ஆண்ட்ராய்டு ஆட்டோ எல்லாம் ஓரம்போ! ஆப்பிள் கார்பிளேவில் இவ்வளவு அப்டேட் வருதா?
வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தற்போது தங்கள் வாகனங்களில் கனெக்டிவிட்டி அம்சங்களை மிக முக்கியமான அம்சமாக பார்க்கிறது. இதனால் பெரும்பாலான வாகனங்களில் தற்போது கனெக்டிவிட்டி அம்சங்கள் வந்துவிட்டன. டூவீலர் முதல் கார் வரை தற்போது கனெக்டிவிட்டி அம்சம் இல்லை என்றால் அந்த வாகனத்தை வாங்கவே வாடிக்கையாளர்கள் யோசித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது கார் பிளே தயாரிப்பில் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட் மற்றும் புதிய அம்சங்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இன்று வாகனங்களில் உள்ள கனெக்டிவிட்டி அம்சங்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகிய இரண்டு அம்சங்களும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. வாகன ஓட்டிகள் தங்கள் செல்போன்களை இந்த அம்சங்கள் மூலம் வாகனத்துடன் இணைக்கும் ஆப்ஷனை பெற முடிவது காரணமாக இந்த அம்சங்கள் பிரபலமாகி வருகின்றன.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது கார்பிளே தயாரிப்பில் சில முக்கிய மாற்றங்களை செய்து புதிய அப்டேட்டை வெளியிட திட்டமிட்டு வருகிறது. இதில் ஏற்கனவே இருக்கும் அம்சங்கள் போக கூடுதலாக சில அம்சங்களும் இணைய உள்ளன. அதன்படி கிளைமேட் கண்ட்ரோல், அடாஸ் தொழில்நுட்பம் ஆகிய அம்சங்களும் இந்த கார் பிளே தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்படுகிறது.
தற்போது உள்ள கார்பிளே அம்சம் என்பது வாகனங்களில் உள்ள இன்போடெயின்மென்ட் டிஸ்ப்ளேயில் மட்டுமே செயல்படும் அம்சமாக இருக்கிறது. புதிதாக வரப்போகும் அப்டேட்டில் இனி டிரைவர் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளேயிலும் ஆப்பிள் கார் பிளே அம்சம் முக்கிய பங்கை வகிக்க போகிறது. அதன்படி டிரைவர் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளேவையும் இனி கஸ்டமைசேஷன் செய்யும் ஆப்ஷனும் வழங்கப்பட உள்ளன.

இதில் டிரைவ் மோடுகள் டெம்பரேச்சர் உள்ளிட்ட அம்சங்களும் டிஸ்பிளே செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுபோக பல முக்கியமான நோட்டிபிகேஷன்களை நேரடியாக டிரைவர் இன்ஸ்ட்ரூமெண்ட் கண்ட்ரோலில் டிஸ்ப்ளே செய்ய வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மூலம் வரும் தகவல்கள் எல்லாம் இந்த இடத்தில் நோட்டிஃபை செய்யப்படுகிறது.
இந்த புதிய தலைமுறை ஆப்பிள் கார்பிளே அம்சத்தில் ரிவர்ஸ் கேமராக்கள் இன்பிளினோ மீட்டர், ஆஃப்ரோடு உள்ளிட்ட பல்வேறு டிரைவ் தொடர்பான தகவல்கள் இடம்பெறும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல், ஹைபிரிட், எலெக்ட்ரிக் கார்களுக்கு தகுந்தார் போல் பெர்ஃபார்மென்சை இதில் டிஸ்ப்ளே செய்வதற்கான ஆப்ஷன் வழங்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனமாக இருந்தால் ரேஞ்ச் அருகில் உள்ள சார்ஜிங் ஸ்டேஷன் உள்ளிட்ட தகவல்கள் ஹோம் ஸ்க்ரீனிலேயே காட்டப்படும்.

கிளைமேட் கண்ட்ரோலை பொறுத்தவரை குறிப்பிட்ட வாகனங்களில் எத்தனை சீட்டுகள் உள்ளனஉ எத்தனை கிளைமேட் ஸோன் ஆப்ஷன்கள் அந்த காரில் இருக்கிறது என்ற தகவலையும் பெற்றுக் கொள்ள முடியும். இதுபோக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூடுதலாக பட்டன்களை பொருத்தி சீட் ஹீட் ஆப்ஷனை இதன் மூலமே கண்ட்ரோல் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.
இவ்வளவு அப்டேட்களுடன் கூடிய ஆப்பிள் கார்ப்ளே இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகியுள்ள ஐஓஎஸ் 18 உடன் சேர்ந்து அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த அப்டேட் செய்யப்பட்ட கார்பிளே தொழில்நுட்பத்தை போர்ஷே மற்றும் ஆகிய நிறுவனங்கள் தங்கள் வாகனங்களில் உட்பகுத்த ஆப்பிள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதனால் இந்த இரு நிறுவனங்களும் இனி தயாரிக்கப் போகும் புதிய கார்களில் அப்டேட் செய்யப்பட்ட ஆப்பிள் கார்ப்ளே அம்சங்களை இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவிலும் பல முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் இந்த ஆப்பிள் கார்பிளே அம்சத்தை தங்கள் வாகனங்களில் இன்ஸ்டால் செய்ய திட்டமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அடுத்த ஆண்டு இந்த அப்டேட்கள் எல்லாம் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது.
ஆப்பிள் கார்ப்பிளே தொழில்நுட்பத்தை பொறுத்தவரை வெறும் கார்களுக்கு மட்டுமல்லாமல் டூவீலர்களுக்கும் தங்கள் தொழில்நுட்பத்தை தயாரிக்கிறது. இதில் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், நேவிகேஷன், மியூசிக் மற்றும் கால் கண்ட்ரோல் மெசேஜ் அலாட் ஆகிய அம்சங்களும் இடம்பெறுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர் தகவல்கள் எல்லாம் இதன் அறிமுகத்தின் போது தெரியவரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆப்பிள் பயன்பாட்டாளர்கள் வாகனங்களில் செல்லும்போது தங்கள் செல்போனை வாகனத்துடன் இணைத்து பல்வேறு தகவல்களை வாகனத்திலேயே பெறுவதற்கு இந்த ஆப்பிள் கார் பிளே உதவியாக இருக்கிறது. இதில் அப்டேட்டை நிறுவனம் கொண்டு வருவது ஆப்பிள் வாடிக்கையாளர்களை குஷி படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இந்த அப்டேட்டுக்காக ஏகப்பட்ட பேர் வெயிட்டிங்.


Click it and Unblock the Notifications









