டயருக்கு இப்படி ஒரு சேலஞ்ஜா! 30 நாட்களுக்குள் நிரூபிச்சா பணம் மொத்தமும் வாபஸ்... அப்பல்லோ அதிரடி!

டயர் உற்பத்தி நிறுவனமான அப்பல்லோ அதன் புதிய டயருக்கு இதுவரை எந்தவொரு டயர் நிறுவனமும் அறிவிக்காத ஓர் சவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

டயருக்கு இப்படி ஒரு சேலஞ்ஜா! 30 நாளுக்குள்ள நிரூபிச்சா பணம் மொத்தமும் திருப்பி தரப்படும்... அப்பல்லோ அதிரடி!

வாகனங்களுக்கான டயர் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் அப்பல்லோ நிறுவனம், அதன் தயாரிப்புகளின் பக்கம் மக்களைக் கவரும் விதமாக ஓர் தரமான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக, தனது தயாரிப்பின் மீது நம்பகத் தன்மையை ஏற்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

டயருக்கு இப்படி ஒரு சேலஞ்ஜா! 30 நாளுக்குள்ள நிரூபிச்சா பணம் மொத்தமும் திருப்பி தரப்படும்... அப்பல்லோ அதிரடி!

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பானது அதன் ஆல்ஃபா மாடல் டயர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆம், இந்த டயரையே மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் விதமாக 'ஆல்பா சவாலை சோதிக்கவும்' என்ற சிறப்பு திட்டத்தை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

டயருக்கு இப்படி ஒரு சேலஞ்ஜா! 30 நாளுக்குள்ள நிரூபிச்சா பணம் மொத்தமும் திருப்பி தரப்படும்... அப்பல்லோ அதிரடி!

இந்த சிறப்பு திட்டத்தின்கீழ், அப்பல்லோவின் ஆல்ஃபா டயரை வாங்கும் ஓர் நபர், அந்த டயரில் குறையிருப்பதைக் கண்டாலோ அல்லது அந்த டயரின் செயல்பாட்டில் திருப்தி இல்லையென்றாலோ செலுத்திய பணத்தை மொத்தமாக திருப்பிப் பெற்றுக் கொள்ளலாம் என கூறியிருக்கின்றது.

டயருக்கு இப்படி ஒரு சேலஞ்ஜா! 30 நாளுக்குள்ள நிரூபிச்சா பணம் மொத்தமும் திருப்பி தரப்படும்... அப்பல்லோ அதிரடி!

ஆல்ஃபா டயரை வாங்கிய 30 நாட்களுக்குள்ளாகவே இதை நிரூபிக்க வேண்டும். அப்படியானால் மட்டுமே அப்பல்லோவின் இந்த சலுகையைப் பெற முடியும் என்ற நிபந்தனையை அந்நிறுவனம் முன் வைத்திருக்கின்றது.

டயருக்கு இப்படி ஒரு சேலஞ்ஜா! 30 நாளுக்குள்ள நிரூபிச்சா பணம் மொத்தமும் திருப்பி தரப்படும்... அப்பல்லோ அதிரடி!

இந்த சிறப்பு திட்டம்குறித்து அப்பல்லோ டயர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின், ஆசியா பசிபிக், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவின் ஆகிய நாடுகளுக்கான தலைவர் சதீஷ் ஷர்மா கூறியதாவது, "அப்பல்லோ ஆல்ஃபாவை நாங்கள் வெற்றிகரமான தயாரிப்பாக இருக்கும் என நம்புகின்றோம். பல சோதனையின் அடிப்படையில் இதை ஏற்றுக்கொண்டோம். இதற்கான ஆய்வை இந்தியா மட்டுமில்லாத ஐரோப்பா போன்ற நாடுகளிலும் மேற்கொண்டோம்" என்றார்.

டயருக்கு இப்படி ஒரு சேலஞ்ஜா! 30 நாளுக்குள்ள நிரூபிச்சா பணம் மொத்தமும் திருப்பி தரப்படும்... அப்பல்லோ அதிரடி!

தொடர்ந்து பேசிய அவர், "பல்வேறு பரிசோதனைகளின் அடிப்படையிலேயே அந்த டயர் மீதிருக்கும் அபரீதமான நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக 'ஆல்ஃபா சவாலை சோதிக்கவும்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றோம்" என தெரிவித்தார்.

டயருக்கு இப்படி ஒரு சேலஞ்ஜா! 30 நாளுக்குள்ள நிரூபிச்சா பணம் மொத்தமும் திருப்பி தரப்படும்... அப்பல்லோ அதிரடி!

வாடிக்கையாளர் யார் வேண்டுமானால் இந்த போட்டியில் பங்கேற்கலாம். இப்போட்டியில் பங்கேற்போர் அப்பல்லோ ஆல்ஃபாவை விரும்பவில்லை என்றாலோ, அதன் பயன்பாட்டில் சிக்கல் இருந்தாலோ 30 நாட்களுக்குள் அவருடைய பணம் திரும்பி வழங்கப்பட இருக்கின்றது.

டயருக்கு இப்படி ஒரு சேலஞ்ஜா! 30 நாளுக்குள்ள நிரூபிச்சா பணம் மொத்தமும் திருப்பி தரப்படும்... அப்பல்லோ அதிரடி!

இதுமட்டுமின்றி, டயருக்கு இரண்டு ஆண்டுகள் வாரண்டியையும் அப்பல்லோ வழங்க இருக்கின்றது. புதிய டயரின் உற்பத்திக்கு புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அப்பல்லோ தெரிவித்துள்ளது. இதனால், பிற டயர்களைக் காட்டிலும் அது அதிக கிரிப் மற்றும் பாதுகாப்பை வழங்கும் திறனைப் பெற்றிருக்கின்றது.

டயருக்கு இப்படி ஒரு சேலஞ்ஜா! 30 நாளுக்குள்ள நிரூபிச்சா பணம் மொத்தமும் திருப்பி தரப்படும்... அப்பல்லோ அதிரடி!

குறிப்பாக, வழு வழுப்பான சாலைகளில் அதிக பிடிமானத்தை அப்பல்லோ ஆல்ஃபா வழங்கும் என கூறப்படுகின்றது. இதற்கேற்ப டிசைன் மற்றும் சிறப்பம்சங்களுடனே ஆல்ஃபா உருவாக்கப்பட்டிருக்கின்றது. இது மட்டுமின்றி பல்வேறு சிறப்பு வசதிகளும் இந்த டயரில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டயருக்கு இப்படி ஒரு சேலஞ்ஜா! 30 நாளுக்குள்ள நிரூபிச்சா பணம் மொத்தமும் திருப்பி தரப்படும்... அப்பல்லோ அதிரடி!

கொரோனா எதிரொலியால் பல்வேறு சிக்கலில் சிக்கி தவித்து வரும் நிறுவனங்களில் அப்பல்லோ நிறுவனமும் ஒன்று. இந்த நிலையிலும் மக்களைக் கவரும் விதமாக புதிய திட்டத்தை அது அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த திட்டத்தின்மூலமும், புதிய ஆல்ஃபாவில் இடம்பெற்றிருக்கும் வசதியும் அந்நிறுவனத்தை பழைய மீட்டுச் செல்லும் மிக உறுதியாக நம்பிக்கைத் தெரிவித்திருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Apollo Introduces 'Test The Alpha Challenge' For Alpha Tyres. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X