ஆப்பிள் கண்டுப்பிடிச்ச இந்த சாதனம் மட்டும் உங்க காரில் இருந்தால்...!! நம்ம ஊர் போலீஸாரும் இதை செய்யணும்!
அமெரிக்காவில் வாஷிங்டனில் அதிகரித்துவரும் கார் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீஸார் ஓர் விசித்திரமான முடிவை எடுத்துள்ளனர். எந்த மாதிரியான முயற்சி அது? வொர்க் அவுட் ஆகுமா அது? அதை ஏன் நம் இந்தியாவிலும் போலீஸார் செயல்படுத்தக் கூடாது? என்ற கேள்விகளுக்கான பதில்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
கார் திருட்டு, எந்தவொரு நாட்டிலும் போலீஸாருக்கு தலைவலியாக இருக்கக்கூடிய விஷயம். அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி போலீஸாருக்கு இன்னும் கூடுதலாகவே தலைவலியாக உள்ளது. உலகின் செல்வ செழிப்பான நகரங்களுள் ஒன்றாக விளங்குவதால், இங்குள்ளவர் பயன்படுத்துவது எல்லாம் விலையுயர்ந்த சொகுசு கார்களும், ஸ்போர்ட்ஸ் கார்களும் தான்.

இதனால், வாஷிங்டன் டிசி போலீஸாருக்கு கார் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்ததை அடுத்து, மேலிடத்தில் இருந்து அழுத்தம் அதிகமாகியது. இருப்பினும், அங்கு இன்னும் சில கார் திருட்டு வழக்குகளில் முடிவு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, கார் திருட்டு சம்பவங்களை தடுக்க வாஷிங்டன் டிசி போலீஸார் ஓர் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர்.
அதுதான் கார்களில் ஆப்பிள் ஏர் டேக் தொழிற்நுட்பத்தை வழங்குவது ஆகும். ஆப்பிள் ஏர் டேக் (Apple Air Tag), கார் திருடு போவதை தடுப்பதற்காக பிரபலமான ஆப்பிள் நிறுவனத்தால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள தொழிற்நுட்பம் ஆகும். வாஷிங்டன் டிசி-இல் கார் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் வசிக்கும் கார் ஓனர்களுக்கு ஆப்பிள் ஏர் டேக் கருவியை இலவசமாக போலீஸார் வழங்கியுள்ளனர்.

ஆப்பிள் ஏர் டேக் ஆனது ஓர் சிறிய அளவிலான சாதனம் ஆகும். இது ப்ளூடூத்தின் மூலம் இயங்கக்கூடியது. இதனை காரில் பொருத்திவிட்டால், உங்களது கார் எந்த இடத்தில் உள்ளது என்பதை ப்ளூடூத் மூலமாக, வரைப்படத்தின் வாயிலாக மொபைல் போனில் காட்டும். வாகனத்தை டிராக் செய்வதற்கு மார்க்கெட்டில் பல்வேறு சாதனங்கள் உள்ளன. ஆனால், அவை எல்லாவற்றையும் விடவும் ஆப்பிள் ஏர் டேக் குறைந்த விலையில் கிடைக்கிறது.
ஆப்பிள் ஏர் டேக்கை போலீஸாராலும் எளிதாக டிராக் செய்ய முடிவதன் காரணமாகவே, இந்த தொழிற்நுட்ப கண்டுப்பிடிப்பை இலவசமாக மக்களுக்கு கொடுத்து வாஷிங்டன் டிசி போலீஸார் ஊக்குவிக்கின்றனர். கார் திருட்டு புகார்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகளில் வசிப்போர் தங்களது கார் மற்றும் அதற்கான முறையான ஆவணங்களுடன் வந்து ஆப்பிள் ஏர் டேக்கை இலவசமாக பெற்றுச் செல்லலாம் என வாஷிங்டன் டிசி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கார் உரிம ஆவணங்கள் மட்டுமின்றி, அடையாள முகவரி தொடர்பான ஆவணங்களையும் கார் உரிமையாளர்கள் உடன் எடுத்துவரும்படி போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆப்பிள் ஏர் டேக், இந்த தொழிற்நுட்பத்தை நம் நாட்டில் பலர் இதுவரையில் கேள்விப்பட்டு இருக்க மாட்டீர்கள். ஆனால், அமெரிக்காவில் இந்த ஆப்பிள் சாதனம் பலரால் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
கார் திருட்டை தடுக்க உரிமையாளர்களுக்கு ஆப்பிள் ஏர் டேக்கை அமெரிக்காவில் வழங்கி இருக்கும் முதல் நகர போலீஸார் வாஷிங்டன் டிசி போலீஸார் கிடையாது. ஏனெனில், ஏற்கனவே, நியூயார்க் சிட்டி போலீஸார் கடந்த ஏப்ரலில் இந்த முயற்சியை எடுத்து இருந்தனர். நியூயார்க் சிட்டி போலீஸார் சார்பில் சுமார் 500 கார் உரிமையாளர்களுக்கு ஆப்பிள் ஏர் டேக் வழங்கப்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் திருட்டுக்கு என்று உலகளவில் மிக பெரிய நெட்வொர்க் செயல்படுகிறது. அப்படியிருக்கையில், அவர்களிடம் இருந்து காரை பாதுகாக்க வேண்டுமென்றால், இவ்வாறான அட்வான்ஸ்டு தொழிற்நுட்பங்களை பயன்படுத்துவது அவசியமாகிறது. ஆனால், இதனை போலீஸாரே மக்களுக்கு இலவசமாக வழங்கி இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









