கார் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துக்கான ஆப்பிளின் புதிய ஐஓஎஸ்

கார் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைந்து செயல்படக்கூடிய புதிய ஐஓஎஸ் சாப்ட்வேரை ஆப்பிள் அறிமுகப்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவில் நடந்து வரும் ஆப்பிளின் அப்ளிகேஷன் டெவலப்பர் மாநாட்டில் இந்த புதிய சாப்ட்வேர் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன.

இப்போது கார்களில் இன்போடெயின்மென்ட் சாதனம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. பல வசதிகளை ஒருங்கிணைத்து தரும் இன்போடெயின்மென்ட் சாதனத்தில் மேலும் பல வசதிகளை பெறும் வகையில் புதிய ஐஓஎஸ்-7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் "iOS in the car" என்ற புதிய அப்ளிகேஷனை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது.

எல்லாமும் கிடைக்கும்

எல்லாமும் கிடைக்கும்

இந்த புதிய சாப்ட்வேரை காரில் இருக்கும் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைத்துக் கொண்டால், மியூசிக் சிஸ்டம், நேவிகேஷன் சிஸ்டத்தை எளிதாக வாய்மொழி உத்தரவு மூலம் கட்டுப்படுத்த முடியும். மேலும், போனிலிருந்து அழைப்பதற்கும், துண்டிப்பதற்கும் எளிதாக அமையும். இதுதவிர, ஏராளமான வசதிகளை இந்த புதிய சாப்ட்வேர் மூலம் பெற முடியும்.

என்ன வேணும்...

என்ன வேணும்...

ஐஓஎஸ் இன் தி கார் சாப்ட்வேர் மூலமாக பயணத்திற்கான தோராய நேர மதிப்பீடு, போக்குவரத்து நிலவரங்களையும் அறிந்துகொள்ள முடியும்.

இதுவும் புதுசு

இதுவும் புதுசு

ஆப்பிளின் Siri Eyes Free அப்ளிகேஷன் மூலம் போன் அழைப்புகளை செய்வதோடு, மிஸ்டு கால் நம்பருக்கு போன் செய்ய முடியும்.

ஐடியூன்

ஐடியூன்

ஐடியூன், உள்ளூர் ரேடியோ, ஆடியோ புத்தகங்கள் மற்றும் அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்வது உள்ளிட்ட அனைத்தையும் வாய்மொழி உத்தரவு மூலம் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி செய்யலாம்.

அட்ரஸை சொல்லுங்க

அட்ரஸை சொல்லுங்க

வாய்மொழி உத்தரவின் மூலம் வெறும் முகவரியை கூறினாலே, நேவிகேஷன் சிஸ்டம் அதற்கு தகுந்தாற்போல் வழிகாட்டும். மேலும், போனில் இருக்கும் குறுந்தகவலில் வரும் முகவரியை வைத்தே நேவிகேஷன் சிஸ்டத்தில் மாறுதல்களை செய்ய முடியும்.

எஸ்எம்எஸ் அனுப்பலாம்

எஸ்எம்எஸ் அனுப்பலாம்

சிரி அப்ளிகேஷன் மூலம் குறுந்தகவலையும் வாய்மொழி உத்தரவின் மூலம் அனுப்ப முடியும்.

அடுத்த ஆண்டு முதல்...

அடுத்த ஆண்டு முதல்...

அடுத்த ஆண்டு முதல் ஹோண்டா, பென்ஸ், நிசான், ஃபெராரி, செவர்லே, இன்ஃபினிட்டி, கியா, ஹூண்டாய், வால்வோ, அக்குரா ஆகிய கார் நிறுவனங்கள் இந்த புதிய சாப்ட்வேரை சப்போர்ட் செய்யும் விதத்தில் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தை பயன்படுத்த துவங்கும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 12, 2013, 13:46 [IST]
English summary
The iPhone maker for long has been pushing for its mobile OS, iOS, to be integrated into in-car infotainment systems. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+