வெறும் 50 கோடி போட்டு 875 கோடி எடுத்துட்டாங்க! ஊரையே மிரள விடும் விலையில் புது கார் வாங்கிய பிரபல நடிகர் தம்பி

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport). இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். தற்போதைய நிலையில் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) இந்த கார் கிடைக்கிறது. இதில், ஒன்று பெட்ரோல் வேரியண்ட் ஆகும். மற்றொன்று டீசல் வேரியண்ட். ஆனால் இந்த 2 வேரியண்ட்களின் விலையும் சரியாக 1.40 கோடி ரூபாய்தான். இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 1.70 கோடி ரூபாய் வரும். இவ்வளவு விலை உயர்ந்த காரை பிரபல நடிகர் ஒருவர் தற்போது வாங்கியுள்ளார். அவர் பிரபல பாலிவுட் நடிகரான அப்ரசக்தி குரானா (Aparshakti Khurana) ஆவார். இவர் தற்போது வரை சுமார் 20 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Aparshakti Khurana Buys Range Rover Sport

இதில் அவருக்கு அதிக பெயரை சம்பாதித்து கொடுத்தது ஸ்ட்ரீ (Stree) திரைப்படம்தான். இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018ம் ஆண்டு வெளியானது. சுமார் 25 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஸனில் (Box Office Collection), சுமார் 180 கோடி ரூபாயை வாரி குவித்தது.

இதை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் 2ம் பாகம் ஸ்ட்ரீ 2 (Stree 2) என்ற பெயரில் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 50-120 கோடி ரூபாய் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலென்ஸன் சுமார் 875 கோடி ரூபாய் ஆகும்.

Aparshakti Khurana s Range Rover Sport

இதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அப்ரசக்தி குரானா தற்போது ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் சொகுசு எஸ்யூவி காரை வாங்கியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இந்த காரில் அவர் வலம் வந்தபோது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது.

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், அப்ரசக்தி குரானாவின் வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரையும் நம்மால் பார்க்க முடிகிறது. இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட்டில் 3.0 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் இன்ஜினும், டீசல் வேரியண்ட்டில் 3.0 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் இன்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த 2 இன்ஜின்கள் உடனும், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக காரின் 4 சக்கரங்களுக்கும் இன்ஜின் உருவாக்கும் சக்தி செலுத்தப்படுகிறது. இது மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார் என்பதால், அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சம் இல்லை.

13.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 13.7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சன்ரூஃப், மசாஜ் வசதியுடன் கூடிய முன் இருக்கைகள், 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே போன்றவை எல்லாம் இந்த காரின் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிரபல நடிகரான ஆயுஷ்மான் குரானாவின் (Ayushmann Khurrana) தம்பிதான் அப்ரசக்தி குரானா. இவர் தற்போது வாங்கியிருப்பது ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் பெட்ரோல் வேரியண்ட் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இனி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அப்ரசக்தி குரானா இந்த காரில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 30, 2025, 12:02 [IST]
English summary
Aparshakti khurana buys range rover sport viral video all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+