் கார்புரேட்டரில் அடிக்குற குளிர் காற்றினால் பனிக்கட்டி உருவாகுவதும் விமான விபத்துகளுக்கு காரணமாக அமைகின்றன. 1998இல் இருந்து 2007 வரையில் மட்டும் 212 விமான விபத்துகள் இந்த காரணத்தால் நிகழ்ந்துள்ளன.

any airplane can glide

இந்த புள்ளி விபரங்கள் யாவும் கூட்டாட்சி விமான நிர்வாகம் (FAA) கூறுபவை ஆகும். பணியாளர்களின் கவனக்குறைவினாலும் விமானங்கள் பாதி வழியில் சில சமயங்களில் பிரச்சனைகளை சந்திக்கின்றன. 1983இல் மத்திய கனடாவில் தொழிற்நுட்ப கோளாறினால் போதிய அளவிற்கு எரிபொருள் இல்லாமல் ஏர் கனடாவின் போயிங் 767 விமானம் புறப்பட்டது.

சுமார் 41,000 அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த போது எரிபொருள் தீர்ந்துப்போனதால், இரு இறக்கைகளிலும் இருந்த என்ஜின்கள் செயல்படாமல் போகின. இதனால் தரையை நோக்கி வினாடிக்கு 2,500 அடி வேகத்தில் விழுந்த விமானம் வெடித்து சிதறியது. விமானத்தினுள் இருந்த விமானிகள் இருவரும் உயிரிழந்தனர்.

any airplane can glide

கிட்டத்தட்ட 40 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விமானம் செயலிழந்து தரையை நோக்கி பாயும் சமயத்தில் விமானியால் எதுவும் செய்ய முடியாதா? என கேட்டால், எந்தவொரு விமானியும் அந்த சமயத்தில் விவேகமாக யோசிக்க ஆரம்பிப்பர். ஆனால், சில வினாடிகளில் விமானம் தரையில் விழுந்து விடுவதால், பெரும்பாலான விமானிகளால் எதுவும் செய்ய முடிவதில்லை.

ஆனால், சில விமானிகள் பெரிய விபத்தில் இருந்து பயணிகளை காப்பாற்றி உள்ளனர். விமானம் பல்லாயிரக்கணக்கான அடி உயரத்தில் இருந்து சரியாக 90 டிகிரியில் கீழே விழாது. சில கிமீ தொலைவிற்கு முன்னோக்கி சென்ற பின்பே கீழே விழும். அதுவரையில் காற்றில் சறுக்கியப்படி அந்த விமானம் செல்லும். இதனை ஆங்கிலத்தில் 'க்ளைட்' என்கின்றனர்.

any airplane can glide

அந்த குறுகிய நேரத்தை, பயன்படுத்தி 2009இல் அமெரிக்காவில் ஒரு விமானி, பறவையால் செயலிழந்து போன விமானத்தை அருகில் இருந்த ஆற்றில் இறக்கி பயணிகளை காப்பாற்றினார். க்ளைட் தூரம் ஆனது விமானம் பறக்கும் உயரத்தை பொறுத்தது என்றாலும், ஒரு சில விமானங்கள் அனைத்து என்ஜின்களும் பழுதான போதிலும் 100 மைல்கள் (161கிமீ) தொலைவிற்கு செல்லக்கூடியவையாக உள்ளன.

ஆனால், இவ்வளவு தொலைவிற்கு செல்வதற்கு, விமானம் குறைந்தது 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க வேண்டியதாக உள்ளது. 161கிமீ என்பது போதுமானதாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால், அந்த 161கிமீ தொலைவை சில நிமிடங்களில் விமானம் கடந்துவிடும். ஆதலால், 2009இல் அமெரிக்காவில் நடந்த விபத்தில் பழுதான விமானத்தை ஆற்றில் இறக்கி புத்திச்சாலிதனமாக செயல்பட்ட விமானியை தான் பாராட்டியாக வேண்டும்.

any airplane can glide

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பு முழுவதும், வானில் இருந்து பல ஆயிர அடி உயரத்தில் இருந்து விமானம் கீழே விழுவதை பற்றி மட்டும்தான் சொல்லியிருக்கிறோம். ஆனால் உண்மையில், இவ்வாறு நிகழ்வது தற்போதைய மாடர்ன் காலக்கட்டத்தில் அரிதிலும் அரிதாக மாறிவிட்டது. ஏனெனில், அந்த அளவிற்கு நாம் தொழிற்நுட்பங்களில் முன்னேற்றம் கண்டுள்ளோம்.

More from DriveSpark

Article Published On: Sunday, November 12, 2023, 8:30 [IST]
English summary
Any air plane can glide if need arises check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X